Thursday, January 11, 2024

பசுவய்யா -TNPSC TAMIL NOTES




புதுக் கவிதை:தொடர்பான செய்திகள் மேற்கோள்கள் , சிறப்புப் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்:

பசுவய்யா

PASUVAYYA -TNPSC TAMIL NOTES 

நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் ஒரு நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர் எனப் பல இலக்கியவினங்களில் ஆளுமை பெற்றிருந்தார். 

'பசுவய்யா' என்னும் புனைபெயரில் கவிதைகள் எழுதியவர் சுந்தர ராமசாமி. அவர் எழுதிய முதல் கவிதை உன் கை நகம்' 1959, மார்ச் மாத 'எழுத்து' இதழில் வெளியானது. அதன்பின் கிட்டத்தட்ட நாற்பத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்து கவிதைகள் எழுதியுள்ளார். ஆனால் அவர் எழுதியவற்றின் மொத்த எண்ணிக்கை மிகவும் குறைவு. நடுநிசி நாய்கள் (1975), யாரோ ஒருவனுக்காக (1987) ஆகிய தலைப்புகளில் நூலாக்கம் பெற்றவை பின்னர் 107 கவிதைகள்' (1996) என ஒரே நூலாகவும் வெளியாயின. இவை மூன்றும் 'பசுவய்யா' என்னும் புனைபெயரில் வெளிவந்தவை. அவர் இறப்புக்குப் பிறகு தொகுக்கப்பட்ட 'சுந்தர ராமசாமி கவிதைகள் நூலில் உள்ள கவிதைகளின் எண்ணிக்கை 110.

குறைவாக எழுதினாலும் நவீன கவிதை வரலாற்றில் பெரிதும் கவனம் பெற்றவையாகவும் பல கவிதைகள் மீண்டும் மீண்டும் மேற்கோள் காட்டப்பட்டவையாகவும் உள்ளன. 'மணிக்கொடி' காலத்தில் கு.ப.ரா, ந.பிச்சமூர்த்தி முதலியோரால் தொடங்கப்பட்ட நவீன கவிதை அடுத்த கட்டமாக 1950களின் இறுதியில் 'எழுத்து' இதழ் மூலம் வலுப் பெற்றது. 'எழுத்து' காலக் கவிஞராகப் பசுவய்யா என்னும் சுந்தர ராமசாமி அடையாளம் பெறுகிறார்.

  • இயற்பெயர் = சுந்தரராமசாமி
  • ஊர் = நாகர்கோயில்
  • சுந்தராமசாமி பெயரில் தமிழ்க் கணினிக்கான விருது, இளம் படைப்பாளர் விருது வழங்கப்படுகிறது

படைப்புகள்

நாவல்

  • ஜெஜெ சில குறிப்புகள்
  • காற்றில் கரைந்த பேராசை
  • இறந்தகாலம் பெற்ற உயிர்
  • குழந்தைகை – பெண்கள் – ஆண்கள்
  • வானமே இளவெயிலே மரச்செறிவே
  • வாழ்க சந்தேகங்கள்
  • மூன்று நாடகங்கள்
  • ஒரு புளிய மரத்தின் கதை

சிறுகதைகள்

  • சுந்தர ராமசாமி சிறுகதைகள் முழு தொகுப்பு (2006)
  • காகம்
  • சன்னல்
  • மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்
  • பொருக்கி வர்க்கம்
  • கைக்குழந்தை
  • அந்த 5 நிமிடங்கள்
  • மயில்
  • பட்டுவாடா
  • கொந்தளிப்பு
  • குரங்குகள்
  • ஓவியம்
  • செங்கமலமும் ஒரு சோப்பும்
  • பிரசாதம்
  • சன்னல்
  • கிடாரி
  • வாழ்வும் வசந்தமும்
  • தயக்கம்
  • லீலை
  • தற்கொலை
  • இருக்கைகள்
  • ஈசல்கள்
  • மேல்பார்வை
  • நாடார் சார்
  • அகம்
  • கோயில் காளையும் உழவுமாடும்
  • பள்ளம்
  • முதலும் முடிவும்
  • தண்ணீர்
  • அக்கறை சீமையில்
  • பல்லக்கு தூக்கிகள்
விமர்சனம்/கட்டுரைகள்:
  • ந.பிச்சமூர்த்தியின் கலை: மரபும் மனிதநேயமும் (1991)
  • ஆளுமைகள் மதிப்பீடுகள் (2004)
  • காற்றில் கரைந்த பேரோசை
  • விரிவும் ஆழமும் தேடி
  • தமிழகத்தில் கல்வி: வே.வசந்தி தேவியுடன் ஒர் உரையாடல் (2000)
  • இறந்த காலம் பெற்ற உயிர்
  • இதம் தந்த வரிகள் (2002)
  • இவை என் உரைகள் (2003)
  • வானகமே இளவெயிலே மரச்செறிவே (2004)
  • வாழ்க சந்தேகங்கள் (2004)
  • புதுமைப்பித்தன்: மரபை மீறும் ஆவேசம்(2006)
  • புதுமைப்பித்தன் கதைகள் சுரா குறிப்பேடு (2005)
  • மூன்று நாடகங்கள் (2006)
  • வாழும் கணங்கள் (2005)
மொழிபெயர்ப்பு:
  • செம்மீன் - தகழி சங்கரப்பிள்ளை(1962)
  • தோட்டியின் மகன்(புதினம்) - தகழி சங்கரப்பிள்ளை(2000)
  • தொலைவிலிருக்கும் கவிதைகள்(2004)

பசவய்யா சிறப்புகள்

  • இவர் பெற்ற விருதுகள் = குமரன் ஆசான் நினைவு விருது, இயல்விருது தமிழ் இலக்கியத் தோட்டம், கதா சூடாமணி விருது.
  • தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுக்கான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் முகமாக சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது.
  • சுந்தர ராமசாமி நினைவாக ஆண்டுதோறும் இளம் படைப்பாளி ஒருவருக்கு நெய்தல் இலக்கிய அமைப்பு சுந்தர ராமசாமி விருது அளித்து வருகிறது.
  • காலச்சுவடு இலக்கிய இதழின் நிறுவனர்.
  • சுந்தர ராமசாமி எழுதிய ‘ முதலும் முடிவும்’ என்னும் கதையே அவருடைய முதல் படைப்பு.
  • சுந்தர ராமசாமியின் முதல் நாவல் = ஒரு புளியமரத்தின் கதை
  • 1959-ல் ’உன் கை நகம்’ என்னும் அவருடைய முதல் புதுக்கவிதை எழுத்து இதழில் வெளியானது
  • சுந்தர ராமசாமியின் முதல் சிறுகதைத் தொகுதி அக்கரைச் சீமையிலே 1959-ல் வெளிவந்தது






No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: