MARCH 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL 08.03.2024

TNPSC PAYILAGAM
By -
0

TODAY CURRENT AFFAIRS IN TAMIL 08.03.2024
TODAY CURRENT AFFAIRS IN TAMIL 08.03.2024


தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 25 பேருக்கு விருது:

  • தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஐம்பெரும் விழா  நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் தேவநேயப் பாவணர்விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட விருதாளர் ப.அருளிக்கு தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழுடன் விருது தொகை ரூ.2,00,000-ஐ வழங்கினார்.
  • இதேபோல், வீரமாமுனிவர் விருது ச.சச்சிதானந்தத்க்கும், நற்றமிழ் பாவலர் விருது அரிமாபாமகனுக்கும், புதுக் கவிதை வகைப்பாட்டில் தேர்வு செய்யப்பட்ட கவுதமன் நீல்ராசு உள்பட 25 பேருக்கு அமைச்சர் சாமிநாதன் விருதுகளை வழங்கினார்.
  • இதையடுத்து, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள பழந்தமிழர் இலக்கியங்களின் ஒலி நூல்கள் மற்றும் கவிஞர் தமிழ் ஒளி குறித்தான ‘கவிஞர் தமிழ்ஒளியின் படைப்புவெளி’ எனும் நூலை வெளியிட்டார்.

NITI for States :மாநிலங்களின் கொள்கை உருவாக்கத்துக்கு புதிய தளம்: நிதி ஆயோக் அறிமுகம்

  • மத்திய அரசு கடந்த 2015-ம் ஆண்டு திட்டக்குழுவைகலைத்துவிட்டு, நிதி ஆயோக் அமைப்பை உருவாக்கியது. இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் முன் னெடுத்துச் செல்வதற்கான கொள்கைகளை பரிந்துரை செய்யும் பணியை இவ்வமைப்பு மேற்கொண்டு வருகிறது.
  • இந்நிலையில், மாநிலங்கள் முக்கிய துறைகளில் சிறந்த திட்டங்களை வகுக்க உதவும் வகையில் ‘NITI for States’ என்ற புதிய தகவல் தளத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் தளத்தை மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்  தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் விண்வெளித் தொழில்களை ஊக்குவிக்க ஒப்பந்தம்:

  • டிட்கோ நிறுவனம், இன்-ஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. மார்ச் 6-ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் இன்-ஸ்பேஸ் நிறுவனத் தலைவர் பவன் குமார் கோயங்கா ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. டிட்கோ நிர்வாக இயக்குநர் சந்தீப் நந்தூரி, இன்-ஸ்பேஸ் இணைச் செயலாளர் லோச்சன் செஹ்ரா ஆகியோர் ஒப்பந்தத்தை பரிமாறிக்கொண்டனர்.
  • இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் தமிழகத்தில் விண்வெளித் தொழில்களை ஊக்குவிக்கவும், உற்பத்திப் பிரிவை தொடங்குவதற்குமான வழிமுறைகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளது.
  • இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், விண்வெளித்துறையில் புத்தொழில் விண்கலம், ராக்கெட் மற்றும் உதிரிபாகங்கள் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, வடிவமைப்பு, தயாரிப்பு போன்றவற்றுக்கு பெரிதும் உதவும். உலக விண்வெளி தொழில்துறையில் தமிழகம் ஒரு மிகச்சிறந்த முனையமாக உருவெடுக்க இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பெரும் பங்கு வகிக்கும்.


MARCH 2024-LIST OF IMPORTANT DAYS IN TAMIL-மார்ச் 8

 சர்வதேச மகளிர் தினம்: International Women’s Day: 

  • மார்ச் 8. சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
  • சர்வதேச மகளிர் தினத்துக்கான கிளாராவின் யோசனைக்கு நிலையான தேதி எதுவும் ஆரம்பத்தில் இருந்திருக்கவில்லை. 1917இல் ரஷ்ய பெண்கள் “உணவும் அமைதியும்” என்றபெயரில் புரட்சிப் போராட்டத்தைத் தொடங்கும்வரை இந்த தேதி இந்நாளில்தான் கொண்டாடப்பட வேண்டும் என்பது முறைப்படுத்தப்படவில்லை – அவர்களின் நான்கு நாட்கள் போராட்டம், ட்சார் பதவி விலகும் கட்டாயத்தை தூண்டியது. மேலும், தற்காலிக அரசாங்கம் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கியது. 
  • ரஷ்யாவில் அப்போது பயன்பாட்டில் இருந்த ஜூலியன் நாட்காட்டியில் பெண்கள் வேலைநிறுத்தம் தொடங்கிய தேதி பிப்ரவரி 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆக இருந்தது. கிரிகோரியன் நாட்காட்டியில் இந்த நாள் மார்ச் 8ஆம் தேதி ஆக இருந்தது. அதுவே மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.
  • முதன்முதலில் 1911இல் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தில் கொண்டாடப்பட்டது. நூற்றாண்டு விழா 2011இல் கொண்டாடப்பட்டது. எனவே இந்த ஆண்டு தொழில்நுட்ப அளவில் 112வது சர்வதேச மகளிர் தினத்தை நாம் கொண்டாடுகிறோம்.

நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில் -மார்ச்-2024:

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள பழந்தமிழர் இலக்கியங்களின் ஒலி நூல்கள் மற்றும் கவிஞர் தமிழ் ஒளி குறித்தான ----------புத்தகத்தின் பெயர்?

A) கவிஞர் தமிழ்ஒளியின் படைப்புவெளி

B) அன்பின் நிமித்தங்கள்
C) புயலிலே ஒரு தோணி
D) கடலுக்கு அப்பால்

ANS : A) கவிஞர் தமிழ்ஒளியின் படைப்புவெளி



நடப்பு நிகழ்வுகள் 2024 

MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:

விருதுகள் கௌரவங்கள் 2024 :

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024

முக்கியமான நாட்களின் பட்டியல் 2024

அரசு அறிமுகப்படுத்தி முக்கிய செயலிகள் 2023:2024:

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!