அப்துல் ரகுமான் (S. Abdul Rahman, நவம்பர் 9, 1937 - சூன் 2, 2017), தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞரும், தமிழ்ப்பேராசிரியரும் ஆவார். கவிக்கோ என்று சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறார். 'வானம்பாடி' இயக்கக் கவிஞர்களோடு இணைந்தியங்கியவர்.
எழுதுபவர்களின் தலைவாயிலில் தம் கவிதை வெளியீடுகளின் வாயிலாகப் புதுக்கவிதைத் துறையில் நிலைநிறுத்திக் கொண்டவர்களுள் அப்துல் ரகுமான் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவர் ஆவார். அவர் பால்வீதி என்ற கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக இனங்காட்டிக் கொண்டார். அத்தொகுதி வெளிவந்த போது கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி வெளியீட்டு முறையை அமைத்துக் கொண்டார்.
தமிழில் கவிதைக் குறியீடுகள் குறித்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழில் ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி இலக்கியங்களை முனைந்ததிலும் பரப்பியதிலும் இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.
1960 இக்கு பின் கவிதை உலகுக்கு வந்த இவர் கவியரங்கக் கவிதைகளாலும் சிறப்படைந்துள்ளார். சிலேடை வார்த்தைகளால் கேட்போரைக் கவர்வது இவரது பாணி. வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்தவர். அறிவுமதி உள்ளிட்ட இளந்தலைமுறை கவிஞர்களுக்கு ஆசானாக விளங்கினார். ஆலாபனை கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.
அப்துல் ரகுமான் ஆசிரியர் குறிப்பு
- மதுரையில் பிறந்தவர்
- தமிழக அரசின் “பாரதிதாசன் விருது”, தமிழ்ப் பல்கலைக்கழகம் வழங்கிய, “தமிழ் அன்னை விருது” போன்ற பல பரிசினை பெற்றுள்ளார்
- தொன்மம் என்ற இலக்கிய உத்தியை மிகுதியாகப் பயன்படுத்தியவர்
அப்துல் ரகுமான் சிறப்பு பெயர்கள்
- இவர், “மரபுக் கவிதையின் வேர் பார்த்தவர்; புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்” எனப் பாராட்டப்படுபவர்
- கவிக்கோ
- விண்மீன்கள் இடையே ஒரு முழுமதி
- வானத்தை வென்ற கவிஞன்
- சூரியக் கவிஞன்
- தமிழ்நாட்டு இக்பால்
விருதுகள்
- குன்றக்குடி அடிகளார் வழங்கிய “கவியரசர் பாரிவிழா விருது”
- தஞ்சைப் தமிழ்ப் பல்கலைக்கழகம் வழங்கிய “தமிழ் அன்னை விருது”
- தமிழக அரசின் = பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது
- தமிழ் வளர்ச்சித்துறையின் “உமறுப் புலவர் விருது”
- சிற்பி அறக்கட்டளை விருது
- ரானா இலக்கிய விருது
- இலங்கை கம்பன் சங்கத்தின் “கம்ப காவலர் விருது”
அப்துல் ரகுமான்- நூல்கள்
இதழ்
- கவிக்கோ
கட்டுரை நூல்கள்
- கரைகளே நதியாவதில்லை
- அவளுக்கு நிலா என்று பெயர்
- முட்டைவாசிகள்
- மரணம் முற்றுப்புள்ளி அல்ல
- விலங்குகள் இல்லாத கவிதை
- பூப்படைந்த சப்தம்
- தொலைபேசிக் கண்ணீர்
- காற்று என் மனைவி
- உறங்கும் அழகி
- நெருப்பை அணைக்கும் நெருப்பு
- பசி எந்தச் சாதி
- நிலவிலிருந்து வந்தவன்
- கடவுளின் முகவரி
- முத்தங்கள் ஓய்வதில்லை
- காக்கைச் சோறு
- சோதிமிகு நவகவிதை
- சிலந்தியின் வீடு
- இது சிறகுகளின் நேரம்
- இல்லையிலும் இருக்கிறான்
- தட்டாதே திறந்திருக்கிறது
- எம்மொழி செம்மொழி
- பூக்காலம்
ஆய்வு நூல்
- புதுக்கவிதையில் குறியீடு
- கம்பனின் அரசியல் கோட்பாடு
கவிதை நூல்கள்
- பால்வீதி (முதல் கவிதை)
- நேயர் விருப்பம்
- சொந்த சிறைகள் (வசன கவிதை)
- சுட்டுவிரல்
- ஆலாபனை (சாகித்திய அகாதமி விருது)
- பித்தன்
- விதைபோல் விழுந்தவன் (அறிஞர் அண்ணா பற்றியது)
- முத்தமிழின் முகவரி (கலைஞர் கருணாநிதி பற்றியது)
- தாகூரின் சித்ரா (மொழிபெயர்ப்பு கவிதை)
- ரகசிய பூ
- பறவையின் பாதை
- இறந்தால் பிறந்தவன்
- தேவகானம்
- கண்ணீர் துளிகளுக்கு முகவரி இல்லை
- பாலை நிலா
- தமிழில் கவிதைக் குறியீடுகள் குறிந்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர்.
- தமிழில் ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி இலக்கியங்களை முனைந்ததிலும் பரப்பியதிலும் இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.
- கவியரசு கண்ணதாசன் = ‘நான் கலீல் ஜிப்ரானைப் படிக்கும் போதெல்லாம் ‘தமிழில் இப்படி எழுத யாருமில்லையே’ என ஏங்குவேன். அந்த ஏக்கம் இப்போது இல்லை. இதோ, அப்துல் ரகுமான் வந்துவிட்டார். இவருடைய கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டால், ‘யார் இந்தக் கவிஞன்?’ என்று உலகம் விசாரிக்கும்.’
- வாகீசக் கலாநிதி கி.வா.ஜ = ‘கம்பனுக்கும் தோன்றாத கற்பனைகள் ரகுமானுக்கு தோன்றுகின்றன’
No comments:
Post a Comment