MARCH 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL -14.03.2024

TNPSC PAYILAGAM
By -
0

TODAY CURRENT AFFAIRS IN TAMIL -14.03.2024
TODAY CURRENT AFFAIRS IN TAMIL -14.03.2024


ஒரே நாடு ஓரே தேர்தல் அறிக்கை:

One Nation One Election RamNathKovind Led Panel Recommends

  • நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டப்பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆராய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலை குழு கடந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி அமைக்கப்பட்டது
  • இக்குழுவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநிலங்களவை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், முன்னாள் நிதிக்குழு தலைவர் என்.கே. சிங், முன்னாள் மக்களவை பொதுச் செயலாளர் குபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் சிறப்பு அழைப்பாளராக அறிவிக்கப்பட்டார்.
  • தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகள், சட்ட நிபுணர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரிடம் இருந்து இக்குழு ஆலோசனைகளை பெற்றது. 191 நாட்கள் இதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு, ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் இன்று வழங்கியது.
  • TNPSC KEY POINTS : ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகள்


புதிய தேர்தல் ஆணையர்கள் தேர்வு / NEW ELECTION COMMISSIONER

  • தேர்தல் ஆணையர் அருண் கோயலின் திடீர் ராஜினாமாவை அடுத்து, புதிய தேர்தல் ஆணையர்களாக இருவரை தேர்வு செய்வதற்கான தேர்வுக்குழுக் கூட்டம் டெல்லியில் 14.03.2024 நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்த தேர்வுக் குழுவில், சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் உள்ளனர். 
  • இக்குழு இன்று (14.03.2024) கூடி புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார், சுக்பிர் சிங் சாந்து ஆகியோரை தேர்வு செய்துள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், அலுவலக நிபந்தனைகள் மற்றும் அலுவலக விதிமுறைகள்) மசோதா, 2023:
  • ராஜ்யசபா சமீபத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், அலுவலக நிபந்தனைகள் மற்றும் அலுவலக விதிமுறைகள்) மசோதா, 2023க்கு டிசம்பர் 12 அன்று ஒப்புதல் அளித்தது. குளிர்காலத்தில் இந்த மசோதா சட்டமாக்கப்படுவதைக் காணலாம். இந்த மசோதா தலைமை தேர்தல் ஆணையர் (CEC) மற்றும் பிற தேர்தல் ஆணையர்களின் நியமன நடைமுறைகளை வகுத்துள்ளது.
  • உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்கும் குழுவில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இடம்பெற்றிருப்பார். ஆனால், இந்தக் குழுவில் தற்போதைய மத்திய அரசு தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்கும் சட்டவிதியில் திருத்தம் கொண்டுவந்தது. புதிய சட்டத்தின்படி, பிரதமராக இருப்பவர், அவரால் நியமிக்கப்பட்ட ஒரு மத்திய அமைச்சர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய மூன்று பேர் அடங்கிய குழுவே தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்க முடியும்.


ரஞ்சி கோப்பை /  Ranji Trophy Champion 2024
  • ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் விதர்பா அணியை 169 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி 42வது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.
  • ஆட்ட நாயகனாக முஷீர் கானும், தொடர் நாயகனாக தனுஷ் கோடியானும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

செமிகண்டக்டர் ஆலை:
  • குஜராத் மற்றும் அசாம் மாநிலங்களில் ரூ.1.25 லட்சம் கோடி மதிப்பிலான செமிகண்டக்டர் ஆலை அமைப்பதற்கான திட்டத்துக்கு பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
  • குஜராத் மாநிலத்தில் சனந்த் மற்றும் தோலேரா ஆகிய 2 இடங்களிலும், அசாமில் மோரிகானிலும் என மொத்தம் 3 புதிய செமிகண்டக்டர் ஆலைகள் இந்த திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட உள்ளன


நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில் -மார்ச்-2024:

Current Affairs Question and Answers in Tamil -March-2024:

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆராய்வதற்காக யார் தலைமையில் உயர்நிலை குழு கடந்த ஆண்டு 2023 செப்டம்பர் 2ம் தேதி அமைக்கப்பட்டது.  ?

A) மாண்புமிகு திரு. நீதிபதி பர்பதி குமார் கோஸ்வாமி

B) மாண்புமிகு திரு. நீதிபதி பஹருல் இஸ்லாம்
C) முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல்
D) முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 

ANS : D) முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 




MARCH 2024-LIST OF IMPORTANT DAYS IN TAMIL-மார்ச் 14

 PI நாள்: PI Day

  • ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 14 அன்றுகணித மாறிலியான பையை அங்கீகரிக்க உலகம் பை தினத்தை கொண்டாடுகிறது
  • இது ஒரு வட்டத்தின் சுற்றளவுக்கும் அதன் விட்டத்திற்கும் உள்ள விகிதமாக வரையறுக்கப்படுகிறது மற்றும் பைக்கான மதிப்பு 3.14 ஆகும்.

நதிகளின் சர்வதேச நடவடிக்கை தினம்: International Day of Action of Rivers

  • சர்வதேச நடவடிக்கை தினம் மார்ச் 14 அன்று உலகம் முழுவதும் கொண்டாடுகிறது. நதிகளின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்தவே இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது
  • உலகளாவிய அளவில் மேலாண்மைநதி மாசுபாடுநதிப் பாதுகாப்பு போன்றவற்றை ஆதரிக்கும் நோக்கத்தை அதிகரிப்பது குறித்த பிரச்சினைகளை விவாதிக்கஎல்லைகளைத் தாண்டி மக்களைக் கொண்டு வருவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
சர்வதேச கணித தினம் : International Day Of Mathematics
  • சர்வதேச கணித தினம் (IDM) என்பது உலகளாவிய கொண்டாட்டமாகும். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 14 அன்று உலகம் முழுவதும் கொண்டாடுகிறது. IDM இன் இணையதளம் idm314.org ஆகும் .
  • யுனெஸ்கோவின் நிர்வாகக் குழுவின் 205வது அமர்வில் மார்ச் 14 ஆம் தேதி சர்வதேச கணித தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. நவம்பர் 2019 இல் யுனெஸ்கோவின் பொது மாநாட்டின் 40 வது அமர்வில் இது ஏற்றுக்கொள்ளப்பட்டது. 
  • 2024க்கான கருப்பொருள்:: கணிதத்துடன் விளையாடுதல்

 உலக சிறுநீரக தினம் (World Kidney Day)

  • ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் இரண்டாம் வியாழக்கிழமை அன்று இந்த தினம் கொண்டாடப்படுகிறது. சிறுநீரகங்களின் ஆரோக்கியத்துக்கு அளிக்க வேண்டிய முக்கியத்துவம் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது
  • கருப்பொருள்: Kidney Health For All



நடப்பு நிகழ்வுகள் 2024 

MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:

விருதுகள் கௌரவங்கள் 2024 :

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024

முக்கியமான நாட்களின் பட்டியல் 2024

அரசு அறிமுகப்படுத்தி முக்கிய செயலிகள் 2023:2024:


Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!