Sunday, February 4, 2024

புதுக் கவிதை: ஈரோடு தமிழன்பன் ERODE TAMILANBAN-TNPSC TAMIL NOTES



ஈரோடு தமிழன்பன் (Erode Tamilanban) ஒரு தமிழகக் கவிஞர் ஆவார். ஆசிரியர், மரபுக் கவிஞர், கவியரங்கக் கவிஞர், புதுக்கவிதைக் கவிஞர், சிறுகதை ஆசிரியர், புதின ஆசிரியர், நாடக ஆசிரியர், சிறார் இலக்கியப் படைப்பாளி, வாழ்க்கை வரலாற்றாசிரியர், திறனாய்வாளர், கட்டுரையாளர், ஓவியர், சொற்பொழிவாளர், திரைப்பட இயக்குநர், திரைப்பட பாடலாசிரியர், என பன்முகப்பட்ட ஆளுமைகளைக் கொண்டிருப்பவர்.

சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர்.தமிழ்நாடு அரசின் இயல் இசை நாடக மன்றத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு அரசின் அறிவியல் தமிழ் மன்றத்தின் உறுப்பினராகவும்பணியாற்றி உள்ளார்

ஈரோடு தமிழன்பன் குறிப்பு

  • ஈரோடு தமிழன்பனின் இயற்பெயர் = ஜெகதீசன்
  • பெற்றோர் = நடராஜன், வள்ளியம்மாள்
  • ஊர் = கோவை மாவட்டம் சென்னிமலை
  • இவர் பாரதிதாசன் பரம்பரையினர்
  • மூத்த மகனுக்குப் பாப்லோ நெருதா என்றும் இளைய மகனுக்குப் பாரதிதாசன் என்றும் பெயர் சூட்டினார்.

சிறப்புப் பெயர்கள்

  • மரபில் பூத்து புதுமையில் கனிந்தவர்
  • ஆயிரம் அரங்கம் கண்ட கவியரங்கக் கவிஞர்

ஈரோடு தமிழன்பன் புனைபெயர்

  • விடிவெள்ளி
  • தமிழன்பன்
  • மலையமான்

ஈரோடு தமிழன்பன் சென்னிமலையில் பள்ளிப் படிப்பையும், கரந்தைத் தமிழ்க் கல்லூரியிலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் உயர்கல்விப் படிப்பையும் முடித்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலைப் பட்டமும் தனிப்பாடல் திரட்டு ஓர் ஆய்வு என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றார். 

இலக்கியவாழ்க்கை

ஈரோடு தமிழன்பன் பள்ளி மாணவனாக இருந்தபோதே 'சுய சிந்தனை' என்ற கையெழுத்துப் பிரதியை நடத்தியிருக்கிறார். முதல் கவிதை நூல் 1968-ல் 'கொடி காத்த குமரன்' 'வில்லுப்பாட்டு'. விடிவெள்ளி, 'மலையமான்' என பல புனைபெயர்களில் எழுதியபின் தமிழன்பன் என்னும் பெயர் நிலைத்தது.

பாரதிதாசனுடன் பத்தாண்டுகள் (1954 முதல் 1964 வரை) பழகிய அனுபவம் கொண்டவர். 'நெஞ்சின் நிழல்கள்' என்னும் நாவல் பாரதிதாசன் பரிந்துரையால் சென்னை பாரி நிலையத்திலிருந்து 1965-ல் வெளியானது. ஆனால் தொடர்ந்து புனைவுகள் எழுதாமல் கவிஞராகவே நிலைகொண்டார். பாரதிதாசன் பரம்பரை கவிஞராக மரபுக்கவிதைகளை எழுதிவந்தவர் வானம்பாடி கவிதை இயக்கம் தொடர்புக்குப்பின் புதுக்கவிதையில் ஈடுபட்டார்.

ஈரோடு தமிழன்பன் ஜப்பானிய கவிதை வடிவங்களான ஹைக்கூ, சென்ரியூ ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவர். ஒரு வண்டி சென்ரியு (2001) என்னும் தொகுதி அந்த வடிவை தமிழில் அறிமுகம் செய்தது. லிமெரிக், ஹைகூ ஆகிய கவிதை வடிவங்களை இணைத்து டெட் பாக்கர் அறிமுகப்படுத்திய கவிதை வடிவமான லிமெரைக்கூவைச் சென்னிமலைக் கிளியோபாத்ராக்கள் (2002) என்னும் கவிதைத் தொகுதி வழியாக தமிழில் அறிமுகம் செய்தார்.

தமிழன்பன்-பாரதிதாசன்

ஈரோடு தமிழன்பன் 60க்கும் மேற்பட்ட கவிதைத்தொகுதிகளையும், 6 பெருந்தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார்.

விருதுகள்

  • 1973 தமிழன்பன் கவிதைகள் எனும் சிறந்த நூலுக்காகத் தமிழக அரசு வழங்கிய முதல் பரிசு
  • 1991 தமிழக அரசு அளித்த பாரதிதாசன் விருது
  • 1998 முரசொலி அறக்கட்டளை -கலைஞர் விருது
  • 1999 தமிழக அரசு கலைமாமணி விருது
  • 2000 பனி பெய்யும் பகல் எனும் சிறந்த கவிதை நூலுக்காகத் தமிழக அரசு வழங்கிய முதல் பரிசு
  • 2001 பாரதிதாசனோடு பத்தாண்டுகள் எனும் நூலுக்காகப் பாவேந்தர் பாசறை அளித்த முதல் பரிசு
  • 2001 தமிழக அரசு அளித்த குறள் பீட விருது
  • 2002 கரந்தைத் தமிழ்ச் சங்கம் வழங்கிய தமிழவேள் உமாமகேசுவரனார் விருது
  • 2004 வணக்கம் வள்ளுவ! என்னும் கவிதை நூலுக்காகச் சாகித்திய அகாதெமி அளித்த விருது
  • 2005 திராவிடர் கழகம் நல்கிய பெரியார் விருது
  • 2010 தமிழ்நாடு புத்தகப் பதிப்பாளர்-விற்பனையாளர் சங்கம் (BAPASI) வழங்கிய கலைஞர் பொற்கிழி விருது
  • 2011 கவிக்கோ விருது
  • 2016 விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழங்கிய செம்மொழி ஞாயிறு விருது
  • 2017 எஸ். ஆர். எம். பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராயம் வழங்கிய பரிதிமாற்கலைஞர் விருது
  • 2017 தினத்தந்திக் குழுமம் வழங்கிய சி. பா. ஆதித்தனார் மூத்த தமிழறிஞருக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது

ஈரோடு தமிழன்பன் சிறப்புகள்

  • ஆயிரம் அரங்கம் கண்ட கவியரங்கக் கவிஞர்
  • சென்ரியு கவிதைகளை தமிழில் முதல் முதலாக அறிமுகப்படுத்தியவர் = ஈரோடு தமிழன்பன் ஆவார்.
  • தமிழில் வெளிவந்த முதல் சென்ரியு கவிதை நூல் = ஈரோடு தமிழன்பன் அவர்களின் “ஒரு வண்டி சென்ரியு” (2001) என்னும் கவிதை நூல் ஆகும்.
  • தமிழில் முதன் முதலில் லிமெரைக்கூ கவிதையை எழுதியவர் = ஈரோடு தமிழன்பன்.
  • தமிழின் முதல் லிமரைக்கூ கவிதை நூல் = ஈரோடு தமிழன்பனின் ”சென்னிமலை கிளியோபாத்ராக்கள்” நூலாகும்.
  • தமிழில் அதிக அளவில் கவிதைத் தொகுதிகளை – 60க்கும் மேற்பட்ட தொகுதிகளையும்- 6 பெருந்தொகுதிகளையும் வெளியிட்ட முதல் கவிஞர் இவரே.
  • ‘உன் வீட்டிற்கு நான் வந்திருந்தேன்… வால்ட் விட்மன்! ‘(1998) எனும் கவிதைத் தொகுதிமூலம் புதுக்கவிதையில் முதல் பயண இலக்கியம் படைத்த முதல் கவிஞர் அவர்.
  • 2000இல் எழுதி 2004ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்ற வணக்கம், வள்ளுவ! என்னும் கவிதைத் தொகுதிவழிப் புதுக்கவிதையிலான முதல் திறனாய்வு நூலை எழுதிய முதல் கவிஞர் அவர்.
  • ஒரு வண்டி சென்ரியு (2001) எனும் கவிதைத் தொகுதிவழி ஜப்பானியக் கவிதை வடிவங்களுள் ஒன்றான சென்ரியுவைத் தமிழில் அறிமுகப்படுத்திய முதல் கவிஞர் அவர்.
  • ஜப்பானியக் கவிதை வடிவங்களுள் ஒன்றான ஹைக்கூவைத் தமிழில் பிரபலப்படுத்திய முதல் கவிஞர் அவர்.
  • லிமெரிக், ஹைகூ ஆகிய கவிதை வடிவங்களை இணைத்து டெட் பாக்கர் அறிமுகப்படுத்திய கவிதை வடிவமான லிமெரைக்கூவைச் சென்னிமலைக் கிளியோபாத்ராக்கள் (2002) என்னும் கவிதைத் தொகுதி வாயிலாகத் தமிழில் படைத்த முதல் கவிஞர் அவர்.
  • 2009இல் நிகழ்ந்த ஈழப்போரில் கொத்துக்கொத்தாய்த் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது அந்த இனப் படுகொலையைக் கண்டித்துத் தமிழகத்தில் பலரும் எழுத முன்வராத நிலையில் நெஞ்சுரத்துடன் என் அருமை ஈழமே! (2009) என்னும் கவிதைத் தொகுதியைத் துணிச்சலாய் எழுதி வெளியிட்ட முதல் கவிஞர் அவர்.
  • 2012இல் வெளிவந்த கஜல் பிறைகள் வாயிலாகப் பாடதக்க கஜல் கவிதைத் தொகுதியைப் படைத்த முதல் கவிஞர் அவர்.
  • சென்னைப் பல்கலைக்கழகத்தால் இரண்டு முறை தேசியக் கருத்தரங்கு நடத்தப்படப் பொருண்மைக்களமாக விளங்கிய கவிதைகளைப் படைத்த முதல் கவிஞர் அவர்.
  • ஒரு கூடைப் பழமொன்ரியூ (2014) வழியாகப் பழமொழியையும் சென்ரியூவையும் இணைத்துப் பழமொன்ரியு எனும் கவிதை வடிவத்தை முதன்முதல் உருவாக்கி அறிமுகப் படுத்திய முதல் கவிஞர் அவர்.
  • பாப்லோ நெருதா எழுதிய Book of Questions என்னும் வினாக்களாலான கவிதைத் தொகுதியை முன்மாதிரியாகக் கொண்டு கனாக் காணும் வினாக்கள் (2004), இன்னும் சில வினாக்கள் (2015) எனும் வினாக்களாலான கவிதைத் தொகுதிகள் இரண்டு இயற்றிய முதல் கவிஞர் அவர். பிறப்பால் ஆங்கிலேயராகவும், வாழிடத்தால் சீனராகவும் வாழும் முறையால் தமிழராகவும் வாழ்ந்துவருபவரும் – இங்கிலாந்தில் பிறந்து ஹாங்காங்கில் வாழ்ந்துவருபவருமான பேராசிரியர் கிரிகோரி ஜேம்ஸ் இவ்விரு நூல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து Poems of Questions என்னும் பெயரில் ஒரே நூலாக வெளியிட்டுள்ளார். இப்படி ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவரால் இக்காலக் கவிதை ஆங்கிலத்தில் முதன்முதலில் ஒரு மொழிபெயர்ப்புக் காண மூலநூல் தந்த முதல் கவிஞர் அவர். இதே நூலுக்குப் பேராசிரியர் கிரிகோரி ஜேம்ஸ் அவர்களும் லொரைன் போக் (Loraine Bock) என்னும் ஸ்பானியப் பெண்மணியும் இணைந்து Poemas de Preguntas என்னும் மகுடம் தாங்கிய ஸ்பானிய மொழிபெயர்ப்பு வெளிவந்துள்ளது. இக்காலத் தமிழ்க் கவிதை ஸ்பானிய மொழியில் முதன்முதலில் ஒரு மொழிபெயர்ப்புக் காண மூலநூல் தந்த முதல் கவிஞர் அவர்.
  • 2017 நவம்பர் 8இல் அமெரிக்காவில் டல்லாஸ் நகரிலுள்ள மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் கவிஞர் தி. அமிர்தகணேசன் முயற்சியால் ஈரோடு தமிழன்பனின் 1000 கவிதைகளை வாசிக்கும் கவிதைத் திருவிழா நடைபெற்றது. அமெரிக்காவில் நடைபெற்ற முதல் கவிதைத் திருவிழா மட்டுமன்றி இப்படியொரு திருவிழா எடுக்கப்பட்ட முதல் கவிஞரும் ஈரோடு தமிழன்பனே ஆவார்.
  • 2019 செப்டம்பர் 28இல் வட அமெரிக்க வானொலியில் தமிழன்பன் பிறந்தநாள் வானலையில் அமெரிக்கத் தமிழர்கள் பலர் தமிழன்பன் கவிதை வாசிப்பு நிகழ்த்திக் கொண்டாடினர். இப்படியொரு பிறந்தநாள் திருவிழா எடுக்கப்பட்ட முதல் கவிஞரும் ஈரோடு தமிழன்பனே ஆவார்.


ஈரோடு தமிழன்பன்-நூல்கள்

கவிதைகள்

  • 1968 கொடி காத்த குமரன் (சிறார் வில்லுப்பாட்டு),
  • 1970 சிலிர்ப்புகள் (வசன கவிதைகள்), சென்னை: பாரி நிலையம்.
  • 1970 தமிழன்பன் கவிதைகள் (கவிதைகள்), சென்னை: மங்கள நூலகம்.
  • 1973 தோணி வருகிறது (கவிதைகள்), சென்னை: மணிவாசகர்பதிப்பகம்
  • 1973 விடியல் விழுதுகள் (கவிதைகள்), சென்னை: பொதிகைப் பதிப்பகம்.
  • 1978 தீவுகள் கரையேறுகின்றன (கவிதைகள்), சென்னை பாப்லோ நெருடா பதிப்பகம்.
  • 1982 அந்த நந்தனை எரிச்ச நெருப்பின் மிச்சம் (கவிதைகள்), சென்னை: பூம்புகார் பதிப்பகம்.
  • 1982 பரணி பாடலாம் (கவிதைகள்), சென்னை : பூம்புகார் பதிப்பகம்.
  • 1982 காலத்திற்கு ஒரு நாள் முந்தி (கவிதைகள்), சென்னை: பூம்புகார் பதிப்பகம்.
  • 1984 ஊமை வெயில் (கவிதைகள்), சிவகங்கை: அன்னம்.
  • 1984 நிலா வரும் நேரம் (கவிதைகள்), சென்னை: நர்மதா பதிப்பகம்.
  • 1985 சூரியப் பிறைகள் (ஹைக்கூக் கவிதைகள்), சென்னை: நர்மதா பதிப்பகம்.
  • 1985 திரும்பிவந்த தேர்வலம் (கவிதைகள்), சென்னை: பூம்புகார் பதிப்பகம்.
  • 1986 கருவறையிலிருந்து ஒரு குரல் (கவிதைகள்), சென்னை: திருமகள் நிலையம்.
  • 1989 நாமிருக்கும் நாடு (கவிதைகள்), சென்ன: பாப்லோ பாரதிபதிப்பகம்.
  • 1989 ஊர் சுற்றிவந்த ஓசை (கவிதைகள்), சென்னை: பூம்புகார் பதிப்பகம்.
  • 1990 கண்ணுக்கு வெளியே சில கனாக்கள் (கவிதைகள்), சென்னை: நர்மதா பதிப்பகம்.
  • 1990 குடைராட்டினம் (சிறார் கவிதைகள்), சென்னை: கிறித்தவ இலக்கியச் சங்கம்.
  • 19.1991 கிழக்குச் சாளரம் (கவிதைகள்), சென்னை: பாப்லோ பாரதி பதிப்பகம்.
  • 1995 என் வீட்டு எதிரே ஒரு எருக்கஞ்செடி (கவிதைகள்), சென்னை: பாப்லோ பாரதி பதிப்பகம்.
  • 1998 நடை மறந்த நதியும் திசை மாறிய ஓடையும் (கவிதைகள்), சென்னை: பூம்புகார் பதிப்பகம்.
  • 1998 பனி பெய்யும் பகல் (கவிதைகள்), சென்னை: பூம்புகார் பதிப்பகம்.
  • 1999 உன் வீட்டிற்கு நான் வந்திருந்தேன்… வால்ட் விட்மன்! (தமிழ்ப் புதுக்கவிதையிலான பயண நூல்), சென்னை: பாப்லோ பாரதி பதிப்பகம்.
  • 1999மின்மினிக்காடு (கவிதைகள்), சென்னை: மருதா பதிப்பகம்.
  • 2000 வணக்கம் வள்ளுவ! (சாகித்திய அகாதெமி விருது பெற்ற கவிதைப் படைப்பு), சென்னை: பூம்புகார் பதிப்பகம்.
  • 2001ஒரு வண்டி சென்ரியு (முதல் தமிழ் சென்ரியுக் கவிதைத் தொகுதி), சென்னை: மருதா பதிப்பகம்
  • 2002 தமிழோவியம் (கவிதைகள்), சென்னை: பூம்புகார் பதிப்பகம்.
  • 2002 சென்னிமலைக் கிளியோப்பாத்ராக்கள் (முதல் தமிழ் லிமரைக்குக் கவிதைத் தொகுதி), சென்னை: பாப்லோ பாரதி பதிப்பகம்
  • 2002 வார்த்தைகள் கேட்ட வரம் (கவிதைகள்), சென்னை: விழிகள் பதிப்பகம்.
  • 2003 இவர்களோடும் இவற்றோடும் (கவிதைகள்), சென்னை: விழிகள் பதிப்பகம்.
  • 2003 இரவுப் பாடகன் (கவிதைகள்), சென்னை: பூம்புகார் பதிப்பகம்.
  • 2004 கனாக் காணும் வினாக்கள் (வினாக்களாலான முதல் தமிழ்க் கவிதைத் தொகுதி), சென்னை: விழிகள் பதிப்பகம்.
  • 2004 மின்னல் உறங்கும்போது (கவிதைகள்), சென்னை: துர்க்கா பதிப்பகம்.
  • 2005 கதவைத் தட்டிய பழைய காதலி (கவிதைகள்), சென்னை: விழிகள் பதிப்பகம்.
  • 2005 கவின் குறுநூறு (கவிதைகள்), சென்னை: பாப்லோ பாரதி பதிப்பகம்.
  • 2005 அன்னை மடியே உன்னை மறவேன் (கவிதைகள்), சென்னிமலை: பாலமுருகன் பதிப்பகம்.
  • 2006 மூன்று பெயர்களும் என் முகவரிப் புத்தகமும் (கவிதைகள்), சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.
  • 2008 இடுகுறிப் பெயரில்லை இஸ்லாம் (கவிதைகள்), சென்னை: ரஹ்மத் பதிப்பகம்.
  • 2008 சொல்ல வந்தது (கவிதைகள்), சென்னை: அன்னை முத்தமிழ்ப் பதிப்பகம்.
  • 2009 ஓலைச்சுவடியும் குறுந்தகடும் (கவிதைகள்), சென்னை: விடிவெள்ளி வெளியீடு.
  • 2009 என் அருமை ஈழமே! (கவிதைகள்), சென்னை: அன்னை முத்தமிழ்ப் பதிப்பகம்.
  • 2011 கதை முடியவில்லை (கவிதைகள்), சென்னை: பூம்புகார் பதிப்பகம்.
  • 2011 கனவின் சில பக்கங்கள் (கவிதைகள்), சென்னை: அன்னை முத்தமிழ்ப் பதிப்பகம்.
  • 2012 கஜல் பிறைகள் (முதல் தமிழ்க் கஜல் கவிதைத் தொகுதி), சென்னை: பாப்லோ பாரதி பதிப்பகம்.
  • 2013 மழை மொக்குகள் (யோரன் குறள்) (குறட் பாக்கள்), சென்னை: பாப்லோ பாரதி பதிப்பகம்.
  • 2013புத்தகம் என்பது , ( கவிதைகள்)சென்னை , விழிகள் பதிப்பகம்
  • 2014 ஒரு கூடைப் பழமொன்ரியு (பழமொழி, சென்ரியு இணைந்த முதல் தமிழ்க் கவிதைத் தொகுதி), சென்னை: பாப்லோ பாரதி பதிப்பகம்.
  • 2014 தத்துபித்துவம் (கவிதைகள்), சென்னை: விழிகள் பதிப்பகம்.
  • 2015 புதுநெறி காட்டிய புரட்சிக் கவிஞர் (கவிதைகள்), சென்னை: விழிகள் பதிப்பகம்.
  • 2015 இன்னும் சில வினாக்கள் (கவிதைகள்), சென்னை: பாப்லோ பாரதி பதிப்பகம்.
  • 2015 திசை கடக்கும் சிறகுகள் (கவிதைகள்), சென்னை: பூம்புகார் பதிப்பகம்.
  • 2016 ஐந்திணை ஹைகூ , ( கவிதைகள்) ,சென்னை: பாப்லோ பாரதி பதிப்பகம்
  • 2016 இரு சுடர்கள், ( கவிதைகள்) ,சென்னை : பாப்லோ பாரதி பதிப்பகம்
  • 2017 மாற்று மனிதம் , ( கவிதைகள்) ,சென்னை பூம்புகார் பதிப்பகம்)
  • .2017 வள்ளிச்சந்தம் , ( சிறார் பாடல்கள்) ,சென்னை : பாரதி புத்தகாலயம்
  • 2018 பூக்களின் விடைகள் புலரி கைகளில் , ( கவிதைகள்) ,புதுச்சேரி: ஒருதுளிக்கவிதை
  • 2018 சிறுசிறு சூரியர்கள் , ( கவிதைகள்) ,புதுச்சேரி: ஒருதுளிக்கவிதை
  • 2018 இசை அமைக்கும் இமை அசைப்புகள் , ( இசைக் கவிதைகள்) புதுச்சேரி: ஒருதுளிக்கவிதை
  • 2019 ஒரு கவளம் சோறும் ஒரு கவிதையும் , ( கவிதைகள்) ,சென்னை : அரிமா நோக்கு வெளியீடு
  • 2019 நட்பூ , (கவிதைகள் )சென்னை :பாப்லோபாரதி பதிப்பகம்
  • 2020. இன்னிசை அளபெடைச்சென்னிமலை ( கவிதைகள்), புதுச்சேரி , ஒருதுளிக்கவிதை ,
  • 2020 ஞாபகச் சாளரம் , ( கவிதைகள்) ,புதுச்சேரி , ஒருதுளிக்கவிதை ,
  • 2020 இன்னும் இசை உண்டு இந்த வீணையில், ( கவிதைகள்) ,புதுச்சேரி , ஒருதுளிக்கவிதை ,
  • 2020 முகமொழி 100 , ( கவிதைகள்) ,புதுச்சேரி , ஒருதுளிக்கவிதை ,
  • 2020 ஒளியின் தாயகம் ஒப்பிலா நாயகம், ( கவிதைகள்) ,புதுச்சேரி , ஒருதுளிக்கவிதை ,
  • 2020 காலத்தால் மறையாத கருப்புச் சூரியன் ( கவிதைகள்) , புதுச்சேரி , ஒருதுளிக்கவிதை

ஈரோடு தமிழன்பன் கட்டுரைகள்
  • பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள்
  • கலையா! கைவினையா!
  • பாப்லோ நெருதா பார்வையில் இந்தியா
  • தாயின் மணிக்கொடி
  • சிகரங்கள் மேல் விரியும் சிறகுகள்
  • இலக்கிய பயன்
  • கவிதை சிந்தனைகள்
  • புரட்சிக் கவிஞர் கவிதைகளில் தமிழ், தமிழன், தமிழ்நாடு
  • வீரத்துறவி விவேகானந்தரும் மனோன்மணியம் சுந்தரனாரும் ஒரு சந்திப்பில்

No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: