Friday, July 21, 2023

TODAY CURRENT AFFAIRS IN TAMIL 21.07.2023



TODAY CURRENT AFFAIRS IN TAMIL 21.07.2023
  • மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா புதுதில்லியில் 2023ஆம் ஆண்டுக்கான உலகளாவிய உணவு ஒழுங்குமுறை உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார்.
  • குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புது தில்லியில் இரண்டு நாள் நூலகத் திருவிழா 2023ஐத் தொடங்கி வைக்கிறார்
  • சஹாரா குழுமத்தின் கூட்டுறவு சங்கங்களின் வைப்புத்தொகையாளர்களின் கோரிக்கைகளுக்காக 'CRCS-சஹாரா ரீஃபண்ட் போர்ட்டலை' உள்துறை அமைச்சர் தொடங்கினார்.
  • ராஜஸ்தான் சட்டமன்றத்தில் 'ராஜஸ்தான் குறைந்தபட்ச உத்தரவாத வருமான மசோதா, 2023' அறிமுகப்படுத்தப்பட்டது.
  • ISSF ஜூனியர் உலக சிப்ஷிப்: ஸ்கீட் கலப்பு குழு போட்டியில் ஹர்மேஹர் சிங் லல்லி, சஞ்சனா சூத் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
  • மாலத்தீவில் நடந்த ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது
  • முதுகுத் தண்டுவட நோயக்கான ஆராய்ச்சியில் சிறந்த பங்களிப்பிற்காக கோவையை சேர்ந்த எஸ்.ராஜசேகருக்கு சர் ஜே.சி.போஸ் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.Indian Science Monitor அமைப்பு சார்பில் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
  • தமிழக மாணவி வினிஷா உமா சங்கர் உட்பட 5 இந்திய மாணவர்கள் பிரிட்டனின் சர்வதேச மாணவர் விருதுக்கான 50 இறுதி போட்டியாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.சூரிய சக்தியில் இயங்கும் இஸ்திரி வண்டி, ஸ்மார்ட் மின்விசிறி தயாரிப்பிற்காக வினிஷா உமா சங்கர் இப்பட்டியலுக்கு தேர்வாகியுள்ளார்
  • நாட்டின் நேரடி வசூல் பட்டியலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மண்டலம் 4ஆம் இடத்தினை பிடித்துள்ளது.ரூ.1,24,414 கோடி வசூலாகியுள்ளது.
  • தமிழ்நாடு மாநில சுகாதார குறியீட்டில் 2வது இடத்தை பிடித்துள்ளது.
  • தமிழ்நாடு தேசிய அளவில் நீரிழிவு நோய் பாதிப்பில் 6வது இடத்தை பிடித்துள்ளது.
  • தமிழ்நாடு மாநில உணவுப் பாதுகாப்பு குறியீட்டில் 3வது இடத்தை பிடித்துள்ளது.
  • தமிழ்நாடு கடன் வாங்கும் அறிக்கையில் முதலிடத்தை பிடித்துள்ளது.
  • சென்னையில் வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் சஞ்சய் குமார் வர்மாவால் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் நாட்டின் முதல் சாட்பாட் இணைய தள செயலி டி.டி.எஸ் நண்பன் தொடங்கி வைத்துள்ளார்.
  • வேலைதேடுவோர் மற்றும் நிறுவனங்களுக்கிடையே உள்ள இடைவெளியை சரி செய்ய செயற்கை நுண்ணறிவு (A.I.) திறன் கொண்ட இணையதளமான காக்னவி இணையதளம் (COGNAVI) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • ஒடிசாவில் இந்தியாவின் முதல் A.I. செய்தி வாசிப்பாளரான லிசாவினை அறிமுகம் செய்துள்ளது.
  • கர்நாடகத்தில் தென்னிந்தியாவின் முதல் A.I. செய்தி தொகுப்பாளரான செளந்தர்யாவினை அறிமுகம் செய்துள்ளது.
  • ஜெஃப்ரி ஹிண்டன் செயற்கை நுண்ணறிவின் தந்தையாக அறியப்படுகிறார்
  • எல்ஜசி (LIC)-யின் புதிய நிர்வாக இயக்குநராக சத்பால் பானு நியமிக்கப்பட்டள்ளார்.LIC – Life Insurance Corporation of India.01.09.1956-ல் LIC தொடங்கப்பட்டது.
  • சந்திராயன் 3 திட்ட இயக்குநராக வீரமுத்து வேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ரயில்வே பாதுகாப்பு படையின் (RPF) இயக்குநர் ஜெனரலாக மனோஜ் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்
  • இந்திய கடலோர காவல் படையின் (ICG) இயக்குநர் ஜெனரலாக ராக்கேஷ் பால் நியமிக்கப்பட்டுள்ளார்
  • இந்திய கூடைபந்து சம்மேளன (BFI) புதிய தலைவராக ஆதவ் அர்ஜுனா நியமிக்கப்பட்டுள்ளார்
  • பெல் நிறுவனத்தின் இயக்குநராக கிருஷ்ணகுமார் தாக்கூர் நியமிக்கப்பட்டுள்ளார்
  • இந்தியா மற்றும் மங்கோலியா இடையேயான 15வது கூட்டு இராணுவப் போர் பயிற்சியானது நாடோடி யானை 2023 (Nomadic Elephant) எனும் பெயரில் மங்கோலியாவின் உலான்பத்தர் நடைபெற்றது. மங்கோலியாவின் உலன்பாட்டார்வில் இந்தியா, மங்கோலியா இடையேயான கூட்டு ராணுவப் பயிற்சி நோமடிக் எலிபாண்ட் 2023 (Nomadic Elephant) என்ற பெயரில் நடைபெற்றது.
  • மாலத்தீவில் இந்தியா, மாலத்தீவுகள் இடையேயான 6வது ஏகதா (EKATHA) கூட்டு ராணுவப் பயிற்சி நடைபெற்றது.
  • ஆர்.சிதம்பரம் வாழ்க்கை வரலாறு, பொக்ரான் அணு சோதனை பற்றிய India Rising Memoir of a Scientist என்ற நூலினை ஆர்.சிதம்பரம் மற்றும் சுரேஷ் கங்கேத்ரா ஆகியோர் எழுதியுள்ளார்
  • வடக்கு கால்வாயை கடந்த இளம் வீரர் என்ற பெருமையை அன்ஷுமன் ஜிங்ரான் பெற்றுள்ளார்.
  • 100வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி:மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியானது தனது 100வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியை இந்தியாவுடன் ஆட உள்ளது.
  • விராட்கோலி தனது 500வது கிரிக்கெட் போட்டியை விளையாடுகிறார்
  • சர்வதேச கால்பந்து சம்மேளனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஜூலை மாத உலக கால்பந்து தரவரிசைப் பட்டியலில் இந்தியா 99வது இடத்தை பிடித்துள்ளது.அர்ஜென்டினா அணி முதலிடத்தை தக்க வைத்துள்ளது.
  • இந்தியாவில் 2023-24 நிதியாண்டில் 6.4% பொருளாதார வளர்ச்சியும், 4.9% பணவீக்கமும் இருக்குமென ஆசிய வளர்ச்சி வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது
  • சென்னையில் 11வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடானது நடைபெற்றது
  • ஜெனீவாவின் சுவிட்சர்லாந்தில் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு நடத்தப்பட்டது.
  • ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் 26வது உலக சுரங்க மாநாடு நடைபெற்றது
  • புதுதில்லியில் உலகாளவிய உணவு கட்டுப்பாட்டாளர்கள் உச்சி மாநாடு 2023 (Global Food Regulators Summit 2023) நடைபெறுகிறது.
  • ஜூலை 20-ல் 9வது மகளிர் கால்பந்து உலகக்கோப்பை போட்டி தொடங்கியது.இப்போட்டியினை நியூசிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகள் நடத்துகின்றன.இதன் சின்னம் – தசுனி (Tazuni)

No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: