MARCH 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL -25.03.2024

TNPSC PAYILAGAM
By -
0

TODAY CURRENT AFFAIRS IN TAMIL -25.03.2024
TODAY CURRENT AFFAIRS IN TAMIL -25.03.2024


CERAWeek  விருது 

  • COP28 - 28வது பங்குதாரர் மாநாட்டின் (2023 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பருவ நிலை மாற்ற மாநாடு) தலைவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் டாக்டர் சுல்தான் அல் ஜாபர், CERAWeek  ("நிலையான ஆற்றல் எதிர்காலத்தை நோக்கி உலகளாவிய ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்கான CERAWeek தலைமைத்துவ விருதை"-“CERAWeek Leadership Award for Building Global Consensus towards a Sustainable Energy Future”  )தலைமைத்துவ விருதைப் பெற்றுள்ளார்.

GRID-INDIA:

  • இந்திய மின்கட்டமைப்பு கட்டுப்பாட்டுக் கழக லிமிடெட் (GRID-INDIA) நிறுவனமானது, மினிரத்னா- வகையிலான மத்திய பொதுத்துறை நிறுவனம் என்ற அந்தஸ்தினைப் பெற்றதன் மூலம் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.

இந்தியாவின் முதல் பேருந்து

  • திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் இந்தியாவின் முதல் பேருந்து ஆனது மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தினால் அறிமுகப் படுத்தப் பட்டு இயக்கப்பட்டது.

உண்மை சரிபார்ப்புப் பிரிவு குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு:

  • உச்ச நீதிமன்றமானது திருத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப (IT) விதிகளின் மீதான செயலாக்கத்தினை நிறுத்தி வைத்துள்ளது.
  • "உண்மை சரிபார்ப்புப் பிரிவு" (FCU) மூலம் சமூக ஊடக தளங்களில் பரவும் "போலிச் செய்திகளை" அடையாளம் காண இந்த விதி அரசாங்கத்திற்கு அதிகாரம் அளித்தது.
  • மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆனது, FCU பிரிவினைப் பத்திரிகைத் தகவல் வாரியத்தின் கீழ் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக அறிவித்தது.
  • சமூக ஊடகத் தளங்களில் மத்திய அரசு மற்றும் அதன் முகமைகள் தொடர்பான தவறான தகவல் பரவலை நிறுத்தும் அதிகாரம் இதற்கு உண்டு.
  • முன்னதாக, மும்பை உயர் நீதிமன்றம் ஆனது, "அரசு ஆனது ஒரு உரையினை உண்மை அல்லது பொய் என்று கட்டாயப்படுத்தி வகைப்படுத்த முடியாது மற்றும் அதனை வெளியிடக் கூடாது என்று கட்டாயப்படுத்த முடியாது எனக் கூறியது.
  • மேலும் இந்த விதிகள் ஆனது அரசியலமைப்பின் 14, 19(1)(a) மற்றும் (g), மற்றும் 21 ஆகிய சட்டப் பிரிவுகள் மற்றும் 2000 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 79வது பிரிவு (IT சட்டம்) ஆகியவற்றை மீறுவதாக வாதிடப் படுகிறது.

FLNAT மதிப்பீட்டுத் தேர்வு

  • அரசாங்கம் ஆனது நவ் பாரத் சாக்சர்தா காரியக்ராம் என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக 23 மாநிலங்களில் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணியல் மதிப்பீட்டுத் தேர்வை (FLNAT) மேற்கொண்டது.
  • இந்த மதிப்பீடானது படித்தல், எழுதுதல் மற்றும் எண்ணியல் என்ற மூன்று பாடங்களைக் கொண்டுள்ள நிலையில் அவை ஒவ்வொன்றிற்கும் 50 மதிப்பெண்கள் என மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்பட்டது.
  • FLNAT ஆனது, அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணியல் திறன்களை மதிப்பிடச் செய்வதற்காக படித்தல், எழுதுதல் மற்றும் எண்ணியல் திறன்களை மதிப்பிடுகிறது.
  • ULLAS எனப் பிரபலமாக அறியப்படும் புதிய இந்திய எழுத்தறிவுத் திட்டம் ஆனது 2022- 2027 ஆம் காலக் கட்டத்திற்கான மத்திய அரசின் நிதியுதவியினைப் பெறும் திட்டம் ஆகும்.
  • ULLAS சமூகத்தில் உள்ள அனைவருக்குமான வாழ்நாள் முழுவதுமான கற்றல் குறித்து புரிந்து கொள்தல் என்பதைக் குறிக்கிறது.

புத்தொழில் நிறுவனங்களின் மஹாகும்ப் நிகழ்ச்சி 2024

  • புது டெல்லியில் புத்தொழில் நிறுவனங்களின் சூழல் அமைப்பை மேம்படுத்தச் செய்வதற்காகவும், இந்தத் துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் மூன்று நாட்கள் அளவிலான "புத்தொழில் நிறுவனங்களின் மஹாகும்ப்" நிகழ்ச்சி அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • இது நாட்டின் புத்தொழில் நிறுவனங்களின் சூழல் அமைப்பில் உள்ள அனைத்துப் பங்குதாரர்களுக்கும் ஓர் இயங்கு தளமாக செயல்படுகிறது.
  • நாடு முழுவதும் உள்ள புதுமை மற்றும் தொழில்முனைவினை வளர்ப்பதை பெரும் நோக்கமாகக் கொண்ட இந்த நிகழ்ச்சியானது, முன்னணி முதலீட்டாளர்கள், முக்கியக் கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் ஆர்வமுள்ள தொழில்முனைவோர்களின் மிகப் பெரும் பங்கேற்பினை ஈர்த்துள்ளது

ISA அமைப்பின் 29வது அமர்வு

  • சர்வதேச கடற்படுகை ஆணையம் (ISA) ஆனது அதன் 29வது அமர்வின் முதல் பகுதியை சமீபத்தில் ஜமைக்காவில் கிங்க்ஸ்டன் நகரத்தில் தொடங்கியது.
  • ISA என்பது, 1994 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு சர்வதேச தன்னாட்சி அமைப்பாகும்.
  • இது கடல்சார் சட்டம் மீதான 1982 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் (UNCLOS) உடன்படிக்கை மற்றும் UNCLOS உடன்படிக்கையின் XI பகுதியினை செயல்படுத்துவது தொடர்பான 1994 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் நிறுவப்பட்டது.
  • இது ஒட்டுமொத்த மனித குலத்தின் நலனுக்காக கடற்படுகையில் உள்ள அனைத்து கனிம வளங்கள் தொடர்பான செயல்பாடுகளையும் ஒழுங்குபடுத்தி, கட்டுப்பாட்டுச் செயல்முறைகளை மேற்கொள்கிறது.
  • கடற்படுகை மற்றும் கடற்பரப்பு மற்றும் அதன் அடிப்பகுதி ஆகியவை தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டவையாகும்.

2024 ஆம் ஆண்டு மக்களாட்சிக்கான உச்சி மாநாடு

  • மூன்றாவது மக்களாட்சிக்கான உச்சி மாநாடு (S4D3) ஆனது, தென் கொரியாவின் சியோல் நகரில் நடைபெற்றது.
  • முதன்முறையாக அமெரிக்காவிற்கு வெளியே வேறொரு நாட்டில் நடத்தப்பட்ட இந்த உச்சி மாநாடு ஆனது, மக்களாட்சி (ஜனநாயகம்) பற்றிய கருத்தை உலகளவில் நன்கு பரப்புவதை நோக்கமாகக் கொண்டது.
  • இந்நிகழ்வின் கருத்துரு, "எதிர்காலச் சந்ததியினருக்கான மக்களாட்சி" என்பதாகும்.
  • இந்த ஆண்டிற்கான உச்சி மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் ஆனது, மக்கள் மத்தியில் ஏற்படும் தவறான தகவல் பரவல், செயற்கை நுண்ணறிவு மற்றும் போலிப் பதிவுகள் உள்ளிட்ட எண்ணிம ஊடகம் சார்ந்த அச்சுறுத்தல்களை மையமாகக் கொண்டது.
  • அமெரிக்க அதிபர் ஜோ பிடன் 2021 ஆம் ஆண்டில் இந்த உச்சி மாநாட்டினை நிறுவச்செய்தார்.

பார்பர்டன் கிரீன்ஸ்டோன் மண்டலம்

  • 3.3 பில்லியன் ஆண்டுகள் அளவிலான பழமையான பாறைகளில் சில ஆரம்பகால நில நடுக்கங்களின் அறிகுறிகள் இருப்பதை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இந்தப் பாறைகள் ஆனது, புவியின் கண்ட மேலோடு ஆனது பெரிய தட்டுகளாகப் பிளவுபட்டு மூடகத்தின் மீது நகர்ந்து வருவதை விளக்குகின்ற கண்டத் தட்டுகள் பற்றிய ஆரம்பக் கட்ட ஆதாரங்களை வழங்குகின்றன.
  • உயிர்கள் முதன்முதலில் பரிணமித்த போது எப்படிப்பட்டச் சூழ்நிலைகள் இருந்து இருக்கும் என்பதையும் இந்தப் பாறைகள் சுட்டிக் காட்டுகின்றன.
  • தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு சிக்கலான புவியியல் அமைப்பான பார்பர்டன் கிரீன்ஸ்டோன் மண்டலத்தினை ஆய்வு செய்த போது இந்த தகவல் கண்டுபிடிக்கப் பட்டது.
  • இந்த மண்டலமானது நியூசிலாந்தில் உள்ள சமீபத்தில் உருவான (இளம்) பாறைகளை போலவே உள்ளது.
  • அவை ஹிகுரங்கி கீழமிழ்தல் மண்டலத்தில் நிலநடுக்கத்தினால் தூண்டப்பட்ட நீரில் மூழ்கிய நிலச்சரிவுகளை எதிர்கொண்டுள்ளன.
  • அதன் பச்சை நிறத்தின் காரணமாக இப்பெயரினைப் பெற்ற பார்பர்டன் கிரீன் ஸ்டோன் மண்டலம் ஆனது, சுமார் 3.2 பில்லியன் மற்றும் 3.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பூமியின் மிக விரிவான புவியியல் பதிவுகளில் ஒன்றை வழங்குகிறது.

உலக மின்னணுக் கழிவுகள் கண்காணிப்பு அறிக்கை 2024

  • 2022 ஆம் ஆண்டில் உலகளவில் 62 பில்லியன் கிலோ மின்னணுக் கழிவுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
  • இதில் 31 பில்லியன் கிலோ உலோகங்கள், 17 பில்லியன் கிலோ நெகிழிகள் மற்றும் 14 பில்லியன் கிலோ மற்ற பொருட்கள் (கனிமங்கள், கண்ணாடி, கலவைப் பொருட்கள் போன்றவை) ஆகும்.
  • இந்த எண்ணிக்கையானது 2030 ஆம் ஆண்டில் 82 பில்லியன் கிலோவாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • 2010 ஆம் ஆண்டில் உலகளவில் 34 பில்லியன் கிலோ மின்னணுக் கழிவுகள் உருவாக்கப் பட்டுள்ளது.
  • இந்த 62 பில்லியனில், சுமார் 13.8 பில்லியன் கிலோவானது 'முறைப்படிச் சேகரிக்கப்பட்டு சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் மறுசுழற்சி செய்யப் பட்டதாக ஆவணப் படுத்தப் பட்டுள்ளது.
  • இந்த மறுசுழற்சி அளவானது 2010 ஆம் ஆண்டில் 8 பில்லியன் கிலோவாக இருந்தது.
  • குறைவான மற்றும் மிகவும் குறைவான நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் 18 பில்லியன் கிலோ கழிவுகள் பெரும்பாலும் முறைசாரா துறைகளால் கையாளப் படுகின்றது.
  • ஒவ்வோர் ஆண்டும் 58,000 கிலோ பாதரசம் மற்றும் புரோமினேற்றம் செய்யப்பட்ட தீ தடுப்பான்களைக் கொண்ட சுமார் 45 மில்லியன் கிலோ நெகிழிகள் சுற்றுச்சூழலில் வெளியிடப்படுகின்றன.
  • ஐரோப்பா (17.6 கிலோ), ஓசியானியா (16.1 கிலோ) மற்றும் அமெரிக்கா (14.1 கிலோ) ஆகியவை 2022 ஆம் ஆண்டில் தனிநபர் மின்னணுக் கழிவுகளை அதிக அளவில் உருவாக்கியுள்ளன.
  • ஆசியாவில் உள்ள நாடுகள் உலகின் மின்னணுக் கழிவுகளில் மொத்தத்தில் கிட்டத் தட்டப் பாதியளவினை (30 பில்லியன் கிலோ) உற்பத்தி செய்கின்றன.


நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில் -மார்ச்-2024:

Current Affairs Question and Answers in Tamil -March-2024:

மூன்றாவது மக்களாட்சிக்கான உச்சி மாநாடு (S4D3) ஆனது, ---- நடைபெற்றது ?

A) தென் கொரியா

B) பூடான் 
C) அமெரிக்கா
D) ரஷ்யா

ANS :  A) தென் கொரியா 

 

MARCH 2024-LIST OF IMPORTANT DAYS IN TAMIL-மார்ச் 25

பிறக்காத குழந்தையின் சர்வதேச தினம் : International Day of the Unborn Child

  • ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 25 அன்று பிறக்காத குழந்தையின் சர்வதேச தினமாகும்.
  • அதிகாரப்பூர்வமாக, இது முதன்முதலில் 1993 இல் எல் சால்வடாரில் கொண்டாடப்பட்டது, அங்கு மக்கள் பிறப்பதற்கான உரிமையைக் கொண்டாடினர். இந்த நாள் கருக்கலைப்பின் கொடூரத்தால் பிறக்காத குழந்தைகளின் இழந்த வாழ்க்கையை நினைவுகூருகிறது. இது போப் இரண்டாம் ஜான் பால் பதவிக் காலத்தில் நடந்தது.
  • போப் இந்த நாளை "வாழ்க்கைக்கு ஆதரவாக ஒரு நேர்மறையான விருப்பமாக" பார்த்தார்.

கைது செய்யப்பட்ட மற்றும் காணாமல் போன ஊழியர்களுடன் சர்வதேச ஒற்றுமை தினம் : International Day of Solidarity with Detained and Missing Staff Members

  • ஐக்கிய நாடுகள் சபையின் அருகில் உள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான (UNRWA) நிவாரணம் மற்றும் வேலை முகமையில் பணியாற்றிய முன்னாள் பத்திரிகையாளர் அலெக் கோலெட் கடத்தப்பட்ட ஆண்டு நினைவு தினத்தில் ஒவ்வொரு ஆண்டும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மற்றும் காணாமல் போன ஊழியர்களுடன் ஒற்றுமைக்கான சர்வதேச தினம் அனுசரிக்கப்படுகிறது.

 ஹோலி : Holi

  • இது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 25 அன்று கொண்டாடப்படுகிறது. ஹோலி ஒரு பண்டைய இந்து பாரம்பரியம் மற்றும் இந்து மதத்தில் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும்.
  • இது கடவுள் ராதா கிருஷ்ணரின் நித்திய மற்றும் தெய்வீக அன்பைக் கொண்டாடுகிறது. 
  • தீமையின் மீது நன்மையின் வெற்றியையும் நாள் குறிக்கிறது.


நடப்பு நிகழ்வுகள் 2024 

MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:

விருதுகள் கௌரவங்கள் 2024 :

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024

முக்கியமான நாட்களின் பட்டியல் 2024

அரசு அறிமுகப்படுத்தி முக்கிய செயலிகள் 2023:2024:


Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!