பாரத் தேசிய சைபர் பயிற்சி 2024 :
- இந்தியாவின் இணைய பாதுகாப்பு எழுச்சியை வலுப்படுத்துவதற்கான ஒரு மைல்கல் முயற்சியான பாரத் தேசிய இணைய பாதுகாப்பு ஒத்திகை (பாரத் என்சிஎக்ஸ் 2024),ராஷ்டிரிய ரக்ஷா பல்கலைக்கழகத்துடன் (RRU) இணைந்து, தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் (NSCS) ஏற்பாடு செய்திருந்த உயர்மட்ட விழாவில் 18.11.2024 தொடங்கி வைக்கப்பட்டது.
- மேம்பட்ட இணைய பாதுகாப்பு, தாக்குதல் சம்பவத்துக்கான எதிர்வினை திறன்கள் மற்றும் உத்திசார் முடிவெடுத்தல் ஆகியவற்றுடன், அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க, இந்தியாவின் இணைய பாதுகாப்பு வல்லுநர்களையும் தலைமைத்துவ நிபுணர்களையும் தயார்படுத்துவதில், இந்த 12 நாள் பயிற்சி ஒரு முக்கியமான படியாகும்.
பாரத் தேசிய சைபர் பயிற்சி 2024-ன் முக்கிய அம்சங்கள்:
- இந்தப் பயிற்சியில் இணைய பாதுகாப்பு மற்றும் தாக்குதல் சம்பவத்துக்கான எதிர்வினை , தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயல்பாட்டுத் தொழில்நுட்ப அமைப்புகள் மீதான இணைய தாக்குதல்களின் யதார்த்த நிலையை வெளிப்படுத்துதல், அரசு மற்றும் தொழில்துறை பங்குதாரர்களுக்கான கூட்டு தளங்கள் உருவாக்குதல் ஆகியவை அடங்கும்.
- பல்வேறு துறைகளைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகளை ஒன்றிணைத்து, தேசிய அளவிலான இணைய நெருக்கடியின் போது முடிவெடுப்பதை உருவகப்படுத்தி, உத்திசார் புத்திசாலித்தனத்துடன் உயர் அழுத்த சூழ்நிலைகளுக்கு பதிலளிக்கும் திறனை மேம்படுத்தும்.
- சிஐஎஸ்ஓ மாநாட்டில் அரசு, பொது மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரிகள் நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொள்வதுடன், குழு விவாதங்களிலும் பங்கேற்பதோடு, இணைய பாதுகாப்பில் சமீபத்திய போக்குகள் மற்றும் அரசாங்க முயற்சிகளை ஆராய்வார்கள்.
- பாரத் இணைய பாதுகாப்பு புத்தொழில் கண்காட்சி இந்திய புத்தொழில்களின் புதுமையான தீர்வுகளை வெளிப்படுத்தும். நாட்டின் இணைய பாதுகாப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் அவர்களின் பங்கை வலியுறுத்தும்.
- இந்தப் பயிற்சி தலைமைத்துவ ஈடுபாடு மற்றும் திறன் வளர்ப்பு ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறது, வளர்ந்து வரும் இணைய சவால்களுக்கு ஒருங்கிணைந்த அணுகுமுறையை வளர்க்கிறது.
- இந்த நிகழ்ச்சி, நவம்பர் 18 முதல் நவம்பர் 29, 2024 வரை நடைபெறும்.
Source : PIB