Monday, February 5, 2024

புதுக் கவிதை: ஞானக்கூத்தன்-GANAKOOTHAN TNPSC TAMIL NOTES



ஞானக்கூத்தன் (Gnanakoothan) (அக்டோபர் 7, 1938 - சூலை 27, 2016) ஒரு இந்திய தமிழ்க் கவிஞர் ஆவார். இவரது இயற்பெயர் அரங்கநாதன். இவர் பிறந்த ஊர் நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறை அருகே உள்ள திருஇந்தளூர் ஆகும். இவரது தாய்மொழி கன்னடம். “திருமந்திரம்” நூல் ஏற்படுத்திய தாக்கத்தால் தனது புனைப்பெயராக ஞானக்கூத்தன் என்ற பெயரை ஏற்றார். "அன்று வேறு கிழமை", "சூரியனுக்குப் பின்பக்கம்", "கடற்கறையில் சில மரங்கள்", "மீண்டும் அவர்கள்" மற்றும் "பென்சில் படங்கள்" போன்ற நூல்களை எழுதியுள்ளார். இவர் நவீன தமிழ் இலக்கியத்தின் கவிஞராக போற்றப்படுகிறார். இவரின் கவிதைகள், "கல்கி", "காலச்சுவடு" மற்றும் "உயிர்மெய்" போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.

இராமகிருஷ்ணன், சா. கந்தசாமி, ந. கிருஷ்ணமூர்த்தி ஆகியோரோடு இணைந்து ஞானக்கூத்தன் துவங்கிய இதழ் 'கசடதபற'. 'கவனம்' என்ற சிற்றிதழைத் தொடங்கினார். 'ழ' இதழின் ஆசிரியர்களில் ஆத்மநாம், மற்றும் ராஜகோபாலனுடன் இவரும் ஒரு ஆசிரியராக இருந்தார். இவர் 'மையம்', 'விருட்சம்' (தற்போது நவீன விருட்சம்), மற்றும் 'கணையாழி' பத்திரிகைகளில் பங்களித்திருக்கிறார். க. நா. சுப்பிரமணியத்தின் 'இலக்கிய வட்டம்', சி. மணியின் 'நடை' போன்ற சிற்றிதழ்களில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளது. இவரது கவிதைகள் பெரும்பாலும் சமூகத்தை சித்தரிப்பதாக உள்ளது

ஞானக்கூத்தன் குறிப்பு

  • ஊர் = மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திரு இந்தலூர்
  • இயற் பெயர் = ரங்கநாதன்
  • இவரது தாய்மொழி கன்னடம்.
  • “திருமந்திரம்” நூல் ஏற்படுத்திய தாக்கத்தால் தனது புனைப்பெயராக ஞானக் கூத்தன் என்ற பெயரை ஏற்றுக் கொண்டார்.

புனைபெயர்

  • ஞானக் கூத்தன்

விருதுகள்
  • 2003 கவிதைக்கணம் விருது
  • 2006 விளக்கு விருது
  • 2006 புதுமைப்பித்தன் விருது
  • 2009 விடியல் பாரதி விருது
  • 2010 சாரல் விருது
  • 2014 விஷ்ணுபுரம் இலக்கிய விருது

நூல்கள்

  • அன்று வேறு கிழமை
  • சூரியனுக்குப் பின்பக்கம்
  • கடற்கரையில் சில மரங்கள்
  • மீண்டும் அவர்கள்
  • பிரச்சனை (முதல் கவிதை)
  • கவிதைக்காக (திறனாய்வு நூல்)
  • பென்சில் படங்கள்
  • என் உளம் நிற்றி நீ
  • இம்பர் உலகம்
  • மாயவெளி
  • அந்தப் பக்கமாய் போகிறவன்
  • அழிவுப்பாதை
  • மழைநாள் திவசம்
  • தொல் பசி

கட்டுரைகள்

  • கவிதைக்காக
  • கவிதைகளுடன் ஒரு சம்வாதம்
  • சிறுகதை
  • கண்ணீர்ப்புகை


No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: