Sunday, March 3, 2024

MARCH 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL 02.03.2024 - 03.03.2024

TODAY CURRENT AFFAIRS IN TAMIL 02.03.2024 - 03.03.2024
TODAY CURRENT AFFAIRS IN TAMIL 02.03.2024 - 03.03.2024


ஐஎன்எஸ் ஜடாயு  புதிய கடற்படை தளம்:

  • கேரள கடற்கரையிலிருந்து 220 கி.மீ முதல் 440 கி.மீ தூரத்தில் அரபிக்கடலில் அமைந்துள்ள இந்தியாவின் யூனியன் பிரதேசம் லட்சத்தீவு. இங்கு 3 குழுக்களாக 36 தீவுகள் உள்ளன.
  • இங்குள்ள மினிகாய் தீவில் ஐஎன்எஸ் ஜடாயு என்ற பெயரில் புதிய கடற்படை தளத்தை இந்திய கடற்படை வரும் மார்ச் 6-ம் தேதி தொடங்குகிறது. கடற்படை தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் முன்னிலையில் இந்த கடற்படை தளம் இந்திய கடற்படையில் இணைக்கப்படுகிறது. 
  • இதன் மூலம் இந்திய பெருங்கடல் பகுதியில் ராணுவ மற்றும்வணிக கப்பல்களின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணிக்க முடியும். 
  • நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் திறன் வாய்ந்த‘எம்எச் 60ஆர் ஷீ ஹாக்’ என்ற ஹெலிகாப்டரும் கடற்படையில் வரும் மார்ச் 6-ம் தேதி இணைக்கப்படுகிறது
அஞ்சல் மூலம் வாக்களிக்கும் வசதிக்கான வயது வரம்பு 85:
  • அஞ்சல் மூலம் வாக்களிக்கும் வசதிக்கான வயது வரம்பு 85 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் அஞ்சல் ஓட்டு வசதியை பயன்படுத்தி வந்த நிலையில் மத்திய அரசு வயது வரம்பை உயர்த்தியிருக்கிறது. 
  • கடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் நேரடியாக வாக்குச்சாவடிக்கு வந்தே வாக்களித்த நிலையில், இந்த மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் தேர்தல் ஆணையத்திடம் கலந்தாலோசனை நடத்தியே இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது:
  • தமிழகத்தில் இருந்து நடப்பு நிதியாண்டில் ஜனவரி வரை, 61,171 கோடி ரூபாய்க்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. நாட்டில் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது' என, தமிழக அரசின் தொழில் துறை தெரிவித்துள்ளது. 
  • மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில், இந்தியாவிலேயே தமிழகம் முன்னணி மாநிலமாக தொடர்ந்து விளங்குகிறது. நடப்பு நிதியாண்டில் ஏப்., முதல் ஜன., வரை, 61,171 கோடி ரூபாய்க்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அந்த பொருட்களில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியே 1.87 லட்சம் கோடி ரூபாய் எனும் போது, தமிழகத்தின் ஏற்றுமதி பங்கு 32.52 சதவீதம். 
  • இந்த முழு நிதியாண்டில், 74,700 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.8,470 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் எஞ்சியுள்ளன:

  • கடந்த ஆண்டு மே 19-ஆம் தேதி ரூ.2,000 நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக ரிசா்வ் வங்கி அறிவித்தது. வங்கிகளில் அந்த நோட்டுகளை டெபாசிட் செய்யவும் அல்லது அந்த நோட்டுகளைக் கொடுத்து ரூ.100, ரூ.500 போன்ற நோட்டுகளாக மாற்றி பெற்றுக் கொள்ளவும் கடந்த ஆண்டு அக்டோபா் 7 வரை ரிசா்வ் வங்கி அவகாசம் அளித்தது.
  • இந்நிலையில், ரிசா்வ் வங்கி  வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘கடந்த பிப்.29-ஆம் தேதி நிலவரப்படி, புழக்கத்தில் இருந்த 97.62 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுவிட்டன. பொதுமக்களிடம் ரூ.8,470 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் எஞ்சியுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமிா்த பாரத் ரயில்கள்:

  • உலகத் தரத்திலான அமிா்த பாரத் ரயில்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வருங்காலத்தில 1,000 அமிா்த பாரத் ரயில்கள் உருவாக்கப்படவுள்ளன. 
  • இந்த ரயிலில் 1,000 கி.மீ. வரையிலான பயணத்துக்கு ரூ.454 மட்டுமே பயணக் கட்டணமாக வசூலிக்கப்படவுள்ளது. மேலும், மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் வகையில் ரயில்கள் மேம்படுத்தப்படவுள்ளன

நாட்டின் 3வது மிகப்பெரிய உர ஆலை:

  • ஜார்க்கண்ட், சிந்திரி பகுதியில் ஹிந்துஸ்தான் உர்வரக் ரசயான ஆலை திறக்கப்பட்டுள்ளது.
  • நாட்டின் 3வது மிகப்பெரிய உர ஆலை ஆகும்.
  • முதல் ஆலை – (உத்திரப்பிரதேசம் 2021)
  • இரண்டாவது ஆலை – (தெலுங்கானா 2022)
  • ஜார்க்கண்ட் மாநிலத்தின் வடக்கு கரன்புரா பகுதியில் சூப்பர் அனல்மின் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
நியமனம் :
  • தேசிய பாதுகாப்பு படையின் தலைமை இயக்குநராக தல்ஜித் சிங் சௌத்ரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • சவுத்ரி உத்தரபிரதேசத்தின் 1990-பேட்ச் இந்திய போலீஸ் சர்வீஸ் (ஐபிஎஸ்) சேவை அதிகாரி ஆவார். தற்போது, ​​மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (CRPF) சிறப்பு இயக்குநராக பணியாற்றி வருகிறார்.
  • முன்னதாக, இந்தோ திபெத்திய எல்லைக் காவல்துறையில் (ஐடிபிபி) கூடுதல் தலைமை இயக்குநராகப் பணியாற்றியவர்.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்:

  • சுயச்சார்பு திட்டத்தின் மூலம் தயாரிக்கப்படும் பாதுகாப்பு தளவாடங்களை கொள்முதல் செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
  • பிரமோஸ் ஏவுகணைகளை வாங்க பிரமோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • ஆர்.டி 33 ஏரோ என்ஜின்கள் (மிக் 29 விமானம்) வாங்க ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • அதிக சக்தி கொண்ட ரேடார்கள் வாங்க லார்சன் & டூப்ரோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பேரவைக் கூட்டம்
  • கென்யா, நைரோபியில் 6வது சுற்றுச்சூழல் பேரவைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
  • இக்கூட்டத்தில் சுற்றுச்சூழலுக்காக இந்தியா தீர்மானம் கொண்டு வந்துள்ளது.


நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில்-மார்ச் 2024

நாட்டில் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் ----------மாநிலம் முதலிடத்தில் உள்ளது  ?

A) குஜராத் 
B) தமிழ்நாடு
C) மத்திய பிரதேசம்
D) கர்நாடகா

ANS :  B) தமிழ்நாடு

MARCH 2024-LIST OF IMPORTANT DAYS IN TAMIL-மார்ச் 2

சர்வதேச பூனை மீட்பு தினம் (International Cat Rescue Day) :

  • ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 2 அன்று சர்வதேச மீட்புப் பூனைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. 1867 ஆம் ஆண்டில், ஹென்றி பெர்க் விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்புக்கான அமெரிக்க சங்கத்தை (ASPCA) நிறுவினார். அனைத்து விலங்குகளும் முன்முயற்சியுடன் கூடிய முதல் மனிதாபிமான சங்கமாகும்.
  • தீம் : "சக இருத்தலின் 'குரலை' பாதுகாக்க 'மியாவ்' சேவ்" (Save The ‘Meow’ To Guard ‘Voice’ of Co-Existence)

MARCH 2024-LIST OF IMPORTANT DAYS IN TAMIL-மார்ச் 3

 உலக வனவிலங்கு தினம்: World Wildlife Day

  •  உலக வனவிலங்கு தினம் (WWD) மார்ச் 3, 2024 அன்று கொண்டாடப்படும்
  • தீம் : "மக்கள் மற்றும் கிரகத்தை இணைத்தல்: வனவிலங்கு பாதுகாப்பில் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளை ஆராய்தல்"(Connecting people and planet: exploring digital innovation in wildlife conservation)

 உலக செவித்திறன் தினம்: World Hearing Day

  • காது கேளாமை மற்றும் செவித்திறன் இழப்பை எவ்வாறு தடுப்பது மற்றும் உலகம் முழுவதும் காது மற்றும் செவிப்புலன் பராமரிப்பை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 3 அன்று உலக செவித்திறன் தினம் அனுசரிக்கப்படுகிறதுஉலக செவிப்புலன் தினம் 2024 அன்று, WHO கவனம் செலுத்தும். 


நடப்பு நிகழ்வுகள் 2024 

MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:

விருதுகள் கௌரவங்கள் 2024 :

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024

முக்கியமான நாட்களின் பட்டியல் 2024

அரசு அறிமுகப்படுத்தி முக்கிய செயலிகள் 2023:2024:

No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: