MARCH 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL 07.03.2024

TNPSC PAYILAGAM
By -
0

TODAY CURRENT AFFAIRS IN TAMIL 07.03.2024
TODAY CURRENT AFFAIRS IN TAMIL 07.03.2024


உலக விண்வெளி பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கை 5 மடங்கு உயர்த்த இலக்கு நிர்ணயம்:

  • குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஐஎன்-எஸ்பிஏசி மையத்தில் புதிய தொழில்நுட்ப மையத்தை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்  திறந்து வைத்தார். 
  • அப்போது அவர் பேசியதாவது:இந்தியாவின் விண்வெளி பொருளாதாரம் தற்போது 8 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இதை 2040-ம் ஆண்டுக்குள் பல மடங்கு உயர்த்தத் திட்டமிட்டுள்ளோம். விரைவில் உலக விண்வெளி பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கை 5 மடங்கு உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 2040-ம் ஆண்டுக்குள் இதை 100 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தும் திறன் நம்மிடையே உள்ளது. 

இந்தியாவின் முதல் ஏஐ ஆசிரியை ‘ஐரிஸ்’:
  • கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள கேடிசிடி மேல்நிலைப்பள்ளி, 2021 நிதி ஆயோக் புத்தாக்க திட்டத்தின்கீழ் அடல் டிங்கரிங் சோதனை கூடத்தை பள்ளி வளாகத்தில் நிறுவியது. 
  • மேக்கர்லேப்ஸ் எஜுடெக் எனும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்துடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத் திறனை பயன்படுத்தி ‘ஐரிஸ்’ என்ற பெயரில் மனித இயல்பு கொண்ட ரோபோ ஆசிரியரை இப்பள்ளி வடிவமைத்துள்ளது.
  • அச்சு அசலாக பெண் உருவில்காட்சியளிக்கும் ‘ஐரிஸ்’ ரோபோபன்மொழி புலமை கொண்டது. பல்வேறு பாடங்களிலிருந்து கேள்விகள் எழுப்பினாலும் சரளமாக பேசியபடி பதில் அளிக்கும். இதன் கீழ் பகுதியில் சக்கரங்கள் பொருத்தப்பட்டிருப்பதால் எளிதில் இடம்விட்டு இடம் நகர்ந்து செல்லும்.

IOTA- ISLANDS ON THE AIR
  • ஆந்திரப் பிரதேசத்தின் நச்சுகுண்டா தீவுப் பகுதியினைச் சேர்ந்த தொழில்முறை சாரா வானொலியாளர்கள்-வணிக நோக்கமின்றி தனி நபர்களின் பெரு சொந்த முயற்சியால் ஒலிபரப்பப்படும் வானொலி (HAMs) அடங்கிய ஒரு பிரத்தியேகக் குழுவானது, Island On The Air (IOTA) என்ற பயணத் திட்டத்தில் பங்கேற்பதற்காக தனது பயணத்தை மேற்கொண்டது.
  • இது 1964 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.
  • இது உலகெங்கிலும் உள்ள தொழில்சாரா வானொலியாளர்களைத் தீவுகளில் உள்ள வானொலி நிலையங்களுடன் இணைக்கின்ற ஒரு முன்னோடித் திட்டமாகும்.
  • அமெச்சூர் வானொலி (தொழில்முறை சாரா வானொலி) என்பது வணிக நோக்கமின்றி வானொலி அலைக்கற்றை அலைவரிசையைப் பயன்படுத்துவதை உள்ளடக்கிய ஒரு பிரபலமான பொழுதுபோக்குச் செயல்பாடு ஆகும்.
  • HAM வானொலியாளர்கள், போட்டிகள், அவசர தகவல் தொடர்பு ஆதரவு, பரிசோதனை, தொழில்நுட்பக் கற்றல் மற்றும் சமூக ஈடுபாடு போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, சில குறிப்பிட்ட வானொலி அலைவரிசைகளைப் பயன்படுத்தி தொடர்பு கொள்கின்றனர்.

புவிசார் குறியீடு:2024
  • ஓடிசாவின் புகழ்பெற்ற கட்டாக் ரூபா தாரகாசிக்கு (வெள்ளிக் கசவுப் பூவேலைப் பாடுகள்) புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.கசவுப் பூவேலைப்பாடுகள் ஆனது பாரம்பரியமாக சிறந்த கைவினைத் திறன் மற்றும் பாரம்பரிய நகைகளில் செழிப்பு மிக்க வடிவமைப்புகளைக் கொண்டது.தொல்லியல் சான்றுகள் ஆனது, மெசபடோமியாவில் கி.மு. 3500 ஆம் ஆண்டில் இந்த வேலைப்பாடுகள் நகைகளில் பயன்படுத்தப் பட்டதாகக் கூறுகின்றன.
  • வங்காளத்தின் பிரபலமான பாரம்பரியக் கைத்தறி துணியான பங்களார் மஸ்லின், புவிசார் வழங்கப்பட்டுள்ளது.பங்களார் (வங்காள) மஸ்லின் ரகத் துணியானது, வங்காளத்தின் பிரபலமான பாரம்பரியக் கைத்தறி கைவினைப் பொருட்ககளில் ஒன்றாகும்.இந்த சிறந்த வகை மஸ்லின் என்பது பருத்தியால் ஆனது.
  • ஆந்திரப் பிரதேசத்தின் நர்சாபூர் கொக்கிப்பின்னல் வேலைப்பாடுகள் கொண்ட சரிகைத் தயாரிப்புகள் புவிசார் வழங்கப்பட்டுள்ளது.ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரிப் பகுதியில் உள்ள கொக்கிப் பின்னல் வேலைப் பாடுகள் கொண்ட சரிகைத் தயாரிப்புகளுக்குப் பெயர் பெற்ற நர்சாபூர், அதன் நுணுக்கமான கைவினைத் திறனுக்காக உலகளவில் புகழ் பெற்றுள்ளது.
  • குஜராத்தின் கட்ச் ரோகன் கைவினைப் பொருள்கள் ஆகியவற்றிற்கும் புவிசார் வழங்கப்பட்டுள்ளது.
  • மத்தியப் பிரதேசத்தின் ரத்லம் மாவட்டத்தில் உள்ள ரியாவான் கிராமத்தின் பெயரால் பெயரிடப்பட்ட ரத்லம் ரியாவான் லஹ்சுன் (பூண்டு) வகை மற்றும் 
  • குஜராத்தின் அம்பாஜி சலவைக் கல் (பளிங்கு) ஆகியவையும் புவிசார் குறியீட்டினைப் பெற்று உள்ளன.கடுமையான அழுத்தம் மற்றும் வெப்பம் காரணமாக பூமியின் கண்ட மேலோட்டின் கீழ் உள்ள சுண்ணாம்புக் கல் மீண்டும் படிகமாக்கப் படும் போது இந்தப் பளிங்குக் கல் உருவாகிறது.
  • திரிபுரா ரிசா ஜவுளி வகைகள், ஹைதராபாத் லாக் (அரக்கு) வளையல்கள், அசாமின் மஜூலி முகமூடி மற்றும் அசாம் மஜூலி கையெழுத்துப் பிரதி ஓவியம் ஆகியவை புவிசார் குறியீட்டினைப் பெற்ற மற்றத் தயாரிப்புகள் ஆகும்
PANGEA:
  • PANGEA என்ற திட்டத்திற்கு வழிகாட்டுவதற்காக தகவல்-பகிர்வு முன்னெடுப்பினைத் தொடங்குவதற்காக உலகெங்கிலும் உள்ள அறிவியலாளர்கள் கேமரூன் நகரில் கூடி உள்ளனர்.
  • PANGEA என்பது உயிரி-புவி-வேதியியல் மற்றும் சூழலியல் ஏற்பு குறித்த வெப்ப மண்டலப் பகுதி முழுவதுமான ஆய்வு என்பதைக் குறிக்கிறது.
  • கண்டங்களுக்குள்ளும் கண்டங்களுக்கு இடையிலும் வெப்ப மண்டலக் காடுகளில் உள்ள பருவநிலை மற்றும் நிலப் பயன்பாட்டு மாற்றத்தின் ஒருங்கிணைந்த விளைவுகளைப் புரிந்து கொள்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது வெப்பமண்டலப் பகுதிகளில் உள்ள காடுகளின் உருவாக்கம், அமைப்பு மற்றும் உயிர் வேதியியல் சுழற்சி ஆகியவற்றில் உள்ள ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகளை ஆய்வு செய்யும்.
  • இது, பருவநிலை மாற்றத் தணிப்பு மற்றும் ஏற்பு மற்றும் பல்லுயிர்ப்பெருக்க வளங் காப்பு ஆகியவற்றுக்கான சமூக நடவடிக்கைகளை ஆதரிக்கும் வகையில் முடிவுகளை மேற்கொள்வதற்கு வழிகாட்டுகிறது.
தக்சின் பாரத் சமஸ்கிருத கேந்திரா:
  • கலாச்சாரத் துறை அமைச்சகம் ஆனது, தற்போது ஹைதராபாத்தில் சங்கீத நாடக அகாதமியின் பிராந்திய மையத்தை அமைப்பதற்குத் திட்டமிட்டுள்ளது.
  • இது தக்சின் பாரத் சமஸ்கிருத கேந்திரா என்று அழைக்கப்படும்.
  • தென்னிந்தியாவில் இதுவரை இத்தகைய அகாதமி அமைக்கப்படவில்லை.
  • "தக்சின் பாரத் சமஸ்கிருத கேந்திரா" வளாகத்தினுள் "பாரத் கலா மண்டபம்" என்று பெயரிடப்பட்ட ஓர் அரங்கம் கட்டமைக்கப்படும்.
  • சங்கீத நாடக அகாதமி என்பது இசை, நடனம் மற்றும் நாடகத்திற்கான ஒரு தேசிய அகாதமி ஆகும்.
  • 1953 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இது இந்தியாவின் பல்வேறு பரந்துபட்ட கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு உள்ளது.
CMS COP14 :
  • CMS COP14 அழுங்காமை இனங்களைப் பாதுகாப்பதற்கான ஒற்றை இன வளங்காப்பு செயல் திட்டத்தை ஏற்றுக் கொண்டுள்ளது.
  • இது ஆப்பிரிக்க-யூரேசிய இடம் பெயர்ந்த நீர்ப்பறவைகளின் (AEWA) வளங்காப்பு ஒப்பந்தத்தின் கீழ் உருவாக்கப்பட்டது.
  • இடம் பெயர்ந்த நீர்ப்பறவை இனங்களை ஒரு சாதகமான வளங்காப்பு நிலையில் கொண்டு வருவதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை செயல்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அழுங்காமை இனமானது IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் மிகவும் அருகி வரும் இனமாக வகைப்படுத்தப் பட்டுள்ளது.
அஸ்வின் களமிறங்கும் 100வது டெஸ்ட் போட்டி:
  • இந்தியா - இங்கிலாந்து இடையே ஐந்தாவது டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் நடைபெற்று வருகிறது. இது இந்திய ஸ்பின் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் களமிறங்கும் 100வது டெஸ்ட் போட்டியாக அமைந்துள்ளது.
  • இன்று 100வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கியிருக்கும் இந்திய ஸ்பின்னரான ரவிச்சந்திரன் அஸ்வின், இதுவரை விளையாடியிருக்கும் 99 டெஸ்ட் போட்டிகளில் 507 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 35 முறை 5 விக்கெட்டுகளை எடுத்திருக்கும் அவர் பேட்டிங்கிலும் 5 சதம், 14 அரைசதங்கள் விளாசியுள்ளார்.

நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில் -மார்ச்-2024:

இந்தியாவின் முதல் AI ஆசிரியை யார்?

A) லிசா

B) ஐரீஸ்
C) கொரியா
D) எலான் 

ANS :  B) ஐரீஸ்



நடப்பு நிகழ்வுகள் 2024 

MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:

விருதுகள் கௌரவங்கள் 2024 :

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024

முக்கியமான நாட்களின் பட்டியல் 2024

அரசு அறிமுகப்படுத்தி முக்கிய செயலிகள் 2023:2024:

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!