PRODUCTION LINKED INCENTIVE (PLI) SCHEME DETAILS IN TAMIL

TNPSC PAYILAGAM
By -
0

PRODUCTION LINKED INCENTIVE (PLI) SCHEME DETAILS IN TAMIL


உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (PLI- PRODUCTION LINKED INCENTIVE) திட்டம்:


  • இந்தியாவில் முக்கியமான முக்கிய தொடக்கப் பொருட்கள் (Key Starting Materials)/ மருந்து இடைநிலைகள் (Drug Intermediates) மற்றும் செயலில் உள்ள மருந்துப் பொருட்கள் (Active Pharmaceutical Ingredients) ஆகியவற்றின் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதற்கான உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (PLI- PRODUCTION LINKED INCENTIVE) திட்டம் (PLI scheme for Bulk Drugs திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது).
  • மருந்துகள் உற்பத்திக்கான ஊக்கத்தொகை திட்டத்திற்கு 2022-23-ம் நிதியாண்டு முதல் 2027-28-ம் நிதியாண்டு வரையிலான திட்ட உற்பத்தி காலத்துக்கு  ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
  • ஆறு ஆண்டு காலத்திற்கு அடையாளம் காணப்பட்ட மருந்துகள் உற்பத்தி செய்ய 55 மருந்து தொழிற்சாலைகளுக்கு ஊக்கத்தொகை அனுமதிக்கப்பட்டு உள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 48 உற்பத்தித் திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றில் 34 திட்டங்களுக்கு 25 வகையான மருந்துகளின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளன.
  • மருந்துகள், மருத்துவ சாதனங்கள் ஆகியவற்றின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம்  மருந்து உற்பத்தியில் இறக்குமதி சார்பு நிலையைக் குறைக்கவும் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், அதிக முதலீடுகளை ஈர்க்கவும் வகை செய்கிறது.
  • இத்திட்டத்தின் கீழ், காப்புரிமை பெற்ற / காப்புரிமை பெறாத மருந்துகள், உயிரி அடிப்படையிலான மருந்துகள், புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் போன்ற உயர் மதிப்பிலான மருந்து பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
  • புதிய ஆலை மற்றும் இயந்திரங்கள், R&D, தயாரிப்பு பதிவு, புதிய கட்டிடம் ஆகியவற்றில் முதலீடு செய்ய இத்திட்டம் அனுமதிக்கிறது. அக்டோபர் 2024 நிலவரப்படி, இத்திட்டத்தின் கீழ் மொத்த முதலீடு ரூ. 33,534 கோடியானது மற்றும் அசல் திட்ட முதலீட்டான ரூ.17,275 கோடியை தாண்டியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 45 நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.3,215 கோடி வழங்கப்பட்டுள்ளது.
  • மருந்துகள் துறையால் செயல்படுத்தப்படும் PLI திட்டங்களின் கீழ் ஆதரிக்கப்படும் தயாரிப்புகளின் வகைகள், இலக்கு குழுக்கள் மற்றும் தேர்வு அளவுகோல்கள் பற்றிய விவரங்கள் அந்தந்த PLI திட்டத்தின் கீழ் https://pharmaceuticals.gov.in/ திட்டங்களில் துறை இணையதளத்தில் கிடைக்கின்றன.

SOURCE : PIB 





Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!