Thursday, March 28, 2024

MARCH 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL -28.03.2024

 

TODAY CURRENT AFFAIRS IN TAMIL -28.03.2024
TODAY CURRENT AFFAIRS IN TAMIL -28.03.2024


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை:

  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 
  • தமிழகத்துக்கு தற்போது நாளொன்றுக்கு ரூ.294 வழங்கப்பட்டு வரும் நிலையில், ரூ.319-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 
  • அதிகபட்சமாக ஹரியாணா மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கு நாளொன்றுக்கு ரூ.374 ஆக ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
  • கோவாவுக்கு ரூ.356, நிக்கோபாருக்கு ரூ.347, அந்தமானுக்கு ரூ.329, புதுச்சேரிக்கு ரூ.319, லட்சத்தீவுக்கு ரூ.315 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடா் வரலாற்றிலியே அதிக ஸ்கோரை எடுத்த அணி :

  • மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 277/3 ரன்களைக் குவித்து ஐபிஎல் தொடா் வரலாற்றிலியே அதிக ஸ்கோரை எடுத்த அணி என்ற சாதனையை படைத்த ஹைதராபாத் சன்ரைசா்ஸ் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், பெங்களூா் அணி கடந்த 2013-இல் புணே வாரியா்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நிகழ்த்தி இருந்த 263 ரன்கள் சாதனையை முறியடித்தது ஹைதராபாத்.
  • இரு அணிகளையும் சோ்த்து மொத்தம் 38 சிக்ஸா்கள் விளாசப்பட்டன. முந்தைய சாதனையாக 33 சிக்ஸா்களே இருந்தது. 
  • ஐபிஎல் தொடரின் 17 ஆண்டுகள் வரலாற்றில் ஒரே ஆட்டத்தில் இரு அணிகளின் ஸ்கோா்களை சோ்த்து மொத்தம் 523 ரன்கள் விளாசப்பட்டன.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டி 2024:

  • வரவிருக்கும் 2024 ஆம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் ஷரத் கமல் தேசியக் கொடியை ஏந்தி இந்திய அணியை வழிநடத்தும் வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற M.C. மேரி கோம் கோடைக்கால விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய அணியின் தலைமைப் பொறுப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (ITU):

  • சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (ITU) ஆனது, தனது எண்ணிமப் புத்தாக்க வாரியத்தின் இணைத் தலைமை பொறுப்பிற்கு இந்திய நாட்டினைத் தேர்ந்தெடுத்து உள்ளது.
  • தொலைத்தொடர்பு துறை செயலாளர், டாக்டர் நீரஜ் மிட்டல், சர்வதேச தொலைத் தொடர்பு ஒன்றியத்தின் எண்ணிம புத்தாக்க வாரியத்தின் இணைத் தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் வருமானம் மற்றும் செல்வ வளத்தில் நிலவும் சமத்துவமின்மை 1922-2023

  • பில்லியனர்கள் இராஜ்ஜியத்தின் எழுச்சி" என்ற அறிக்கையானது சமீபத்தில் வெளியிடப்பட்டது.சமத்துவமின்மையானது இந்தியாவில் 2000 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் இருந்து அதிகரித்துள்ளது.
  • 2022-23 ஆம் ஆண்டில், நாட்டின் மக்கள்தொகையில் அதிக செல்வ வளம் மிக்க ஒருசதவீத மக்களின் வருமானம் மற்றும் செல்வ வளத்தின் பங்குகள் ஆகியவை முறையே 22.6 சதவீதம் மற்றும் 40.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.
  • 2022-23 ஆம் ஆண்டிற்குள், அதிக செல்வ வளம் மிக்க ஒரு சதவீத மக்களின் வருமானம் மற்றும் செல்வ வளத்தின் பங்குகள் ஆனது (22.6 சதவீதம் மற்றும் 40.1 சதவீதம்) இது வரையில் இல்லாத அளவிற்கான மிக அதிக அளவில் இருந்தன.
  • இந்தியாவின் அதிக செல்வ வளம் மிக்க ஒரு சதவீத மக்களின் வருமானப் பங்கு, தென்னாப்பிரிக்கா, பிரேசில் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் பதிவானதை விடவும், உலகிலேயே மிக அதிகமானதாகவும் உள்ளது.
  • 1950 ஆம் ஆண்டுகளில் அதிகரித்த, அதிக செல்வ வளம் மிக்க ஒரு சதவீத மக்களின் வருமானப் பங்குகள் ஆனது, அடுத்த இருபது ஆண்டுகளில் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து 1982 ஆம் ஆண்டில் 6.1 சதவீதத்தை எட்டியது.
  • அடுத்த 30 ஆண்டுகளில் தொடர்ந்து அதிகரித்து 2022 ஆம் ஆண்டில், 22.6 சதவீதத்தை எட்டி இதுவரையில் இல்லாத அளவிற்கு இது உயர்ந்துள்ளது.
  • 2022-23 ஆம் ஆண்டில் சுமார் 167 பணக்காரக் குடும்பங்களின் நிகரச் செல்வத்தின் மீது விதிக்கப் படும் இரண்டு சதவீத "மிகை வரி" ஆனது தேசிய வருமானத்தில் 0.5 சதவீத வருவாயினை ஈட்டும்.
  • 1922 ஆம் ஆண்டில் 13 சதவீதமாக இருந்த, அதிகச் செல்வ வளம் மிக்க ஒரு சதவீத மக்களின் வருமானப் பங்கு ஆனது, இரு போர்களுக்கு இடைபட்ட காலத்தில் 20 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.

ஜீனி - செயற்கை நுண்ணறிவு மாதிரி

  • கூகுள் நிறுவனத்தின் டீப்மைன்ட் பிரிவானது, இரு பரிமாண இயங்குதளங்களில் விளையாட்டு சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள பயன்படும் ஊடாடும் வகையிலான மெய்நிகர் உலகங்களை உருவாக்குகின்ற ஜீனி எனப்படும் செயற்கை நுண்ணறிவு மாதிரியினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • ஜீனி மாதிரியானது செயற்கைப் படங்கள், புகைப்படங்கள், ஓவியங்கள் மற்றும் நிஜ உலகப் புகைப்படங்களிலிருந்தும் கூட விளையாட்டு சூழல்களை நன்கு உருவாக்கக் கூடியது.
  • விளையாட்டினுள் உள்ள பாத்திரங்களுக்கான, பிரத்தியேகமாக இணைய ஒளிப்படக் காட்சிகளில் உள்ள கட்டுப்பாடுகளை கற்று மறு அறிமுகம் செய்யும் திறனையும் ஜீனி கொண்டுள்ளது.

ஹனூமான்: பெரிய மொழி மாதிரிகளின் தொகுப்பு

  • மும்பையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் தலைமையிலான பாரத்GPT குழுவானது மற்ற ஏழு உயரடுக்கு இந்திய பொறியியல் நிறுவனங்களுடன் இணைந்து 'ஹனூமான்' இந்திய மொழி மாதிரி தொடர்களை உருவாக்கியுள்ளது.
  • இது இந்தி, தமிழ் மற்றும் மராத்தி போன்ற 11 இந்திய மொழிகளில் பதிலளிக்கக் கூடியது என்பதோடு 20க்கும் மேற்பட்ட மொழிகளில் விரிவுபடுத்தவும் திட்டமிடப் பட்டுள்ளது.
  • சுகாதாரம், நிர்வாகம், நிதிச் சேவைகள் மற்றும் கல்வி உள்ளிட்ட நான்கு துறைகளில் சேவை வழங்கும் வகையில் ஹனுமான் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • பெரிய மொழி மாதிரிகள், பெரிய அளவிலான உரையைச் செயலாக்குவதற்காக உள்ளார்ந்த கற்றல் நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன.

நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில் -மார்ச்-2024:

Current Affairs Question and Answers in Tamil -March-2024:

கூகுள் நிறுவனத்தின் டீப்மைன்ட் பிரிவானது, இரு பரிமாண இயங்குதளங்களில் விளையாட்டு சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள பயன்படும் ஊடாடும் வகையிலான மெய்நிகர் உலகங்களை உருவாக்குகின்ற --------------- எனப்படும் செயற்கை நுண்ணறிவு மாதிரியினை அறிமுகப்படுத்தியுள்ளது. ?

A)  ஜீனி AI

B)  ஜெமினி AI
C) பார்ட் AI
D)  விண்மீன் AI

ANS : A)  ஜீனி AI



நடப்பு நிகழ்வுகள் 2024 

MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:

விருதுகள் கௌரவங்கள் 2024 :

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024

முக்கியமான நாட்களின் பட்டியல் 2024

அரசு அறிமுகப்படுத்தி முக்கிய செயலிகள் 2023:2024:


 

No comments:

Post a Comment

Featured Post

NOVEMBER 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL

    Welcome to our blog post on  CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 , specifically tailored for competitive exams. This post is designed...