- Bhu-ஆதார் அல்லது ULPIN ஆனது, 2021 ஆம் ஆண்டில் நிலப் பதிவேடுகள் நவீன மயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்டது.
- நாட்டில் உள்ள சுமார் 30 சதவீத கிராமப்புற நிலப் பரப்புகளுக்கு தனித்துவ நிலப் பகுதி அடையாள எண் (ULPIN) அல்லது Bhu-ஆதார் வழங்கப்பட்டுள்ளது.
- BHU என்பது பூமியை குறிக்கும். ஒவ்வொரு மனிதருக்கும், நிறுவனத்துக்கும் ஆதார் இருப்பது போல, தற்போது ஒவ்வொரு நிலத்துக்கும் ஆதார் கொண்டுவரப்பட உள்ளது. இந்த ஆதார் 16 இலக்கம் கொண்ட குறியீட்டினை கொண்டிருக்கும். அந்த குறியீட்டில், அந்த நிலம் அமைந்துள்ள மாவட்டம், கிராமம், தாலுகா ஆகியவையோடு, நிலத்தின் வகைப்பாடு, நிலத்தின் உரிமையாளரை குறிப்பிடும் வகையில் அந்த குறியீடு அமைக்கப்படும். BHU ஆதாருக்கு முன்னோடி கர்நாடக அரசு.
- ULPIN ஆனது 2021 ஆம் ஆண்டில் மத்திய அரசின் எண்ணிம இந்தியா நிலப் பதிவுகள் நவீன மயமாக்கல் திட்டத்தின் (DILRMP) ஒரு பகுதியாக தொடங்கப்பட்டது.
- நிலப் பகுதிகளுக்குத் தனித்துவ அடையாள எண்களை வழங்குவதில் மாநிலங்கள் பின்பற்றும் செயல்முறையை நன்கு சீரமைத்து ஒத்திசைவு தன்மையைக் கொண்டு வருவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
- குஜராத், கோவா, மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகியவை குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை மேற்கொண்டுள்ளன.
- 1.2 கோடிக்கும் அதிகமான நிலப் பரப்புகளைக் கொண்ட குஜராத் மாநிலத்தில், 1.19 கோடி நிலப் பகுதிகளுக்கு ULPIN உருவாக்கப்பட்டுள்ளது என்று தரவுகள் குறிப்பிடச் செய்கின்றன.
- தமிழ்நாட்டில் ஒருவர் அதிகபட்சம் 60 ஏக்கர் நிலம் வைத்திருக்க முடியும். BHU ஆதாரின் மூலம் பினாமி மற்றும் தனிநபர் சொத்து விவரங்கள் வெளிவருவதால், பினாமி மற்றும் நில உச்சவரம்பு மீறல் போன்றவற்றை கட்டுப்படுத்த முடியும்.