Sunday, February 4, 2024

புதுக் கவிதை: மு மேத்தா -MU. METHA-TNPSC TAMIL NOTES



மு மேத்தா குறிப்பு

இயற்பெயர் = முகமது மேத்தா

ஊர் = பெரியகுளம்

இவர் கல்லூரிப் பேராசரியர்

மு. மேத்தா (Mu. Metha) (முகமது மேத்தா, பிறப்பு: செப்டம்பர் 5, 1945) பெரியகுளத்தில் பிறந்தார். இவர் சென்னை மாநிலக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்த கவிஞர்களுள் இவரும் ஒருவராவார்.இவர் எழுதிய நூலான ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்ற கவிதை நூலுக்கு 2006-ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்றார்.

இலக்கியவாழ்க்கை

மு.மேத்தா மதுரை தியாகராசர் கல்லூரியில் பயில்கையிலேயே இலக்கிய ஆர்வம் கொண்டிருந்தார். 1971-ல் அவர் கோவை அரசுக் கலைக்கல்லூரிக்கு பணிமாற்றம் பெற்று வந்தார். புவியரசு, சிற்பி, பாலா, தமிழ்நாடன், முல்லை ஆதவன், ஞானி, ஜனசுந்தரம், அக்னிபுத்திரன் ஆகியோருடன் அறிமுகம் ஏற்பட்டது. வானம்பாடி கவிதை இயக்கம் உருவானபோது அதில் பங்கெடுத்தார். வானம்பாடி இதழில் கவிதைகள் எழுதினார்.

மேத்தா மரபை நிராகரிக்காத புதுமை தேவை என கருதியவர். 'மரபுக்கும் புதுமைக்கும் நான் பாலமாக இருப்பேன்’ என்று முதன் முதலாக நடந்த வானம்பாடிகள் கூட்டத்தில் கூறினார். 'இந்தப் பூமி உருண்டையை புரட்டி விடக்கூடிய நெம்புகோல் கவிதையை உங்களில் யார் பாடப் போகிறீர்கள்’ என்ற கேள்வியை வானம்பாடிகளை நோக்கி முன்வைக்கிற கவிதை எழுதினார். அது வானம்பாடி முதல் இதழிலே வெளிவந்தது. வானம்பாடி இயக்கத்தின் முத்திரை வரிகளில் ஒன்று அது.

மு.மேத்தா எழுதிய 'தேசப் பிதாவுக்கு ஒரு தெருப் பாடகனின் அஞ்சலி' என்ற கவிதை புகழ்பெற்றது. தொடர்ந்து 'கண்ணீர்ப்பூக்கள்', என்னும் தொகுதி வெளிவந்து அவர் அன்று தமிழில் எழுதிய புகழ்பெற்ற கவிஞர்களில் ஒருவராக ஆனார்.

1975-ல் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. மு.மேத்தா இந்திராகாந்தியை புகழ்ந்து ’இந்தியா இந்திரா 75' என்னும் தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்டார். வானம்பாடிகளில் சிற்பி போன்றவர்கள் அவசரநிலை கெடுபிடிகளால் ஒதுங்கிக்கொண்டனர். ஆகவே வானம்பாடி இயக்கம் பிளவுபட்டு இதழ் நின்றது.

மு.மேத்தா அதன்பின்னர் திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளர் ஆனார். 'கலைஞருக்கும் தமிழ் என்று பேர்' என்ற பெயரில் 2010-ல் ஒரு கவிதை தொகுதி வெளியிட்டார். 1981-ல் திரைப்படப் பாடலாசிரியராக அறிமுகமானார். தொடர்ந்து திரைத்துறையிலேயே பாடலாசிரியராகப் பணியாற்றினார்.

நாயகம் ஒரு காவியம்

மு.மேத்தா தன் பெரும்படைப்பாக எழுத எண்ணியது 'நாயகம் ஒரு காவியம்'. கண்ணதாசனின் ஏசு காவியத்தை முன்னுதாரணமாகக்கொண்டு புதுக்கவிதையில் எழுத தொடங்கிய அந்நூல் பதுருப் போருடன் நின்றுவிட்டது. அதன் பிறகான நபி வரலாற்றை எழுதும் உடல்நிலை அவருக்கு அமையவில்லை என ஒரு பேட்டியில் சொல்கிறார். 2013-ல் ரஹ்மத் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

திரைப்படத்துறை

மு.மேத்தா பாடல் எழுதிய முதல் படம் சங்கர் கணேஷ் இசையமைப்பில் 1981-ல் வெளிவந்த 'அனிச்ச மலர்'. அதன் பின் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 300-க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். இரண்டு படங்களுக்கு திரை உரையாடல் எழுதியுள்ளார்.

விருதுகள்

  • "ஊர்வலம்" (கவிதை நூல்) தமிழக அரசின் முதற்பரிசு
  • "சோழ நிலா" (நாவல்) ஆனந்த விகடன் பொன்விழா இலக்கியப் போட்டியில் முதல் பரிசு
  • ஆகாயத்துக்கு அடுத்த வீடு (கவிதை நூல்) சாகித்திய அகாதெமி விருது

மு மேத்தா -நூல்கள்:

கவிதை நூல்கள்
  • கண்ணீர்பூக்கள் (1974)
  • ஊர்வலம் (1977)
  • மனச்சிறகு (1978)
  • அவர்கள்வருகிறார்கள் (1980)
  • முகத்துக்கு முகம் (1981)
  • நடந்தநாடகங்கள் (1982)
  • காத்திருந்த காற்று (1982)
  • ஒரு வானம் இரு சிறகு (1983)
  • திருவிழாவில் தெருப்பாடகன் (1984)
  • நந்தவனநாட்கள் (1985)
  • இதயத்தில் நாற்காலி (1985)
  • என்னுடையபோதிமரங்கள் (1987)
  • கனவுக்குதிரைகள் (1992)
  • கம்பன் கவியரங்கில் (1993)
  • என் பிள்ளைத் தமிழ் (1994)
  • ஒற்றைத் தீக்குச்சி (1997)
  • மனிதனைத்தேடி (1998)
  • ஆகாயத்துக்கு அடுத்த வீடு (2004)
  • மு.மேத்தா கவிதைகள் (2007)
  • கலைஞருக்கும் தமிழ் என்று பேர் (2010)
  • கனவுகளின்கையெழுத்து (2016)
  • நாயகம் ஒரு காவியம்
கட்டுரை
  • திறந்த புத்தகம்
நாவல்கள்
  • சோழ நிலா
  • மகுடநிலா
சிறுகதை
  • கிழித்த கோடு
  • மு.மேத்தா சிறுகதைகள்
  • பக்கம் பார்த்து பேசுகிறேன் (2008)

மு மேத்தா சிறப்புகள் :
  • இவர் எழுதிய நூலான “ஆகாயத்துக்கு அடுத்த வீடு” என்ற கவிதை நூலுக்கு 2006-ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்றார்.
  • இவரது முதற் கவிதைத்தொகுப்பு கண்ணீர்ப் பூக்கள்.
  • சமூக விமர்சனத் தொனியில் அமைந்த “தேச பிதாவுக்கு ஒரு தெருப் பாடகனின் அஞ்சலி” என்ற கவிதை மு.மேத்தாவுக்கு புகழ் தேடித் தந்த கவிதை ஆகும்.
  • இவருடைய நூல்களுள் “ஊர்வலம்” தமிழக அரசின் முதற்பரிசினைப் பெற்ற கவிதை நூலாகும்.
  • இவரது “சோழ நிலா” என்னும் வரலாற்று நாவல் ஆனந்த விகடன் இதழ் நிகழ்த்திய பொன்விழா இலக்கியப் போட்டியில் முதல் பரிசு பெற்றது ஆகும்.
  • கவிஞர் வாலியின் ‘அவதார புருஷன்’ எழுதுவதற்கு விதை போட்டது மு.மேத்தா எழுதிய ‘நாயகம் ஒரு காவியம்’ என்கிற நூல்தான். ”அவதார புருஷர் அவதரிக்க நாயகம் காரணம்” என்றார் வாலி.
  • ‘மரபுக்கும் புதுமைக்கும் நான் பாலமாக இருப்பேன்’ என்று கூறியவர்.
  • 1975-ல் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. மு.மேத்தா ’இந்தியா இந்திரா 75′ என்னும் தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்டார்.
  • மு.மேத்தா தன் பெரும்படைப்பாக எழுத எண்ணியது = நாயகம் ஒரு காவியம்.
  • ‘சிறந்த கவிதைகளுக்கு அடையாளம் அவை வாசகனின் நினைவில் திரும்பத் திரும்ப என்ற வகையில் எழுதப்பட்டதுதான் மு.மேத்தாவின் கவிதைகள் வரவேண்டும்’ என்கிறார் தமிழண்ணல்.
  • “கவிதை உலகில் தனக்கென்று ஒரு தனி முத்திரையைப் பதித்து, ஆரவாரம் இல்லாமல் அமைதியாக, இனிமையாக உலவிக் கொண்டிருந்தவர் மேத்தா’ என டாக்டர் பொற்கோ குறிப்பிட்டுள்ளார்.
  • ‘மேத்தாவின் கவிதை நடை எல்லோரையும் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும். சமூக பிரக்ஞையைப் படம் பிடிக்கும். உயிர்த் துடிப்பும், கொந்தளிப்பும் கொண்டவை’ என்கிறார் பேராசிரியர் அ.சா.ஞானசம்பந்தம்.

No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: