பாரதிதாசன்: BHARATHIDASAN HISTORY IN TAMIL: “தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற தேன் சுவை சொட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர், ‘பாவேந்தர் பாரதிதாசன்’ அவர்கள். பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் அவர்கள், ‘புரட்சிக்கவி’ என்றும், ‘பாவேந்தர்’ என்றும் அழைக்கப்பட்டார்.
தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர், பாரதிதாசன் அவர்கள். தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி, திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் என்று சொன்னால் அது மிகையாகாது.
தனது படைப்புகளுக்காக ‘சாஹித்ய அகாடமி விருது’ பெற்ற பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ்மொழியில் இன்றளவும் நிலைத்துநிற்கும் அவரது தலைச்சிறந்த படைப்புகள் பல.
பிறப்பு:
பாரதிதாசன்: BHARATHIDASAN HISTORY IN TAMIL:பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், புதுவையில், 1891 – ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி (புதன்) இரவு பத்தேகால் மணிக்கு புதுவையில் வணிகராக இருந்த கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.
அவரது தந்தை, அவ்வூரில் பெரிய வணிகராக இருந்தார். பாரதிதாசன் அவர்களின் இயற்பெயர் சுப்புரத்தினம். அவரது தந்தையின் பெயரின் முதல் பாதியை, தன்னுடைய பெயரில் இணைத்து ‘கனகசுப்புரத்தினம்’ என்று அழைக்கப்பட்டார். உடன்பிறந்தோர் தமையன் சுப்புராயன். தமக்கை சிவகாமசுந்தரி. தங்கை இராசாம்பாள்.
கல்வி:
பாரதிதாசன்: BHARATHIDASAN HISTORY IN TAMIL:பாரதிதாசன் அவர்கள், தனது இளம் வயதிலிருந்தே தமிழ் மொழி மீது அதீத பற்றுடையவராகத் திகழ்ந்தார். இருப்பினும், புதுவையில் பிரெஞ்சுகாரர்களின் ஆதிக்கம் இருந்ததால், அவர் ஒரு பிரெஞ்சு பள்ளியிலே சேர்ந்தார்.
அவர் தனது தொடக்கக் கல்வியை, ஆசிரியர் திருப்புளிசாமி அய்யாவிடம் கற்றார். அவர் புகழ்பெற்ற அறிஞர்களின் மேற்பார்வையில் தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்றார்.
பின்னர், தமிழ் பயிலும் பள்ளியில் சேர அவருக்கு வாய்ப்பு கிடைத்ததால், அங்கு சேர்ந்து அவருக்கு விருப்பமானத் தமிழ் மொழியில் பாடங்களைக் கற்றார். சிறு வயதிலேயே பாடல் புனையும் ஆற்றல் பெற்றார். பாட்டிசைப்பதிலும் நடிப்பதிலும் ஊரில் நற்பெயர் பெற்றார். பத்தாம் அகவையிலேயே சுப்புரத்தினத்தைப் பெற்றதால் புகழ் பெற்றது புதுவை.
இசையுணர்வும் நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி அளிக்கத் தலைப்பட்டன. சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்ளை அழகாகச் சுவையுடன் எழுதித் தமது தோழர்கட்குப் பாடிக் காட்டுவார்.பள்ளிப்படிப்பை நன்கு கற்றுத் தேர்ந்த அவர், தனது பதினாறாவது வயதில், புதுவையில் உள்ள கல்வே கல்லூரியில் சேர்ந்து, தமிழ் மொழியின் மீது அவர் வைத்திருந்த பற்றினையும், அவரது தமிழ்ப் புலமையை விரிவுப்படுத்தினார்.
தமிழறிவு நிறைந்தவராகவும், அவரது விடா முயற்சியாலும், தேர்வில் முழு கவனம் செலுத்தியதால், மூன்றாண்டுகள் பயிலக்கூடிய இளங்கலைப் பட்டத்தை, இரண்டு ஆண்டுகளிலேயே முடித்து கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்ச்சிப் பெற்றார்.
1908 ஆண்டில் புதுவை அருகில் உள்ள சாரம் முதுபெரும் புலவர் (மகா வித்துவான்) பு.அ. பெரியசாமியிடமும் பின்னர் பெரும் புலவர் பங்காரு பத்தரிடமும் தமிழ் இலக்கண இலக்கியங்களையும் சித்தாந்த வேதாந்த பாடங்களையும் கசடறக் கற்றார். மாநிலத்திலேயே முதல் மாணவராகச் சிறப்புற்றார்.
ஆசிரியர் பணி:
TNPSC NOTES BHARATHIDASAN TAMIL PDF:1909 – கல்வி அதிகாரியார் உதவியால் காரைக்கால் சார்ந்த நிரவியில் ஆசிரியப் பணி ஏற்றார். மிகச்சிறிய வயதிலேயே தமிழ் புலமை அவரிடம் இருந்ததால், கல்லூரிப் படிப்பு முடிந்தவுடனே அவர், 1919ல் காரைக்காலைச் சேர்ந்த அரசினர் கல்லூரித் தமிழாசிரியாராகப் பதவியேற்றார்.அப்போது பிரெஞ்சு அரசுக்கு எதிராகச் செயல்பட்டார் என்று குற்றம் சாட்டி ஒன்றேகால் ஆண்டு சிறைபிடித்த அரசு தவறுணர்ந்து விடுதலை செய்தது. வேலை நீக்க வழக்கில் புலவர் வென்று மீண்டும் பணியில் சேர்தல்.
1918 – பாரதியாருடன் நெருங்கிப் பழகிய பழக்கத்தால் சாதி, மதம், கருதாத தெளிந்த உறுதியான கருத்துகளால் ஈர்ப்புற்றுப் புலமைச் செருக்கும் மிடுக்கும் மிகுந்த நடையில் எழுதும் தேசிய தெய்வப் பாடல்களைப் பழகு தமிழில் எழுதுதல்.
புதுவை, தமிழக ஏடுகளில் புதுவை கே.எசு.ஆர்., கண்டெழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், கே.எசு. பாரதிதாசன் என்ற பெயர்களில் பாடல், கட்டுரை, கதை மடல்கள் எழுதுதல். 10 ஆண்டுக்காலம் பாரதியாருக்கு உற்றுழி உதவியும் உறு பொறுள் கொடுத்தும் தோழனாய் இருந்தார்.
இல்லற வாழ்க்கை:
TNPSC NOTES BHARATHIDASAN TAMIL PDF: பாரதிதாசன் அவர்கள், தமிழாசிரியாராகப் பதவியேற்ற அடுத்த ஆண்டிலே அதாவது 1920 ஆம் ஆண்டில் புவனகிரி பெருமாத்தூர் பரதேசியார் மகள் பழநி அம்மையார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.அவர்கள் இருவருக்கும் செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி 1921 ஆம் ஆண்டில் தலைமகள் சரசுவதி பிறந்தார். இவருக்கு பிறகு நவம்பர் மாதம் 3 ஆம் தேதி, 1928 ஆம் ஆண்டில் மன்னர்மன்னன் என்ற மகன் பிறந்தான். அதன் பிறகு, வசந்தா மற்றும் ரமணி என்ற மகள்களும் பிறந்தனர்.
1922 ஆம் ஆண்டு கே.சு. பாரதிதாசன் என்ற புனைப்பெயரைத் தொடர்ந்து பயன்படுத்தி, தேச சேவகன் “துய்ப்ளேச்சு”, புதுவை கலைமகள், தேசோபகாரி, தேச பக்தன், ஆனந்த போதினி, சுதேசமித்திரன் இதழ்களில் தொடர்ந்து பாடல், கட்டுரை, கதைகள் எழுதி வந்தார்.
பாரதியார் சந்திப்பு:
TNPSC NOTES BHARATHIDASAN TAMIL PDF: தமிழ்மொழி மீது பற்றுக் கொண்டவராக இருந்த பாரதிதாசன் அவர்கள், அவரது மானசீக குருவாக சுப்ரமணிய பாரதியாரைக் கருதினார். அவரது பாடலைத் தனது நண்பர் ஒருவரின் திருமணத்தில் விருத்துக்குப் பின் பாரதியாரின் நாட்டுப் பாடலைப் பாடினார்.பாரதியாரும் அவ்விருத்துக்கு வந்திருந்தார். ஆனால் கவிஞருக்கு அது தெரியாது. அப்பாடலே அவரை பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது. தன் நண்பர்கள் முன்னால் பாடு என்று பாரதி கூற பாரதிதாசன் “எங்கெங்குக் காணினும் சக்தியடா” என்று ஆரம்பித்து இரண்டு பாடலை பாடினார்.
இவரின் முதற் பாடல் பாரதியாராலேயே சிறீ சுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது என்றெழுதப்பட்டு சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பப்பட்டது.
புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில் “கண்டழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், பாரதிதாசன் என பல புனைப் பெயர்களில் எழுதி வந்தார்.
நண்பனின் திருமண நிகழ்வின் போது பாரதியாரை நேரில் சந்தித்த பாரதிதாசன், பாரதியிடமிருந்து பாராட்டுக்கள் பெற்றதோடு மட்டுமல்லாமல், அவரது நட்பும் கிடைத்தது அவருக்கு. அன்று முதல், அவர் தனது இயற்பெயரான கனகசுப்புரத்தினம் என்பதை ‘பாரதிதாசன்’ என்று மாற்றிக் கொண்டார்.
தொழில் வாழ்க்கை:
TNPSC NOTES BHARATHIDASAN TAMIL PDF: பாரதியாரிடம் நட்பு கொண்ட அன்று முதல், பாரதிதாசன் என்ற பெயரிலே அவர் தனது படைப்புகளை வெளியிட்டார். தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார்.மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார், அதன் காரணமாக கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தவர், தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.அச்சமயங்களில், சுதந்திரப் போராட்ட சூழல் நிலவியதாலும், அவர் திராவிட இயக்கத்தின் தீவிர தொண்டன் என்பதாலும், தந்தை பெரியார் மற்றும் பல அரசியல் தலைவர்களுடன் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டு பலமுறை சிறைக்குச் சென்றார்.அவரது இலக்கிய நடையைக் கண்டு வியந்த அன்றைய திரைப்படத் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் அவருக்கு வாய்ப்புகள் வழங்கியதால், அவர் திரைப்படங்களுக்கும் கதை-வசனம் எழுதியுள்ளார்.
பெருந்தலைவர்களான அண்ணாதுரை, மு. கருணாநிதி, மற்றும் எம்.ஜி. ராமச்சந்திரன் போன்றோர் அவருடைய படைப்புகளுக்காக அவரை ஊக்குவித்ததாலும், அவர் 1954ஆம் ஆண்டில் புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐந்து ஆண்டுகள் செம்மையாக செயல்புரிந்த அவர், 1960ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.
1910 – வ.உ.சி.யின் நாட்டு விடுதலை ஆர்வத்தால் கனிந்திருந்த புலவர் – பாரதியார், வ.வே.சு., பர்.வரதராசுலு, அரவிந்தர் போன்றோர்க்குப் புகலிடம் அளித்தல். தம் பெற்றோர்க்குத் தெரியாமல் மேல் துண்டில் வடித்த சோறு கொடுத்தல்.
ஓரோர் அமையங்களில் செலவுக்குப் பணம் தருதல். காவலர்களின் வேட்டையிலிருந்து தப்ப உதவல். பாரதியாரின் “இந்தியா” ஏட்டை மறைமுகமாகப் பதிப்பித்துத் தருதல். ஆசு ஆட்சித் தலைவரைச் (கலெக்டரைச்) சுட்டது (துப்பாக்கி) பாவேந்தர் அனுப்பியதே.
நாளிதழ் ஆசிரியர் பணி:
1930 டிசம்பர் 10 இல் புதுவை முரசு கிழமை ஏட்டின் ஆசிரியர் பொறுப்பேற்றார்.
படைப்புகள்:
TNPSC NOTES BHARATHIDASAN TAMIL PDF: எண்ணற்ற படைப்புகளை அவர் தமிழ்மொழிக்கு வழங்கி இருந்தாலும், சாதி மறுப்பு, கடவுள் எதிர்ப்பு போன்ற மூடநம்பிக்கைகளை மக்களின் மனதிலிருந்து அழிக்கும் விதமாகப் பல்வேறு படைப்புகளை வெளியிட்டார். அவரது மிகச்சிறந்த படைப்புகளில் சில:
‘பாண்டியன் பரிசு’, ‘எதிர்பாராத முத்தம்’, ‘குறிஞ்சித்திட்டு’, ‘குடும்ப விளக்கு’, ‘இருண்ட வீடு’, ‘அழகின் சிரிப்பு’, ‘தமிழ் இயக்கம்’, ‘இசையமுது’, ‘குயில்’, ‘தமிழச்சியின் கத்தி’, ‘பாண்டியன் பரிசு’, ‘பாரதிதாசன் ஆத்திசூடி’, ‘பெண்கள் விடுதலை’, ‘பிசிராந்தையார்’, ‘மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது’, ‘முல்லைக் காடு’, ‘கலை மன்றம்’, ‘விடுதலை வேட்கை’, மற்றும் பல.
பாரதிதாசன் எழுதிய புகழ் பெற்ற சில வரிகள் / BHARATHIDASAN QUOTES IN TAMIL-
புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட
- போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
- தமிழுக்கு அமுதென்று பேர் – அந்த
- தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்
பாரதிதாசனின் படைப்புகள்
- பாரதிதாசனின் கவிதைகள் (கவிதைத்தொகுப்பு)
- பாண்டியன் பரிசு (காப்பியம்)
- எதிர்பாராத முத்தம் (காப்பியம்)
- குறிஞ்சித்திட்டு (காப்பியம்)
- குடும்ப விளக்கு (கவிதை நூல்)
- இருண்ட வீடு (கவிதை நூல்)
- அழகின் சிரிப்பு (கவிதை நூல்)
- தமிழ் இயக்கம் (கவிதை நூல்)
- இசையமுது (கவிதை நூல்)
- அகத்தியன் விட்ட புதுக்கரடி
- பாரதிதாசன் பதிப்பகம் அமைதி
- செந்தமிழ் நிலையம்,இசையமுதம் (முதல் பாகம்)
- பாரதசக்தி நிலையம் (1944)
- இசையமுதம் (இரண்டாம் பாகம்)
- பாரதசக்தி நிலையம் (1952) இரணியன் அல்லது இணையற்ற வீரன் (நாடகம்)
- குடியரசுப் பதிப்பகம் (1939)
- இருண்ட வீடு,முத்தமிழ் நிலையம் இளைஞர் இலக்கியம்
- பாரி நிலையம் (1967) உரிமைக் கொண்டாட்டமா?
- குயில் (1948) எதிர்பாராத முத்தம்
- வானம்பாடி நூற்பதிப்புக் கழகம் (1941)
- எது பழிப்பு
- குயில் (1948) கடவுளைக் கண்டீர்!
- கண்ணகி புரட்சிக் காப்பியம்
- அன்பு நூலகம் (1962) கதர் ராட்டினப் பாட்டு
- காசி ஈ.லட்சுமண பிரசாத் (1930)
- கற்புக் காப்பியம்
- காதல் நினைவுகள்,செந்தமிழ் நிலையம் (1969)
- காதல் பாடல்கள்,பூம்புகார் பிரசுரம் (1977)
- காதலா – கடமையா?,பாரதிதாசன் பதிப்பகம் (1948)
- குடும்ப விளக்கு (ஒரு நாள் நிகழ்ச்சி) பாரதிதாசன் பதிப்பகம் (1942)
- குடும்ப விளக்கு (திருமணம்) பாரதிதாசன் பதிப்பகம் (1950)
- குடும்ப விளக்கு (மக்கட் பேறு) பாரதிதாசன் பதிப்பகம் (1950)
- குடும்ப விளக்கு (விருந்தோம்பல்)
- முல்லைப் பதிப்பகம் (1944)
- குடும்ப விளக்கு (முதியோர் காதல்)
- பாரதிதாசன் பதிப்பகம் (1950)
- குயில் பாடல்கள், பூம்புகார் பிரசுரம் (1977)
- குறிஞ்சித் திட்டு, பாரி நிலையம்
- சஞ்சீவி பர்வதத்தின் சாரல், பாரதிதாசன் பதிப்பகம் (1949)
- சேர தாண்டவம் (நாடகம்), பாரதிதாசன் பதிப்பகம் (1954)
- தமிழச்சியின் கத்தி, பாரதிதாசன் பதிப்பகம் (1949)
- தமிழியக்கம், செந்தமிழ் நிலையம் தாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாட்டு
- திராவிடர் புரட்சித் திருமணத் திட்டம்
- தேனருவி இசைப் பாடல்கள்
- பாரதிதாசன் பதிப்பகம் (1955)
- நல்ல தீர்ப்பு (நாடகம்), முல்லைப் பதிப்பகம் (1944)
- நீலவண்ணன் புறப்பாடு
- பாண்டியன் பரிசு
- முல்லைப் பதிப்பகம் (1943) பாரதிதாசன் ஆத்திசூடி
- பாரதிதாசன் கதைகள், முரசொலிப் பதிப்பகம் (1957)
- பாரதிதாசன் கவிதைகள், கடலூர் டி.எஸ்.குஞ்சிதம் (1938)
- பாரதிதாசன் கவிதைககள் (முதற்பாகம்)
- குடியரசுப் பதிப்பகம் (1944), பாரதிதாசன் கவிதைகள் (இரண்டாம் பாகம்)
- பாரதிதாசன் பதிப்பகம் (1952)
பாரதிதாசன் நாடகங்கள்-
பாரி நிலையம் (1959) பாரதிதாசன் பன்மணித் திரள்
- முத்தமிழ்ச் செல்வி அச்சகம் (1964)
- பிசிராந்தையார், பாரி நிலையம் (1967)
- புரட்சிக் கவி, துரைராசு வெளியீடு (1937)
- பெண்கள் விடுதலை
- பொங்கல் வாழ்த்துக் குவியல், பாரதிதாசன் பதிப்பகம் (1954)
- மணிமேகலை வெண்பா
- அன்பு நூலகம் (1962) மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது
- முல்லைக் காடு,காசி ஈ.லட்சுமண பிரசாத் (1926)
- கலை மன்றம் (1955) விடுதலை வேட்கை,
- உயிரின் இயற்கை,மன்றம் வெளியீடு (1948)
- வீட்டுக் கோழியும் – காட்டுக் கோழியும்,குயில் புதுவை (1959)
- தமிழுக்கு அமுதென்று பேர்
- வேங்கையே எழுக ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது
- புகழ் மலர்கள் நாள் மலர்கள்
- தலைமலை கண்ட தேவர் (நாவலர்கள்), பூம்புகார் பிரசுரம் (1978)
பாரதியார் மீது பற்று:
பாரதிதாசன்: BHARATHIDASAN HISTORY IN TAMIL: தமிழ்மொழி மீது பற்றுக் கொண்டவராக இருந்த பாரதிதாசன், அவரது மானசீக குருவாகப் சுப்ரமணிய பாரதியாரைக் கருதினார். அவரது பாடலைத் தனது நண்பனின் திருமண நிகழ்வின் போது பாடிய அவர், பாரதியாரை நேரில் சந்திக்கவும் செய்தார்.
பாரதியிடமிருந்து பாராட்டுகள் பெற்றதோடு மட்டுமல்லாமல், அவரது நட்பும் கிடைத்தது அவருக்கு. அன்றுமுதல், அவர் தனது இயற் பெயரான கனகசுப்புரத்தினம் என்பதைப் ‘பாரதிதாசன்’ என்று மாற்றிக் கொண்டார்.