CURRENT AFFAIRS IN TAMIL 09.03.2024 - 10.03.2024 |
சாப்சார் குட்
- சாப்சார் குட் என்பது மிசோரம் மாநிலத்தின் பொன் அறுவடை (ஜும் சாகுபடி) என்ற திருவிழாவினை முன்னிட்டு நடத்தப்படும் ஒரு கொண்டாட்டமாகும்.
- சமீபக் காலங்களில், ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை அன்று இந்தத் திருவிழா கொண்டாடப்படுகிறது.
- சாப்சார் குட் திருவிழாவின் ஒரு மிகச்சிறந்த சிறப்பம்சம் ஆனது, செராவ் எனப்படும் பிரபலமான மூங்கில் நடனம் ஆகும்
- இந்த திருவிழா கி.பி 1450-1700 இல் சுய்புய் என்ற கிராமத்தில் தொடங்கியதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்ஏவுதல் திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்:
- ஜப்பானுடன் சேர்ந்து சந்திரயான்-4 திட்டமானது லூபெக்ஸ் (The Lunar Polar Exploration mission-LUPEX) எனும் பெயரில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் ரோபோட் தொழில்நுட்பத்திலான ரோவர் மற்றும் லேண்டரை நிலவுக்கு அனுப்பிஆய்வு செய்வதுடன், அதன் மேற்பரப்பில் உள்ள மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டுவரப்பட உள்ளன
- எல்விஎம்-3 ராக்கெட் மூலம் உந்துவிசை கலன் (Propulsion Module (PM), தரையிறங்கி கலன் (Descender Module-DM), மேல் புறப்பாடு கலன் (Ascender Module-AM)ஆகியவை முதலில் ஏவப்படும்.
- அடுத்தகட்டமாக பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் இடமாற்று கலன் (Transfer module-TM), மறுநுழைவு கலன்(Re-entry module-RM) ஆகியவை அனுப்பப்படும்.
- குறிப்பிட்ட கால இடைவெளிகளில் இந்த ராக்கெட்கள் விண்ணில் செலுத்தப்படும். இஸ்ரோ வரலாற்றில் ஒரே திட்டத்துக்காக 2 ராக்கெட்களை விண்ணில் செலுத்துவது இதுவே முதல் முயற்சியாகும்.
அருணாச்சலில் உலகின் மிக நீளமான இரு வழி சுரங்கப் பாதை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்:
- அருணாச்சல பிரதேசத்தின் தவாங், மேற்கு காமெங் மாவட்டங்களை இணைக்கும் வகையில் சீன எல்லையை ஒட்டிய ‘சேலா பாஸ்' பகுதியில் சுரங்கப் பாதை அமைக்க கடந்த 2019 பிப்ரவரி 9-ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
- அங்கு 13,000 அடி உயரத்தில் மலையைக் குடைந்து உலகின் மிக உயரமான இருவழி சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இதில் ஒரு சுரங்கப் பாதையின் நீளம் 1,595 மீட்டர் ஆகும். மற்றொரு சுரங்கப் பாதையின் நீளம் 1,003 மீட்டர் ஆகும். இரு சுரங்கப் பாதைகளையும் இணைக்கும் வகையில் 1,200 மீட்டர் நீளமுடைய இணைப்பு சாலை, அவசர காலங்களில் வெளியேறுவதற்கான பாதைகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
- எல்லை சாலைகள் அமைப்பு ரூ.825 கோடி செலவில் சுரங்கப் பாதையை கட்டி முடித்துள்ளது. ஒரு நாளில் சுரங்கப்பாதை வழியாக 3,000 கார்கள், 2,000 லாரிகள் கடந்து செல்ல முடியும். குறிப்பாக பிரம்மோஸ் உள்ளிட்ட ஏவுகணைகள், பீரங்கிகள், ராணுவ வாகனங்களை சீன எல்லைப் பகுதிக்கு எளிதாக கொண்டு செல்ல முடியும். அசாமின் தேஜ்பூர்- அருணாச்சல பிரதேசத்தின் தவாங் இடையிலான தொலைவு 10 கி.மீ. ஆகவும், பயண நேரம் ஒரு மணி வரையும் குறைந்திருக்கிறது. பனிப்பொழிவு காலங்களிலும் சீன எல்லைப் பகுதிக்கு ராணுவ வீரர்களால் தடையின்றி செல்ல முடியும்.
- அருணாச்சல பிரதேச தலைநகர் இடா நகரில் நேற்று நடைபெற்ற விழாவின்போது சேலா சுரங்கப் பாதையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக திறந்துவைத்தார்.
71வது உலக அழகி பட்டத்தை வென்ற செக் குடியரசு பெண்:
- 2024ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா என்ற பெண் வென்றுள்ளார். லெபனான் நாட்டைச் சேர்ந்த யாஸ்மினா ஸைத்தோன் முதல் ரன்னராக அறிவிக்கப்பட்டார்.
- 71வது உலக அழகிப் போட்டி மும்பையில் உள்ள ஜியோ கன்வென்ஷன் மையத்தில் நடைபெற்றது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நடக்கும் உலக அழகிப் போட்டி இதுவாகும். மாலை 7.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியை இயக்குநர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கினார்.
டெஸ்ட் போட்டி ஊக்கத் தொகை:
- இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான டெஸ்ட் போட்டி ஊக்கத் தொகையை 3 மடங்கு உயர்த்தி உள்ளது பிசிசிஐ.
- இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் டெஸ்ட் போட்டிக்குமுன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் போட்டிக்கான ஊக்கத் தொகையை 3 மடங்கு உயர்த்தி உள்ளது பிசிசிஐ.
- இதுதொடர்பாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது எக்ஸ் வலைதள பதிவில்,“டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான ஊக்கத்தொகை திட்டத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நமது வீரர்களின் நிலையான வருவாய்க்காகவும், ஊதிய உயர்வுக்காகவும் இந்தத் திட்டத்தை அமல்படுத்துகிறோம். 2022-23 சீசன் முதல் இந்த திட்டம் அமல்படுத்தப்படும். போட்டி ஊதியத்துடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்” என தெரிவித்துள்ளார்.
ஆண்டர்சன் 700:
- தரம்சாலா டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவை 30 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன். சர்வதேச டெஸ்ட் போட்டியில் ஆண்டர்சன் கைப்பற்றிய 700-வது விக்கெட் இதுவாகும்.
- இதன் மூலம் 700 விக்கெட்களை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார் ஆண்டர்சன்.
- அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்களின் பட்டியலில் இலங்கையின் முத்தையா முரளிதரன் (800) முதலிடத்தில் உள்ளார். மறைந்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்ன் (708) 2-வது இடம் வகிக்கிறார்.
ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை:
- அறிமுக டெஸ்ட் போட்டியிலும் 100-வது டெஸ்ட் போட்டியிலும் 5 விக்கெட்கள் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின். கடந்த 2011-ம் ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்டில் அறிமுக வீரராக 6 விக்கெட்களை வீழ்த்திய அவர், தற்போது தனது 100-வது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்களை சாய்த்துள்ளார்.
- 36-வது முறையாக 5 விக்கெட்கள்: தரம்சாலா டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் அஸ்வின் 5 விக்கெட்கள் வீழ்த்தினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர், 5 விக்கெட்கள் வீழ்த்துவது இது 36-வது முறையாகும். இதன் மூலம் இந்த வகை சாதனையில் 3-வது இடத்தை நியூஸிலாந்தின் ரிச்சர்ட்டு ஹெட்லியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் அஸ்வின். அதேவேளையில் இந்திய வீரர்களில் அதிக முறை 5 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் அனில் கும்ப்ளே 35 முறை 5 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். முதலிடத்தில் இலங்கையின் முத்தையா முரளிதரன் (67 முறை), 2-வது இடத்தில் மறைந்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்ன் (37 முறை) உள்ளனர்.
5-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி:
- தரம்சாலாவில் நடைபெற்று வந்த இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
- இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை4-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது.
- இரு இன்னிங்ஸையும் சேர்த்து கூட்டாக 7 விக்கெட்களையும் பேட்டிங்கில் 30 ரன்களையும் சேர்த்த குல்தீப் யாதவ் ஆட்ட நாயகனாக தேர்வானார்.
- தொடர் நாயகனாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டார். அவர், இந்த தொடரில் இரண்டு இரட்டை சதங்களுடன் 712 ரன்கள் குவித்திருந்தார்.
MARCH 2024-LIST OF IMPORTANT DAYS IN TAMIL-மார்ச் 10
- மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படைகள் (CISF) உயர்த்தும் நாள் ஆண்டுதோறும் மார்ச் 10 அன்று கொண்டாடப்படுகிறது.
- இது 1969 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தின் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டது.
- அரசு மற்றும் தனியார் துறைகளில் முக்கியமான தொழில்துறை நிறுவனங்களில் பாதுகாப்பின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில் -மார்ச்-2024:
உலகின் மிக நீளமான இரு வழி சுரங்கப் பாதை: பிரதமர் மோடி எங்கே திறந்து வைத்தார்?
A) குஜராத்தின் காந்திநகர்
B) அருணாச்சல பிரதேசத்தின் சேலா பாஸ்
C) மேகாலயாவின் ஷில்லாங்
D) உத்தர பிரதேசம் லக்னோ
ANS : B) அருணாச்சல பிரதேசத்தின் சேலா பாஸ்
நடப்பு நிகழ்வுகள் 2024
- JANUARY 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / ஜனவரி 2024
- FEBRUARY 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / பிப்ரவரி2024
- MARCH 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / மார்ச் 2024
MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:
- TNPSC GK குறிப்புகள் தமிழ் JANUARY– 2024
- TNPSC GK குறிப்புகள் தமிழ் FEBRUARY – 2024
- TNPSC GK குறிப்புகள் தமிழ் MARCH– 2024
விருதுகள் கௌரவங்கள் 2024 :
- JANUARY AWARDS HONOURS 2024 IN TAMIL / ஜனவரி விருதுகள் ( தமிழில்) 2024
- FEBRUARY AWARDS HONOURS 2024 IN TAMIL / பிப்ரவரி விருதுகள் ( தமிழில்) 2024
- MARCH AWARDS HONOURS 2024 IN TAMIL / மார்ச் விருதுகள் ( தமிழில்) 2024
CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில்-ஜனவரி 2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில்-பிப்ரவரி 2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில் -மார்ச்-2024
முக்கியமான நாட்களின் பட்டியல் 2024
அரசு அறிமுகப்படுத்தி முக்கிய செயலிகள் 2023:2024: