TODAY CURRENT AFFAIRS IN TAMIL -24.03.2024 |
ஆர்டர் ஆப் தி ட்ரூக் கியால்போ விருது
- 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி பூடான் சென்ற நிலையில் பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் மிக உயிரய விருதான ஆர்டர் ஆப் தி ட்ரூக் கியால்போ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
- பூடானை பொறுத்தமட்டில் ஆர்டர் ஆப் தி ட்ரூக் கியால்போ விருது என்பது வாழ்நாள் சாதனைக்கு அரசு சார்பில் வழங்கும் விருதாக உள்ளது. இதுதான் பூடானின் மிகவும் உயரிய விருதாக உள்ளது.
கல்ப சுவர்ணா
- மத்தியத் தோட்டப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் (CPCRI) ஆனது, 'கல்ப சுவர்ணா' என்ற புதிய குட்டை ரக தேங்காய் ரகத்தினையும், இரண்டு புதிய கலப்பின கோக்கோ ரகங்களையும் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
- அறிமுகப்படுத்தப்பட்ட கோக்கோ ரகங்களில் ஒன்று, கர்நாடகா மற்றும் கேரளாவின் அதிக மழைப்பொழிவு மிக்க பகுதிகளில் அதிகமாக காணப்படும் நெற்று கரும்புள்ளி அழுகல் நோய்த் தாக்குதலை எதிர்க்கும் திறன் கொண்டது.
- 'கல்ப சுவர்ணா' ரகம் ஆனது இளநீர் மற்றும் கொப்பரை தேங்காய் உற்பத்திக்கு ஏற்றது.
- VTL CH I மற்றும் VTL CH II எனப்படும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கோக்கோ வகைகள் அதிக கொழுப்பு மற்றும் ஊட்டச்சத்துகளைக் கொண்டுள்ளன.
- VTL CH | ரகமானது அதிக மகசூல் தரக்கூடியது என்பதோடு இதனைப் பாக்கு மற்றும் தென்னைத் தோட்டங்களில் ஊடு பயிராகவும் பயிரிட இயலும்.
SAKHI செயலி
- விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (VSSC) ஆனது, 'SAKHI' என்ற பல்பயன்பாட்டு செயலியை உருவாக்கியுள்ளது.
- SAKHI என்பது 'பணியாளர் குழுக்களுக்கு இடையிலான தகவல் தொடர்பிற்கான விண்வெளி சார்ந்த உதவி மற்றும் தகவல் மையம்' என்பதைக் குறிக்கிறது.
- ககன்யான் விண்வெளி ஆய்வுப் பயணத்தில் ஈடுபட்டுள்ள விண்வெளி வீரர்களுக்குத் தேவையான தொழில்நுட்பத் தகவல்களைத் தேடுவது அல்லது ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வது போன்ற பல பணிகளைச் செய்ய இது உதவும்.
- இரத்த அழுத்தம், இதயத் துடிப்பு மற்றும் ஆக்ஸிஜன் செறிவு போன்ற விண்வெளி வீரர்களின் ஆரோக்கியம் சார்ந்த தகவல்களையும் SAKHI செயலி மிக உன்னிப்பாகக் கண்காணிக்கும்.
'சோமா: தி ஆயுர்வேத கிச்சன்' :
- 'சோமா: தி ஆயுர்வேத கிச்சன்' எனப்படுகின்ற இந்தியாவின் முதல் ஆயுர்வேத சிற்றுண்டியகம் ஆனது, டெல்லி மகரிஷி ஆயுர்வேத மருத்துவமனையில் திறக்கப் பட்டுள்ளது.
வெங்காய ஏற்றுமதிக்கு தடை :
- வெங்காயத்தின் விலை அதிகரித்து விடாமல் உள்நாட்டில் விலைக் கட்டுக்குள் இருப்பதற்காக மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு 8.12.2023 முதல் 31.3.2024 வரை தடை விதித்துள்ளது.
- மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், வெங்காயத்தின் விலை அதிகரித்து விடாமல் இருப்பதற்காக வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், வெங்காயத்தின் விலை வெகுவாகக் குறைந்துள்ளது. நாட்டிலேயே அதிகளவு வெங்காயம் பயிரிடும் மகாராஷ்டிரத்தில் ஒரு குவிண்டால்(100 கிலோ) வெங்காயம் ரூ. 4,500க்கு விற்பனையான நிலையில், தற்போது குவிண்டாலுக்கு ரூ. 1,200 ஆக வெங்காய விலை கணிசமாகக் குறைந்துள்ளது.
நேபாளத்தின் சுற்றுலாத் தலைநகர்:
- நேபாளப் பிரதமர் பிரசந்தா அவர்கள், பொக்காரா நகரினை "நேபாளத்தின் சுற்றுலாத் தலைநகராக" அறிவித்துள்ளார்.இது நாட்டின் சுற்றுலாத் துறையில் அதன் முக்கியத்துவத்தைக் குறிக்கிறது.
மெட்டா:
- மெட்டா நிறுவனமானது, வரவிருக்கும் மக்களவைத் தேர்தலின் போது அதன் இணைய தளங்களில் பரவும் தவறான பொய்த் தகவல்களைக் கட்டுப்படுத்தவும், வாக்காளர் குறுக்கீடுகளை அகற்றவும், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை நன்கு அதிகரிக்கவும் ஒரு 'விரிவான அணுகுமுறையை' அறிமுகப்படுத்தியுள்ளது
முகாமில் அடைக்கப்பட்ட யானைகள் (இடமாற்றம் அல்லது போக்குவரத்து) விதிகள், 2024
- மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், 2024 ஆம் ஆண்டு முகாமில் அடைக்கப்பட்ட யானைகள் (இடமாற்றம் அல்லது போக்குவரத்து) விதிகளை அறிமுகம் செய்துள்ளது.
- TNPSC KEY POINTS : முகாமில் அடைக்கப்பட்ட யானைகள் விதிகள், 2024
டயானா மரபு விருதுகள்
- உலகில் மொத்தம் 20 பேருக்கு 'டயானா நினைவு விருது' வழங்கி கௌரவிக்கப் பட்டுள்ளது.
- இந்தியாவின் உதய் பாட்டியா மற்றும் மானசி குப்தா ஆகியோருக்கு 'டயானா நினைவு விருது' வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
- உதய்யின் குறைந்த விலையிலான கண்டுபிடிப்பு ஆனது மின்வெட்டுகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
- பெருந்தொற்றுகளின் போது, மானசி குப்தா ஆற்றிய மனநலச் சேவைகளுக்கு நல்ல அங்கீகாரம் வழங்கப்பட்டு அவருக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.
- இளவரசி டயானாவின் நினைவாக இந்த விருது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப் படுகிறது.
- இந்த விருது உலகின் மகத்தான இளைஞர்களுக்கு அவர்களின் சமூகப் பணி அல்லது மனிதாபிமானச் சேவைகளுக்காக வழங்கப்படுகிறது
MARCH 2024-LIST OF IMPORTANT DAYS IN TAMIL-மார்ச் 24:
உலக காசநோய் தினம்: World Tuberculosis Day
- காசநோயின் பேரழிவு தரும் உடல்நலம், சமூக மற்றும் பொருளாதார விளைவுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகளாவிய காசநோய் தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை முடுக்கிவிடவும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24 அன்று உலக காசநோய் (காசநோய்) தினத்தை நினைவுகூருகிறோம். .
- உலக காசநோய் தினத்தை டாக்டர் ராபர்ட் கோச் தனது மைக்கோபாக்டீரியம் டியூபர்குலோசிஸைக் கண்டுபிடித்ததன் நினைவாகக் கடைப்பிடிக்கிறோம்.
நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில் -மார்ச்-2024:
Current Affairs Question and Answers in Tamil -March-2024:
பிரதமர் மோடிக்கு எந்த நாட்டின் மிக உயிரய விருதான ஆர்டர் ஆப் தி ட்ரூக் கியால்போ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. ?
A) நேபோல்
B) பூடான்
C) அமெரிக்கா
D) ரஷ்யா
ANS : B) பூடான்
நடப்பு நிகழ்வுகள் 2024
- JANUARY 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / ஜனவரி 2024
- FEBRUARY 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / பிப்ரவரி2024
- MARCH 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / மார்ச் 2024
MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:
- TNPSC GK குறிப்புகள் தமிழ் JANUARY– 2024
- TNPSC GK குறிப்புகள் தமிழ் FEBRUARY – 2024
- TNPSC GK குறிப்புகள் தமிழ் MARCH– 2024
விருதுகள் கௌரவங்கள் 2024 :
- JANUARY AWARDS HONOURS 2024 IN TAMIL / ஜனவரி விருதுகள் ( தமிழில்) 2024
- FEBRUARY AWARDS HONOURS 2024 IN TAMIL / பிப்ரவரி விருதுகள் ( தமிழில்) 2024
- MARCH AWARDS HONOURS 2024 IN TAMIL / மார்ச் விருதுகள் ( தமிழில்) 2024
CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில்-ஜனவரி 2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில்-பிப்ரவரி 2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில் -மார்ச்-2024
முக்கியமான நாட்களின் பட்டியல் 2024
அரசு அறிமுகப்படுத்தி முக்கிய செயலிகள் 2023:2024: