கலாப்ரியா (பிறப்பு: சூலை 30, 1950) தமிழின் நவீன கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர். எழுபதுகளில் எழுதத் தொடங்கியவர்.
கலாப்ரியாவின் இயற்பெயர் சோமசுந்தரம். சிறு வயதில் எம்.ஜி.ஆர் ரசிகனாய் தி. மு. க தொண்டனாக தீவிரமாக இயங்கினார்.
அறிஞர் அண்ணாவின் இரங்கல் கூட்டத்திற்காக முதன்முதலில் கவிதை (இரங்கற்பா) எழுதிய சோமசுந்தரம், வண்ணநிலவனின் கையெழுத்து இதழான பொருநையில் கவிதை எழுதும் போது தனக்குத் தானே 'கலாப்ரியா' என்று பெயர் சூட்டிக்கொண்டார்.
பின்னர் கசடதபறவில் கவிதைகள் வெளிவரும்போது கூர்ந்து கவனிக்கப்பட்டார். கசடதபறவிற்கு பின் வானம்பாடி, கணையாழி, தீபம் ஆகிய இதழ்களில் எழுதினார். கலாப்ரியாவின் கவிதைகளில் பாலுணர்வு வெளிப்பாடுகளும் சில வேளைகளில் வன்முறையும் கொஞ்சம் தூக்கலாக இருக்கிறது என்று சிலரும், இது அவரது கவிதை மாந்தர்கள் வாழ்வை ஒட்டியது என்று சிலரும் கருதுவதுண்டு.
நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் வங்கிப் பணி நிறைவு பெற்றவர். தன்னை சுற்றி நிகழும் விஷயங்களை கவிதைகளில் பதிவு செய்து வருகிறார் 'கலாப்ரியா'. இவர் 1974 ஆம் ஆண்டில் நிர்மால்யம் என்ற சிற்றிதழைத் தொடங்கினார்.
கலாப்ரியா ஆசிரியர் குறிப்பு
- இயற்பெயர் = தி.சு.சோமசுந்தரம்
- பெற்றோர் = கந்தசாமி, சண்முகவடிவு
- ஊர் = திருநெல்வேலி
- இவர் குற்றாலத்தில் மூன்று முறை கவிதைப் பட்டறைகள் நடத்தியவர்
- “நிறைய புதுக்கவிதைகள் பழசும் இல்லாத புதுசும் இல்லாத அலி கவிதைகளாக இருக்கின்றன. ஆனால் கலாப்ப்ரியாவின் கவிதைகள் ஆண்பிள்ளைக் கவிதைகள் அல்லது பெண் பிள்ளைக்கவிதைகள்” என தி.ஜானகிராமனால் பாராட்டப்பட்டவர்.
விருதுகள்
- தமிழக அரசின் கலைமாமணி விருது
- கவிஞர் சிற்பி இலக்கியவிருது
- ஜஸ்டிஸ் வி. ஆர். கிருஷ்ணய்யர் விருது, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், நெல்லை
- 2010, சிறந்த கட்டுரைத் தொகுப்பு - நினைவின் தாழ்வாரங்கள் - விகடன் விருது, மற்றும் சுஜாதா விருது
- 2012, கண்ணதாசன் இலக்கிய விருது - கோவை
- 2012, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
- கவிஞர் தேவமகள் இலக்கிய விருது
- கவிதைக்கணம் வாழ்நாள் சாதனையாளர் விருது
- 2017, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் கலைஞர் மு.கருணாநி பொற்கிழி விருது.
- 2017, திருச்சி எஸ்.ஆர்.வி பள்ளியின் "அறிஞர் போற்றுதும்" விருது
- 2017, மனோன்மணியம் சுந்தரனார் விருது
- 2018, கோவை விஜயா பதிப்பக வாசகர் வட்டத்தின் "ஜெயகாந்தன் விருது"
- 2019, அமெரிக்கவாழ் தமிழர்களின் "விளக்கு" அமைப்பின் "புதுமைப்பித்தன் நினைவு விருது".
- வெள்ளம்
- தீர்த்தயாத்திரை
- மற்றாங்கே
- எட்டயபுரம்
- சுயம்வரம் மற்றும் கவிதைகள்
- உலகெல்லாம் சூரியன்
- கலாப்ரியா கவிதைகள்
- அனிச்சம்
- வனம் புகுதல்
- எல்லாம் கலந்த காற்று
- நான் நீ மீன்
- உளமுற்ற தீ
- தண்ணீர்ச் சிறகுகள்
- தூண்டில் மிதவையின் குற்ற உணர்ச்சி
- சொந்த ஊர் மழை
- பணிக்கால ஊஞ்சல்
- பேனாவுக்குள் அலையாடும் கடல்
- சொல் உளி
- மௌனத்தின் வயது
- சங்க காலத்து வெயில்
- நினைவின் தாழ்வாரங்கள்
- ஓடும் நதி
- உருள் பெருந்தேர்
- சுவரொட்டி
- காற்றின் பாடல்
- மறைந்து திரியும் நீரோடை
- மையத்தை பிரிகிற நீர் வட்டங்கள்
- என் உள்ளம் அழகான வெள்ளித்திரை
- சில செய்திகள் சில படிமங்கள்
- போகின்ற பாதையெல்லாம் பூமுகம் காணுகின்றேன்
- பாடலென்றும் புதியது
- அன்பெனும் தனி ஊசல்
- கல்லில் வடித்த சொல் போலே
- வேனல்
- பெயரிடப்படாத படம்
- பேரரவி
- மாக்காளை
- வானில் விழுந்த கோடுகள்
- நினைவின் தாழ்வாரங்கள், 2009
- ஓடும் நதி, 2010
- உருள் பெருந்தேர், 2011
- காற்றின் பாடல், 2013
- போகின்ற பாதையெல்லாம், 2016-
No comments:
Post a Comment