CURRENT AFFAIRS IN TAMIL -16.03.2024 - 17.03.20244 |
18-வது மக்களவைத் தேர்தல் 2024 / Lok Sabha Election 2024
- நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடத்தப்படுகிறது. இதன்படி தமிழ்நாடு, புதுச்சேரியில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படும். ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
- நாடு முழுவதும் 18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும். இதன்படி ஏப்ரல் 19, 26, மே 7,13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகியதேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும்.
- ஏப்ரல் 19-ம் தேதி நடக்கும் முதல்கட்ட வாக்குப்பதிவின்போது தமிழ்நாடுஉட்பட 21 மாநிலங்களைச் சேர்ந்த 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படும்
- மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
- ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
- தேர்தல் அறிக்கைகள் பற்றிய வழிகாட்டுதல்கள்: 2008-ஆம் ஆண்டின் SLP(C) எண். 21455 இல் (S. சுப்பிரமணியம் பாலாஜி Vs தமிழ்நாடு அரசு மற்றும் பிற) உச்ச நீதிமன்றம் 5 ஜூலை 2013 தேதியிட்ட தீர்ப்பில், தேர்தல் அறிக்கைகளின் உள்ளடக்கம் தொடர்பாக வழிகாட்டுதல்களை உருவாக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
- பழநியில் நடைபெற உள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன்மாநாட்டுக்கு சிறப்பு பணிகளை மேற்கொள்ள 20 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
- தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின் பெருமையை உலகில் உள்ள முருக பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில், அறுபடை வீடுகளில் ஒன்றான பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்த, கடந்த பிப். 27-ம் தேதி 2024 முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த உயர்நிலை ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது. ஜூன் அல்லதுஜூலை மாதம் இந்த மாநாடு நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.
- அறுபடைவீடுகள் : 1.சுவாமிமலை 2.திருத்தணி 3.பழனி 4.பழமுதிர்சோலை 5.திருச்செந்தூர் 6.திருப்பரங்குன்றம்
- தமிழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, சென்னையில் வரும் 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஐந்து நாட்கள் சீரோடும் சிறப்போடும் சிந்தனைச் செயல்திறத்தோடும் மாபெரும் அளவில் நடத்தப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
- முதல் செம்மொழி மாநாடு கடந்த 2010ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் கோவையில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. முதல் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடந்து 15 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் இரண்டாவது மாநாட்டை நடத்த மாநில அரசு முடிவு செய்திருக்கிறது.
சென்னை துறைமுகம் சாதனை :
- கடந்த 2022-23-ம் நிதியாண்டில் 15.03.2024 வரை சென்னை துறைமுகம் மிக அதிக அளவாக 48.99 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டு சாதனை படைத்துள்ளது.
- இதற்கு முந்தைய நிதியாண்டில் 48.95 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டது.
ராணுவத்தின் முதல் அப்பாச்சி ஹெலிகாப்டர் படைப்பிரிவு:
- அமெரிக்காவின் போயிங் நிறுவனம் ராணுவ பயன்பாட்டுக்கான அப்பாச்சி ஹெலிகாப்டர்களை தயாரிக்கிறது. இந்த ஹெலிகாப்டர், 'பறக்கும் பீரங்கி' என்றுஅழைக்கப்படுகிறது. இந்திய விமானப் படைக்காக போயிங் நிறுவனத்திடம் இருந்து ஏற்கெனவே 22 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட்டு உள்ளன. இவை சீன, பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளன.
- இதைத் தொடர்ந்து இந்திய ராணுவத்துக்காக போயிங் நிறுவனத்திடம் இருந்து புதிதாக 6 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட உள்ளன. இவை வரும் மே மாதம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்த சூழலில் ஜோத்பூர் ராணுவ முகாமில் ராணுவத்தின் முதல் அப்பாச்சி ஹெலிகாப்டர் படைப்பிரிவு அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.
- இந்த ஹெலிகாப்டரில் பீரங்கிஅழிப்பு ஏவுகணைகள் பொருத்தப்பட்டிருக்கும். அப்பாச்சி ஹெலிகாப்டர்களால் ஒரு நிமிடத்தில் 128 இலக்குகளை தாக்கி அழிக்க முடியும். இரவிலும் எதிரிகளை அடையாளம் கண்டு தாக்குதல் நடத்த முடியும்
KIRTI : Khelo India ரைசிங் டேலண்ட் ஐடெண்டிஃபிகேஷன் திட்டம்:Khelo India Rising Talent Identification programme :
- மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஸ்ரீ அனுராக் சிங் தாக்கூர் சண்டிகரில் KIRTI என்ற தனித்துவமான தொடங்கி திட்டம் வைத்தார்."விளையாட்டு மற்றும் படிப்புகளுக்கு இடையே சரியான சமநிலையை வழங்க முடியும்" என்று கூறினார்.
- TNPSC SCHEME : KIRTI இன் அடிப்படை நோக்கம்
இந்தியாவின் முதல் விதவை மறுமணம் ஊக்குவிப்புத் திட்டம்
JHARKHAND'S WIDOW REMARRIAGE INCENTIVE SCHEME : (Widow Remarriage Incentive Scheme)
- நாட்டிலேயே முதன்முறையாக, ஜார்க்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன் மார்ச் 6, 2024 'வித்வா புனர்விவா ப்ரோத்சஹன் யோஜனா' (விதவை மறுமணம் ஊக்குவிப்புத் திட்டம்) தொடங்கினார்.
- இதன் கீழ், கணவர் இறந்த பிறகு மீண்டும் திருமணம் செய்து கொள்ள விரும்பும் பெண்கள், 2 லட்சம் அரசு ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
- TNPSC KEY POINTS : 'வித்வா புனர்விவா ப்ரோட்சஹன் யோஜனா'வின் நோக்கம்
உலக ஆன்மிக திருவிழா ஹைதராபாத் : Global Spirituality Mahotsav
- மத்திய கலாச்சார அமைச்சகம் , ஹார்ட்ஃபுல்னெஸ் நிறுவனத்துடன் இணைந்து மார்ச் 14 முதல் 17 வரை ஹைதராபாத்தில் உள்ள கன்ஹா வனத்தில் உலகளாவிய ஆன்மிக மஹோத்ஸவை நடத்த உள்ளது. ஜனாதிபதி திரௌபதி முர்மு இந்த நிகழ்வைத் தொடங்கி வைக்கிறார்.
- உலகளாவிய ஆன்மீக மஹோத்சவ் அனைத்து மதங்களின் சாரத்தையும் தழுவி உலக அமைதியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உலகளவில் அன்பு, அமைதி மற்றும் ஒற்றுமையைப் பரப்புவதற்கான பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை இந்த நிகழ்விற்கு முக்கிய உத்வேகமாக உள்ளது.
வட இந்தியாவின் முதல் அரசு ஹோமியோபதி கல்லூரி:North India’s first Govt Homoeopathic College
- வட இந்தியாவின் முதல் அரசு ஹோமியோபதி கல்லூரி, மத்திய அரசின் நிதியுதவியுடன் ரூ .80 கோடி செலவில் ஜம்மு & காஷ்மீரில் கத்துவா மாவட்டத்தின் ஜஸ்ரோட்டா பகுதியில் அமையும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
A) கோயம்புத்தூர்
MARCH 2024-LIST OF IMPORTANT DAYS IN TAMIL-மார்ச் 16
தேசிய தடுப்பூசி தினம்: National Vaccination Day :
- தேசிய தடுப்பூசி தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 16 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் தடுப்பூசியின் முக்கியத்துவத்தையும் பொது சுகாதாரத்தில் அதன் பங்கையும் தெரிவிக்கிறது.
- 1995 ஆம் ஆண்டு இதே நாளில், இந்தியாவில் வாய்வழி போலியோ தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டது.
- கருப்பொருள்: Vaccines work for all.
- உலக தூக்க நாள் (World Sleep Day) ஆண்டுதோறும் மார்ச் மாதத்தின் இரண்டாவது முழுமையான வாரத்தின் வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு தூக்க மருத்துவத்துக்கான உலக அமைப்பினால் 2008 ஆம் ஆண்டு முதல் நினைவுகூரப்படுகிறது.
- கருப்பொருள்:' உலகளாவிய ஆரோக்கியத்திற்கான தூக்க சமநிலை'.
- JANUARY 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / ஜனவரி 2024
- FEBRUARY 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / பிப்ரவரி2024
- MARCH 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / மார்ச் 2024
MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:
- TNPSC GK குறிப்புகள் தமிழ் JANUARY– 2024
- TNPSC GK குறிப்புகள் தமிழ் FEBRUARY – 2024
- TNPSC GK குறிப்புகள் தமிழ் MARCH– 2024
விருதுகள் கௌரவங்கள் 2024 :
- JANUARY AWARDS HONOURS 2024 IN TAMIL / ஜனவரி விருதுகள் ( தமிழில்) 2024
- FEBRUARY AWARDS HONOURS 2024 IN TAMIL / பிப்ரவரி விருதுகள் ( தமிழில்) 2024
- MARCH AWARDS HONOURS 2024 IN TAMIL / மார்ச் விருதுகள் ( தமிழில்) 2024
CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில்-ஜனவரி 2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில்-பிப்ரவரி 2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில் -மார்ச்-2024
முக்கியமான நாட்களின் பட்டியல் 2024