Sunday, February 4, 2024

புதுக் கவிதை: வண்ணதாசன் / கல்யாண்ஜி-KALYANJI -TNPSC TAMIL NOTES



வண்ணதாசன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி என்ற புனைப்பெயரில் கவிதைகளும் எழுதுபவரின் இயற்பெயர், சி.கல்யாணசுந்தரம் (S. Kalayanasundaram). இவர் தமிழ்நாடு, திருநெல்வேலியில் பிறந்தவர். இவரது தந்தை இலக்கியவாதி தி. க. சிவசங்கரன் ஆவார்.இவர் தந்தையும் சாகித்ய அகாதமி விருது பெற்றவர். 

நவீன தமிழ்ச் சிறுகதை உலகில் மிகுந்த கவனம் பெற்ற எழுத்தாளரான வண்ணதாசன், தீபம் இதழில் எழுதத் துவங்கியவர். 1962 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். இவரது 'ஒரு சிறு இசை' என்ற சிறுகதை நூலுக்காக இந்திய அரசின் 2016 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது கிடைத்தது.

இவரது சிறுகதைகள் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன. இலக்கியச் சிந்தனை உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார் வண்ணதாசன். 2016 விஷ்ணுபுரம் விருது இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

சூன் 10, 2018 இல் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் எனும் அமைப்பு தமிழ் இலக்கியத்திற்கான வாழ்நாள் சாதனையாளர் விருதினை இவருக்கு வழங்கியது.தஞ்சைத் தமிழ்ப் பல்கைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டத்தை வழங்கியுள்ளது

கல்யாண்ஜி ஆசிரியர் குறிப்பு

  • இயற் பெயர் = எஸ்.கல்யாணசுந்தரம்
  • ஊர் = திருநெல்வேலி
  • வண்ணதாசன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகளும், கல்யாண் ஜி என்ற புனைப்பெயரில் கவிதைகளும் எழுதுகிறார்.
  • இவர் தந்தையும் சாகித்ய அகாதமி விருது பெற்றவர். இவரது தந்தை இலக்கியவாதி தி. க. சிவசங்கரன் ஆவார்
புனைபெயர்

  • கல்யாண் ஜி
  • வண்ணதாசன்

விருதுகள்
  • விஷ்ணுபுரம் விருது
  • கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் எனும் அமைப்பு தமிழ் இலக்கியத்திற்கான வாழ்நாள் சாதனையாளர் விருதினை இவருக்கு வழங்கியது
  • தஞ்சைத் தமிழ்ப் பல்கைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டத்தை வழங்கியுள்ளது.

 
கல்யாண்ஜி நூல்கள்

கல்யாண்ஜி கவிதை தொகுப்புகள்
  • புலரி
  • முன்பின்
  • ஆதி
  • அந்நியமற்ற நதி
  • இன்று ஒன்று நன்று
  • கல்யாண்ஜி கவிதைகள்
  • மணலிலுள்ள ஆறு
  • மூன்றாவது

நாவல்
  • சின்னு முதல் சின்னு வரை
கவிதை நூல்கள்
  • கணியான பின்னும் நுனியில் பூ
  • பற்பசைக் குழாய்களும் நாவல் பழங்களும்
  • சிநேகிதங்கள்
  • ஒளியிலே தெரிவது
  • அணில் நிறம்
  • கிருஷ்ணன் வைத்த வீடு
  • அந்நியமற்ற நதி
  • முன்பின்
சிறுகதை
  • தோட்டத்து வெளியிலும் சில பூக்கள்
  • சமவெளி
  • மனுஷா மனுஷா
  • நடுகை
  • உயரப் பறத்தல்
  • கிருஷ்ணன் வைத்த வீடு
  • ஒளியிலே தெரிவது (சுஜாதா பரிசு பெற்ற சிறுகதை)
  • பெயர் தெரியாமல் ஒரு பறவை
  • கனிவு
  • ஒரு சிறு இசை
  • சில இறகுகள் சில பறவைகள்
  • விளிம்பில் வேரில் பழுத்தது
  • கனவு நீச்சல்
  • கலைக்க முடியாத ஒப்பனைகள்

No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: