இஸ்ரோவின் GSAT-N2 செயற்கைக்கோள்

TNPSC PAYILAGAM
By -
0

இஸ்ரோவின் GSAT-N2 செயற்கைக்கோள்


  • இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, தகவல் தொடர்பை வலுப்படுத்தும் வகையில் GSAT N2 அல்லது GSAT 20 என்ற செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது.
  • இந்த ஜிசாட் செயற்கைக்கோள் 4700 கிலோ எடை கொண்டது. ஜிசாட்-என்2 இஸ்ரோவின் செயற்கைக்கோள் மையம் ( Isro’s Satellite Centre ) மற்றும் திரவ உந்துவிசை அமைப்பு மையம் ( Liquid Propulsion Systems Centre ) இணைந்து உருவாக்கிய தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஆகும்.
  • 48 ஜிபிபிஎஸ் டேட்டா டிரான்ஸ்மிஷன் திறனுடன், இந்த உயர்-செயல்திறன் செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
  • பிராட்பேண்ட் சேவைகளை மேம்படுத்துவதோடு, நாடு முழுவதும் விமானத்தில் உள்ள இணைப்பையும் வழங்கும் வகையில் இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது. 
  • இது GSAT தகவல்தொடர்பு செயற்கைக்கோள் இந்தியாவின் ஸ்மார்ட் சிட்டி மிஷனுக்குத் தேவையான தகவல் தொடர்பு உள்கட்டமைப்புக்கு தேவையான தரவுகளை அளிக்கும் எனவும் கூறப்படுகிறது.
  • மேலும் இந்த செயற்கைக்கோள் 14 ஆண்டுகளுக்கு செயல்பாட்டில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!