Nature-of-Universe: Model Question-Answer |
Introduction:
Welcome to our blog post on TNPSC General Science-Nature-of-Universe model questions and answers. This post is designed to help aspirants of the Tamil Nadu Public Service Commission (TNPSC) exams to prepare for the General Science section.
The Importance of Model Online Tests:
Model online tests are an invaluable resource for any TNPSC aspirant. They help you understand the exam pattern, manage your time effectively, and identify areas where you need improvement.
Where to Find Model Online Tests:
Model online tests are a key part of your TNPSC preparation strategy. They can help you familiarize yourself with the exam pattern, improve your speed and accuracy, and boost your confidence. So, start taking these tests today and step closer to your dream government job!
பேரண்டத்தின் இயல்பு-Nature-of-Universe: Model Question-Answer -7 TH STD IN TAMIL
1. நிலவானது பூமியை ஒரு சுற்று சுற்றி வர __________ நாட்களாகும்.
அ) 25
ஆ) 26
இ) 27
ஈ) 28
விடை : இ) 27
2. இன்றைய நாளில் கார்த்திகை நட்சத்தித்திற்கு அருகில் நிலவு இருந்தால் 27 நாட்கள் கழிந்து நிலவானது __________ நட்சத்திரத்திற்கு அருகில் இருக்கும்.
அ) பரணி
ஆ) கார்த்திகை
இ) ரோஹிணி
ஈ) அஸ்வினி
விடை : ஈ) அஸ்வினி
3. __________தொலை நோக்கியைக் கண்டறிந்தார்.
அ) ஹான் லிப்பெர்ஷே
ஆ) கலிலியோ
இ) நிக்கோலஸ் காப்பர்நிக்கஸ்
ஈ) தாலமி
விடை : அ) ஹான் லிப்பெர்ஷே
4. அனேக இளம் நட்சத்திரங்களைக் கொண்ட விண்மீன் திரளுக்கு __________ என்று பெயர்.
அ) நீள்வட்ட விண்மீன் திரள்
ஆ) ஒழுங்கற்ற விண்மீன் திரள்
இ) குழுக்கள்
ஈ) சுருள் விண்மீன் திரள்
விடை : ஈ) சுருள் விண்மீன் திரள்
5. __________ துணைக்கோளை நிறுவியவுடன் ISRO 4 டன் எடையுடைய துணைக்கோள்களை ஏவும் திறன் பெறுகிறது.
அ) GSAT- 13
ஆ) GSAT- 14
இ) GSAT-17
ஈ) GSAT- 19
விடை : ஈ) GSAT-19
II. கோடிட்ட இடத்தை நிரப்பவும்
1. வளர்பிறை என்பது __________
விடை : வளர்தல் அல்லது வெளிச்சத்தில் விரிவடைதல்
2. சூரியமையக் கொள்கையை முன் மொழிந்தவர் __________
விடை : நிக்கோலஸ் கோப்பர் நிக்கஸ்
3. அண்டத்தின் ஆதியைக் குறித்துக் கூறும் மாதிரி __________ ஆகும்.
விடை : பெரு வெடிப்பு கோட்பாடு
4. ஆகாயத்தின் பெரும் பகுதியை அடக்கியுள்ள விண்மீன் மண்டலம் __________ ஆகும்
விடை : உர்சா மேஜர்
5. இந்தியா ஏவிய முதல் ஏவுகணை __________ ஆகும்.
விடை : ஆர்யபட்டா
III. சரியா - தவறா. தவறெனில் காரணம் கூறவும்
1. முழு நிலவு நாளன்று சூரியன் மேற்கில் மறையும் பொழுது நிலவு மேற்கில் தோன்றும்
விடை : தவறு
சரியான விடை : முழு நிலவு நாளில் சூரியன் மேற்கில் மறையும் அதே நேரத்தில் நிலவு கிழக்கில் உதிக்கிறது.
2. நிலவானது பாதியை விடக் குறைவாக ஒளிரும் நிலைக்கு பிறை நிலவு என்று பெயர்.
விடை : சரி
3. கலிலியோ புவி மையக் கொள்கையை வழி மொழிந்தார்.
விடை : தவறு
சரியான விடை : சூரிய மையக் கோட்பாட்டிற்கு ஆதரவாக கலிலியோ வெள்ளிக்கோளை உற்று நோக்கி கண்டறிந்த ஆதாரங்களை அளித்தார்.
4. நமது பால்வெளித் திரளானது நீள்வட்ட விண்மீன் திரள் ஆகும்.
விடை : தவறு
சரியான விடை : நமது பால்வெளித் திரளானது சுருள் விண்மீன் திரள் ஆகும்.
5. நமது சூரியக் குடும்பத்திலுள்ள வெள்ளிக் கோளுக்கு நிலவு கிடையது.
விடை : சரி
IV. பொருத்துக.
1. ரோகினி – அ. GSLV–Mark III
2. GSAT-14 – ஆ. GSLV Mark III M1
3. GSAT-19 – இ. SLV-3
4. சந்த்ரயான்–2 – ஈ. PSLV-XL- C25
5. மங்கள்யான் – உ. GSLV-D5
விடைகள்
1. ரோகினி – இ. SLV-3
2. GSAT-14 – உ. GSLV-D5
3. GSAT-19 – ஆ. GSLV Mark III M1
4. சந்த்ரயான்–2 – அ. GSLV–Mark III
5. மங்கள்யான் – ஈ. PSLV-XL- C25
V. ஒப்புமை
1. பழைய நட்சத்திரங்கள் : நீள்வட்ட விண்மீன்திரள் :: புது நட்சத்திரங்கள் : _________
விடை: சுருள் விண்மீன்திரள்கள்
2. அருகிலுள்ள விண்மீன் திரள் : ஆண்ட்ரமெடா :: அருகிலுள்ள நட்சத்திரம் : _________
விடை: ஆல்ஃபா சென்டாரி
VI. மிகக் குறுகிய விடையளிக்கவும்
1. __________ என்ற வார்த்தை நிலவானது நிலவு பாதியை விடக் குறைவாக ஒளிரும் நிலை ஆகும். (பிறை நிலவு / கூனல் நிலவு)
விடை: பிறை நிலவு
2. __________ மற்றும் __________ கோள்கள் நடு இரவில் தோன்றாது.
விடை: புதன் மற்றும் வெள்ளி
3. சூரியனைச் சுற்றி வர செவ்வாய் எடுத்துக் கொள்ளும் காலம்
விடை: 687 நாட்கள்
4. வெள்ளியின் அளவு எந்த கட்டத்தில் மிகச் சிறியதாக இருக்கும்?
விடை: பிறை நிலவு
5. பெருவெடிப்புக் கோட்பாட்டிற்கான ஒரேயொரு சான்று
விடை: காஸ்மிக் நுண்ணலை பின்னணி (CMB)
6. அதிக அளவு வாயு மற்றும் துகள்களைக் கொண்ட விண்மீன் திரள் __________
விடை: சுருள் விண்மீன் திரள்கள்
7. உலகின் முதல் ஏவு வாகனத்தை ஏவிய நாடு எது?
விடை: 7. ரஷ்யா (ஸ்புட்னிக்-1)
ONE LINER -Nature-of-Universe:
1. என் குறிக்கோள் எளிதானது அது பிரபஞ்சம் ஏன் அவ்வாறு உள்ளது? ஏன் அது நிலையாக நிற்கிறது. என்பதனை முழுமையாக புரிந்துகொள்ளுதல் ஆகும்" என கூறியவர்- ஸ்டீபன் ஹாக்கிங்.
2.கி.மு. 6ம் நூற்றாண்டு பூமியை மையமாகக் கொண்டு சூரியன், நிலவு மற்றும் பிற கோள்கள் பிரபஞ்சத்தில் இயங்குகின்றன என்ற கருத்தை முன்மொழிந்தவர்கள்:
1. பிளாட்டோ
2. அரிஸ்டாட்டில்
3. கிரேக்க தத்துவவியலாளர் - பிளாட்டோ, அரிஸ்டாட்டில்.
4. பிளாட்டோவின் சீடர் - அரிஸ்டாட்டில்.
5. கிரேக்க ரோமானியா கணிதவியலாளர் – தாலமி.
6. ஆரியபட்டயம்" என்ற வானியல் நூலினை எழுதியவர் – ஆரியபட்டர்.
7. நிலவு பூமியை எத்தனை நாட்களில் சுற்றி வருகிறது – 27.
8.தேய்பிறை காலத்தின்போது அரை நிலவு எவ்வாறு அழைக்கபடுகிறது- முதல் கால் பகுதி.
9. வளர்பிறை காலத்தில் நிலவானது எவ்வாறு அழைக்கபடுகிறது- மூன்றாவது கால் பகுதி.
10.சந்திரன் அரை வட்டத்திற்கு மேல் ஒளிரும் கட்டங்களை எவ்வாறு அழைக்கிறோம்- கிப்பஸ்.
11. வளர்பிறை என்பது - வளர்தல் (அ) வெளிச்சத்தில் விரிவடைதல் .
12. தேய்பிறை என்பது - குறைதல் (அ) வெளிச்சம் குறைதல் .
13. தொலைநோக்கி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது - ஹான்ஸ் லிப்பெர்ஷே.
14. தொலைநோக்கியை முதன் முறையாக பயன்படுத்தியவர் – கலிலியோ.
15.வியாழனைச் சுற்றி துணைக்கோள்கள் இருப்பதனையும் சனி கிரகத்தினைச் சுற்றி வளையம் இருப்பதனையும் கண்டறிந்தவர் – கலிலியோ.
16.கலிலியோ தொலைநோக்கி உதவியுடன் கண்டறிந்த மிக முக்கியமான கணிப்பு - வெள்ளி.
17. போலந்து நாட்டு வானவியாளர் – நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்.
18.பூமி, பிற கோள்கள் தான் சூரியனை சுற்றி வருகின்றன என்பதை நிருபித்தவர்- நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்.
19. பூமி எத்தனை நாள்களில் சூரியனை சுற்றி வருகின்றது- 365 நாட்கள்.
20. செவ்வாய் எத்தனை நாட்களில் சூரியனை சுற்றி வருகின்றது - 687 நாட்கள்.
21.1610 – 1611-ல் தொலைநோக்கி மூலம் கலிலியோ எந்த கோளை உற்றுநோக்கினார்- வெள்ளி.
22. பல கிரகங்களை கொண்ட ஒரு நட்சத்திரம் - சூரியன்.
23. கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இணைந்திருப்பது - விண்மீன் திரள்.
24.விண்வெளி மற்றும் நேரம் ஆகியவை எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக வெளிப்பட்டன- 14 மில்லியன் ஆண்டுகள்.
25. விண்வெளி தொலைநோக்கி பெயர் – ஹப்பிள்.
26.பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான சராசரி தூரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது- வானியல் அலகு.
27. 1 வானியல் அலகின் மதிப்பு - 1.496 x கி.மீ.
28. ஒளியானது ஒரு வருடத்தில் கடந்த தூரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது - ஒளி ஆண்டு.
29. 1 ஒளியாண்டு மதிப்பு - 9.4607 x கி.மீ.
30. 1 விண்ணியல் ஆரம்- 3.09x கி.மீ.
31. விண்மீன் திரள்களின் வகைகள் :
1. சுழல்திரள் 2. நீள்வட்டம் 3. தட்டைச் சுழல்
4. ஒழுங்கற்ற வடிவம்
32. நட்சத்திரங்கள், வாயு மற்றும் தூசி ஆகியவற்றைக் கொண்ட ஒரு தட்டையான சுழலும் வட்டு - சுருள் விண்மீன் திரள்கள்.
33. நமது சூரிய மண்டலத்தை உள்ளடக்கிய விண்மீன் திரள் – பால்வளித்திரள்.
34.பால்வளித்திரளின் விட்டம் எத்தனை ஒளி ஆண்டுகள்- 1 லட்சம் ஒளி ஆண்டுகள்.
35.பால்வெளித்திரளுக்கு அருகில் இருக்கும் விண்மீன் திரள்- ஆண்ட்ரோமெடா.
36.பால்வளித் திரள் என்பது பல்வேறு பல விண்மீன் திரள்களில் ஒன்றாகும் என்பதைச் சுட்டிக்காட்டிய ஆய்வுகள் - எட்வின் ஹபுல்.
37.நமது சூரிய மண்டலம் விண்மீன் மையத்திலிருந்து எத்தனை ஒளி ஆண்டுகள் தொலைவில் பால்வழித்திரளின் கரத்தில் அமைந்து உள்ளது- 27,000 ஒளி ஆண்டுகள்.
38.சூரிய மண்டலமானது எத்தனை கி.மீ மணி வேகத்தில் பயணிக்கிறது- 8,28,000.
39.சூரியக் குடும்பம் பால்வழித்திரளை முழுமையாகச் சுற்றிவர எத்தனை ஆண்டுகள் ஆகும்- 230 மில்லியன்.
40.சர்வதேச வானியல் சங்கம் எத்தனை விண்மீன் மண்டலங்களை வகைப்படுத்தியுள்ளது- 88.
41.பெரிய விண்மீன் மண்டலத்தின் பெயர் – உர்ஷா மேஜர். சப்த ரிஷி மண்டலம்
42. இத்தீன் மொழியில் "சிறிய கரடி என்று அழைக்கப்படுவது - உர்ஷா மைனர்
43. பூமிக்கு அருகில் உள்ள நட்சத்திரம் – சூரியன்.
44. பூமிக்கு அருகில் உள்ள நட்சத்திரம் – சூரியன்.
45. உலகின் முதல் செயற்கைகோள் - ரஸ்சியாவின் ஸ்புட்னிக் – 1.
46. இந்தியாவின் முதல் செயற்கைகேள் – ஆர்யப்பட்டா.
47. இஸ்ரோவின் தலைமையிடம் எங்கு அமைந்துள்ளது – பெங்களூர்.
48. 1962 - ல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தை உருவாக்கியவர்- விக்ரம் சாராபாய்.
49.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இந்திய தேசிய குழு INCOSPAR என்னும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஆண்டு – 1969.
50.இந்தியாவால் உருவாக்கப்பட்ட SLV-3 என்னும் ஏவுகணை வாகனம் மூலம் சுற்றுப்பாதையில் ஏவப்பட்ட முதல் துணைக்கோள் என்னும் பெருமை பெற்ற செயற்கைகோள் – ரோஹினி.
51. இஸ்ரோ சந்திராயன் -1 சந்திரனை சுற்றும் துணைக்கோளை ஏவிய ஆண்டு- 2008 அக்டோபர் – 22.
52. செய்வாய் கிரகத்தை சுற்றும் மங்கள்யான் என்னும் துணைக்கோளை ஏவிய ஆண்டு- - 2013 நவம்பர் - 5
53.மங்கள்யான் செவ்வாயின் சுற்றுப்பாதையில் நுழைந்த ஆண்டு – 2014 செப்டம்பர் – 24.
54.உலகின் நான்காவது விண்வெளி நிறுவனம் மற்றும் ஆசியாவின் முதல் விண்வெளி நிறுவனம் - இஸ்ரோ விண்வெளி நிறுவனம்.
55.இஸ்ரோ ஒரே சுமைதாங்கியில் 20 துணைக்கோள்களை விண்ணிற்கு அனுப்பி சாதனை படைத்த ஆண்டு - 2016 ஜுன்- 18.
56. PSLV C- 37 ஒரே ஏவுகணையில் 104 துணைக்கோள்களை விண்ணில் செலுத்தி உலக சாதனை புரிந்த ஆண்டு- 2017 பிப்ரவரி – 15.
57. இஸ்ரோ சந்திராயன் 2 செயற்கைக்கோளை ஏவிய ஆண்டு- 2019 ஜூலை – 22.
58.இந்திய அமெரிக்க விண்வெளி இயற்பியலாளர் - சுப்ரமணியன் சந்திரசேகர்.
59.1983 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு யாருக்கு கிடைத்தது- சுப்ரமணியன் சந்திரசேகர்.
60.கலீலியோ கலிலி வியாழன் சார்ந்த விண்வெளி நுண்ணாய்வுக் கலனுக்கு அவரது பெயர் சூட்டப்பட்ட ஆண்டு -1989.
61. அண்டத்தினைப் பற்றி படிக்கும் படிப்பிற்க்கு என்ன பெயர் – வானியல்.
62.இந்தியாவின் ஏவுகணை நாயகன் என்று அழைக்கப்படுபவர் – அப்துல்கலாம்.
63.1983 ஆம் ஆண்டு இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்ட கழகத்தின் தலைவராக இருந்தவர்- அப்துல்கலாம்.
64.அப்துல்கலாம் கல்லூரி படிப்பில் இயற்பியலில் இளம் அறிவியல் பட்டத்தினை பெற்ற ஆண்டு – 1954.
65.அப்துல்கலாம் சென்னையிலுள்ள எம்.ஐ.டி - யில் “விண்வெளி பொறியியல் படிப்பைத்” தொடங்கிய ஆண்டு – 1955.
66. அப்துல்கலாம் முதன்முதலில் உருவாக்கிய விமானத்தின் பெயர் – நந்தி.
67.அப்துல் கலாம் இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக பொறுப்பேற்ற ஆண்டு-1983.
68.அப்துல் கலாம் இந்திய இராணுவத்தில் உள்ள ஏவுகணையின் திட்ட இயக்குநராக செயல்பட்டவை:
1. திரிசூல்
2. அக்னி
3. பிருத்வி
4. நாக்
5. ஆகாஷ்
69.1999 இல் "ஆப்ரேசன் சக்தி" என்ற திட்டத்தில் பொக்ரான் அணுவெடிப்புச் சோதனையில் முக்கிய பங்காற்றியுள்ளவர் - அப்துல்கலாம்.
70.இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய பெருமைக்குரியவர்- அப்துல்கலாம்.
71. அப்துல்கலாம் இந்தியாவின் குடியரசுத்தலைவரான ஆண்டு - 2002 · 2007.
72.1974 - ல் அணுவெடிப்பு சோதனை எந்த திட்டத்தில் நிகழ்ந்தது - சிரிக்கும் புத்தர்.
73. அப்துல் கலாம் எத்தனை ஏவுகணைத் திட்டங்களில் பணிபுரிந்தார் – 5 .
74.நிலவானது பூமியை ஒரு சுற்று சுற்றி வர எத்தனை நாட்களாகும் – 27 நாட்கள்.
75.அனேக இளம் நட்சத்திரங்களைக் கொண்ட விண்மீன் திரளுக்கு - சுருள் விண்மீன் திரள் என்று பெயர்
76.எந்த துணைக் கோளை நிறுவியவுடன் ISRO 4 டன் எடையுடைய துணைக்கோள்களை ஏவும் திறன் பெறுகிறது- GSAT-19.
77.சூரிய மையக் கொள்கையை முன் மொழிந்தவர் - நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்.
78. அண்டத்தின் ஆதியைக் குறித்துக் கூறும் மாதிரி – பெருவெடிப்பு.
79.ஆகாயத்தின் பெரும் பகுதியை அடக்கியுள்ள விண்மீன் மண்டலம் - உர்சா மேஜர்.
80. பொருத்துக:
1. ரோகிணி – SLV-3.
2. GSAT-14 - GSLV - D5 .
3. GSAT-19 - GSLV - Mark III .
4. சந்த்ரயான் -2 - GSLV Mark III M1.
5. மங்கள்யான் - PSLV - XL C25 .