TODAY CURRENT AFFAIRS IN TAMIL -13.03.2024 |
Welcome to our blog post on Today's Current Affairs-13.03.2024 , specifically tailored for competitive exams. This post is designed to help aspirants of various competitive exams like Banking, SSC, Railways, Insurance, UPSC, TNPSC and State Exams stay updated with the latest happenings around the world.
TODAY CURRENT AFFAIRS IN TAMIL -13.03.2024
முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு :
- நடப்பு நிதியாண்டில் இருந்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
- இதன்மூலம் 1.20 லட்சம் முன்னாள் ராணுவ வீரர்கள் பயன் பெறுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. எனினும், வருமான வரி செலுத்துபவராக இருக்கும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இந்தத் திட்டம் பொருந்தாது என்றும் தமிழக அரசு தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
ராணுவ தளவாட இறக்குமதி
ராணுவ தளவாட இறக்குமதியில் இந்தியா தொடர்ந்து முதல் இடம்வகித்து வருவதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி,
- உலகளாவிய ஆயுத இறக்குமதியில் இந்தியாவின் பங்கு 9.8% ஆக உள்ளது.
- இந்தப் பட்டியலில் 2-ம் இடத்தில் சவூதி அரேபியா (8.4%),
- கத்தார்(7.6%),
- உக்ரைன் (4.9%),
- பாகிஸ்தான் (4.3%),
- ஜப்பான் (4.1%)
- எகிப்து (4%),
- ஆஸ்திரேலியா(3.7%),
- தென்கொரியா (3.1%),
- சீனா (2.9%) உள்ளன.
இந்தியா அதிகபட்சமாக ரஷ்யாவிடமிருந்து 36% இறக்குமதி செய்கிறது. பிரான்ஸிடமிருந்து 33%,அமெரிக்காவிடமிருந்து 13% இறக்குமதி செய்கிறது.
ஒருங்கிணைந்த கட்டிட விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு:
- தமிழகத்தில் 750 சதுர மீட்டர் அல்லது 8 வீடுகள் வரை கட்டப்படும்போது அதற்கு பணி முடிப்பு சான்றிதழ் தேவையில்லை என்பதுடன் கட்டிடத்தின் உயரத்தை 12 மீட்டரில் இருந்து 14 மீட்டராக உயர்த்துவது தொடர்பாக ஒருங்கிணைந்த கட்டிட விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
- எனவே, அதிகபட்சம் 8 வீடுகள் அல்லது 750 சதுர மீட்டருக்குள் உள்ள கட்டிடங்களுக்கு பணி முடிப்பு சான்றிதழ் பெற அவசியம் இல்லை. இதன் மூலம், எளிதாக மின்சாரம், குடிநீர், கழிவுநீர் இணைப்புகளை பெற இயலும்.
- அதேபோல், அதிக உயரமில்லாத கட்டிடங்களை பொறுத்தவரை, அக்கட்டிடத்தின் அதிகபட்ச உயரம் 12 மீட்டரில் இருந்து 14 மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், அக்குடியிருப்புகளில் அமையும் வீடுகளில் தேவையான வசதிகளை மேற்கொள்ள இயலும்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று (13.3.2024) முகாம் அலுவலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் 9,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசிற்கும் டாடா மோட்டார்ஸ் குழுமத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது
முதல் தனியார் ராக்கெட்:
- மேற்கு ஜப்பானின் வகாயாமா பகுதியின் குஷிமோடோ ஏவுதளத்திலிருந்து ஸ்பேஸ் ஒன் என்ற தனியார் நிறுவனத்தின் ராக்கெட் இன்று (மார்ச் 13) விண்ணில் ஏவப்பட்டது.
- பெரும் புகையுடன் விண்ணை நோக்கி கிளம்பிய ராக்கெட் புறப்பட்ட சில நொடிகளில் வெடித்துச் சிதறியது.
- ஜப்பான் சார்பில் விண்ணுக்கு செலுத்தப்பட்ட முதல் தனியார் ராக்கெட் இதுவாகும்.
ஏழாம் தலைமுறை இந்திய வம்சாவளி மோரீஷஸ் நாட்டவா்களுக்கும் OCI அங்கீகாரம்:
- ஏழாம் தலைமுறை இந்திய வம்சாவளி மோரீஷஸ் நாட்டவா்களுக்கும் வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளியினா் (OCI The Overseas Citizenship of India – வெளிநாட்டு இந்திய குடியுரிமை) அங்கீகாரம் அளிப்பதற்கான சிறப்பு பரிந்துரைக்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளதாக குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு அறிவித்தாா்.
- மோரீஷஸ் நாட்டுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு 3 நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளாா்.
- மோரீஷஸின் சுதந்திர தினமான மாா்ச் 12-ஆம் தேதியன்று(செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட்ட அந்த நாட்டின் 56-ஆவது தேசிய தின கொண்டாட்டத்தின் தலைமை விருந்தினராக அவா் பங்கேற்றாா்.
- ஆகஸ்ட் 2005 இல் குடியுரிமைச் சட்டம்-1955 ஐத் திருத்துவதன் மூலம் இந்திய வெளிநாட்டுக் குடியுரிமைத் திட்டம் (OCI) அறிமுகப்படுத்தப்பட்டது.
- வெளிநாட்டு இந்திய குடியுரிமை: குடியுரிமைச் சட்டம், 1955 இன் பிரிவு 5(1) (g) இன் விதிகளின்படி, 5 ஆண்டுகளுக்கு OCI ஆகப் பதிவு செய்து, மேற்கண்ட 5 ஆண்டுகளில் 1 வருடம் இந்தியாவில் வசிக்கும் ஒருவர் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்
ஐசிசி டெஸ்ட் பௌலிங் தரவரிசை:
ஐசிசி டெஸ்ட் பௌலிங் தரவரிசையில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் ரவி அஸ்வின் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் தனது 100வது டெஸ்ட் போட்டியை விளையாடினார் தமிழகத்தைச் சேர்ந்த ரவி அஸ்வின். இந்தப் போட்டியில் (4+5) 9 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
- ஐசிசி பௌலிங் டெஸ்ட் தரவரிசையில் 870 புள்ளிகளுடன் அஸ்வின் முதலிடம் பிடித்துள்ளார்.
- 2ஆம் இடத்தில் ஆஸி. வீரர் ஹேசில்வுட்டும்
- 3ஆம் இடத்தில் இந்திய வீரர் ஜஸ்ப்ரீத் பும்ராவும் இருக்கிறார்.
பிப்ரவரி மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர் 2024:
- பிப்ரவரி மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர் விருதை இந்திய அணியின் இளம் அதிரடி பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் வென்றுள்ளார்
- இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு தொடர் நாயகன் விருது அளிக்கப்பட்டது.
நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில் -மார்ச்-2024:
Current Affairs Question and Answers in Tamil -March-2024:
ராணுவ தளவாட இறக்குமதியில் இந்தியா தொடர்ந்து முதல் இடம்வகித்து வருவதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, உலகளாவிய ஆயுத இறக்குமதியில் இந்தியாவின் பங்கு -----% ஆக உள்ளது ?
A) 9.8%
B) 10%
C) 11.8%
D) 15%
ANS : A) இந்தியாவின் பங்கு 9.8%
நடப்பு நிகழ்வுகள் 2024
- JANUARY 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / ஜனவரி 2024
- FEBRUARY 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / பிப்ரவரி2024
- MARCH 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / மார்ச் 2024
MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:
- TNPSC GK குறிப்புகள் தமிழ் JANUARY– 2024
- TNPSC GK குறிப்புகள் தமிழ் FEBRUARY – 2024
- TNPSC GK குறிப்புகள் தமிழ் MARCH– 2024
விருதுகள் கௌரவங்கள் 2024 :
- JANUARY AWARDS HONOURS 2024 IN TAMIL / ஜனவரி விருதுகள் ( தமிழில்) 2024
- FEBRUARY AWARDS HONOURS 2024 IN TAMIL / பிப்ரவரி விருதுகள் ( தமிழில்) 2024
- MARCH AWARDS HONOURS 2024 IN TAMIL / மார்ச் விருதுகள் ( தமிழில்) 2024
CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில்-ஜனவரி 2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில்-பிப்ரவரி 2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில் -மார்ச்-2024
முக்கியமான நாட்களின் பட்டியல் 2024
அரசு அறிமுகப்படுத்தி முக்கிய செயலிகள் 2023:2024: