MARCH 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL -27.03.2024

TNPSC PAYILAGAM
By -
0

TODAY CURRENT AFFAIRS IN TAMIL -27.03.2024
TODAY CURRENT AFFAIRS IN TAMIL -27.03.2024


தமிழகத்தில் 68,144 வாக்குச் சாவடிகள்:

  • தமிழகத்தில் 68,144 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு  தெரிவித்துள்ளார். 
  • மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ஆம் தேதி நடைபெறுகிறது.
  • தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில், 3.06 கோடி ஆண்களும், 3.17 கோடி பெண்களும், 8,465 மூன்றாம் பாலினத்துவரும் அடங்குவர். 
  • முதல்முறை வாக்காளர்கள் எண்ணிக்கை 10.90 லட்சம். 
  • தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 68,144 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 4 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

இந்தியாவில் மாா்பகப் புற்றுநோய் ஆய்வு : Breast Cancer Survey in India

  • இந்தியாவில் அடுத்த ஆண்டுக்குள் மாா்பகப் புற்றுநோய் பாதிப்பின் தாக்கம் கணிசமாக அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்)-ஆல் இம்மாதத் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வறிக்கையில் கடந்த 2012 முதல் 2016-ஆம் ஆண்டு வரையில் மாநில அளவிலான இந்தியாவின் மாா்பகப் புற்றுநோய் பாதிப்புக்கான தாக்கம் குறித்து ‘வாழ்க்கை இழந்த ஆண்டுகள்’ (ஒய்எல்எல்) மற்றும் ‘பாதிப்புடன் வாழ்ந்த ஆண்டுகள்’ (ஒய்எல்டி) ஆகியவற்றின் கூட்டான ‘பாதிப்பு வாழ்க்கை ஆண்டுகள்’(டிஏஎல்ஒய்) அடிப்படையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் பெண் மாா்பகப் புற்றுநோயின் மாநில வாரியான பாதிப்பு குறித்த இந்த ஆய்வு கடந்த 2016-ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. கடந்த 2016-ஆம் ஆண்டில், இந்தியப் பெண்களிடையே மாா்பகப் புற்றுநோய் பாதிப்புக்கான தாக்கம் 1,00,000 பெண்களுக்கு 515.4 பாதிப்பு வாழ்க்கை ஆண்டுகள் (டிஏஎல்ஒய்) என மதிப்பிடப்பட்டுள்ளது
  • இதனிடையே, ‘குளோபல் கேன்சா் அப்சா்வேட்டரி’ நடத்திய ஆய்வின்படி, தென் மத்திய ஆசியாவில் பெண்களிடையே மாா்பகப் புற்றுநோய் பாதிப்புக்கான தாக்கம் 1,00,000 பெண்களுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டில் 21.6 விகிதமாகவும் கடந்த 2018-ஆம் ஆண்டில் 25.9 விகிதமாகவும் இருந்தது. பரந்த அளவிலான தரவுகளைப் பயன்படுத்தி தேசிய மற்றும் துணை தேசிய பாதிப்புகள் மட்டுமே இந்த ஆய்வில் மதிப்பிட்டுள்ளன.
  • வடகிழக்கு மாநிலங்களை விட தமிழகம், தெலங்கானா, கா்நாடகம் மற்றும் தில்லி ஆகிய மாநிலங்களில் மாா்பகப் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக உள்ளது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.

விண்வெளிக் கழிவுகளே இல்லாத ஆய்வுத் திட்டம்- ‘எக்ஸ்போசாட்’

  • எக்ஸ்போசாட்’ திட்டத்தின் கீழ் விண்ணுக்கு அனுப்பப்பட்ட பிஎஸ்எல்வி ராக்கெட்டின் இறுதி நிலை ஆய்வுக் கருவிகள் அனைத்தும் அவற்றின் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்தததை அடுத்து பூமிக்கு மீண்டும் திருப்பிக் கொண்டுவரப்பட்டது. 
  • இதன் மூலம் விண்வெளிக் கழிவுகளே இல்லாத ஆய்வுத் திட்டமாக இது முன்னெடுக்கப்பட்டுள்ளது. கருந்துளை, ஊடுகதிா் தன்மைகள், நியூட்ரான் விண்மீன்கள் உள்ளிட்ட விண்வெளி நிகழ்வுகளை ஆய்வு செய்வதற்காக எக்ஸ்போசாட் எனும் செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் மூலம் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. அந்த செயற்கைக்கோள் திட்டமிட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்ட பிறகு, ராக்கெட்டின் நான்காம் நிலையான பிஎஸ்-4 (போயம்-3) பகுதியானது 350 கி.மீ.க்கு கீழே இறக்கப்பட்டு ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

நியமனம்:

  • மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உள்துறை அமைச்சகம், தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) இயக்குநராக புகழ்பெற்ற ஐபிஎஸ் அதிகாரி சதானந்த் வசந்த டேட்டையும்
  • தேசிய பேரிடர் மீட்புப் படையின் (என்டிஆர்எஃப்) இயக்குநராக ஐபிஎஸ் அதிகாரி பியூஷ் ஆனந்தையும் நியமித்துள்ளது.
  • முன்னதாக இந்த நியமனங்களுக்கான உள்துறை அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து இந்த நியமனங்கள் பற்றிய அறிவிப்பு இன்று (27.03.2024) வெளியாகியுள்ளது.

ஒரே பாலின திருமணம் சட்டம் நிறைவேற்றும் முதல் தெற்காசிய நாடு :

  • தாய்லாந்து நாடாளுமன்றத்தின் கீழவையில், தன்பால் ஈர்ப்பாளர்களின் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் சமத்துவ திருமணத்துக்கான மசோதா, பெரும்பான்மையுடன் நிறைவேறியுள்ளது. 
  • ஒரே பாலினத்தை சேர்ந்தவர்களின் திருமணத்தை அங்கீகரிக்கும் இந்த மசோதாவை நிறைவேற்றும் முதல் தெற்காசிய நாடு, தாய்லாந்து.
  • ஆசியாவில் தைவான், நேபாளம் நாடுகளுக்கு அடுத்து மூன்றாவது நாடாக தாய்லாந்து இந்த மசோதாவைக் கொண்டு வந்துள்ளது.


நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில் -மார்ச்-2024:

Current Affairs Question and Answers in Tamil -March-2024:

கடந்த 2016-ஆம் ஆண்டில், இந்தியப் பெண்களிடையே மாா்பகப் புற்றுநோய் பாதிப்புக்கான தாக்கம் ---------- வாழ்க்கை ஆண்டுகள் (டிஏஎல்ஒய்) என மதிப்பிடப்பட்டுள்ளது. ?

A)  1,00,000 பெண்களுக்கு 515.4 பாதிப்பு

B)  1,00,000 பெண்களுக்கு 1515.4 பாதிப்பு
C)  1,00,000 பெண்களுக்கு 615.4 பாதிப்பு
D)  1,00,000 பெண்களுக்கு 1615.4 பாதிப்பு

ANS : A)  1,00,000 பெண்களுக்கு 515.4 பாதிப்பு


MARCH 2024-LIST OF IMPORTANT DAYS IN TAMIL-மார்ச் 27

உலக நாடக தினம் : World Theatre Day

  • உலக நாடக தினம் (WTD) என்பது மார்ச் 27 அன்று கொண்டாடப்படும் ஒரு சர்வதேச அனுசரிப்பு ஆகும். இது சர்வதேச நாடக நிறுவனத்தால் 1961 இல் தொடங்கப்பட்டது.
  • நாடகக் கலைகளின் முக்கியத்துவம் மற்றும் பொழுதுபோக்கில் அவற்றின் முக்கிய பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அமைதி மற்றும் பொருளாதார வளர்ச்சியை வளர்ப்பதற்கு அவை எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதை எடுத்துக்காட்டுவதற்காகவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.


நடப்பு நிகழ்வுகள் 2024 

MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:

விருதுகள் கௌரவங்கள் 2024 :

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024

முக்கியமான நாட்களின் பட்டியல் 2024

அரசு அறிமுகப்படுத்தி முக்கிய செயலிகள் 2023:2024:


 

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!