TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL
தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்
வினா விடைகள் (6th to 12th புதிய சமச்சீர் புத்தகம்) GUIDE
1. ஐரோப்பிய மொழிகள், தவிர்த்து அச்சில் ஏறிய மொழிகளில் முதல் மொழி தமிழ்.
2. 1578-இல் தம்பிரான் வணக்கம் எனும் தமிழ் புத்தகம் வெளியிடப்பட்ட இடம் கோவா.
3. முழுமையான அச்சகம் சீகன்பால்கு என்பவரால் தரங்கம்பாடியில் நிறுவப்பட்ட ஆண்டு - 1709.
4. தொடக்ககால தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்றான திருக்குறள் வெளியிடப்பட்ட ஆண்டு-1812.
5. தமிழ் செவ்வியல் இலக்கியங்களை மீண்டும் கண்டறிவதற்காக தங்கள் வாழ்நாள் முழுவதையும் செலவழித்தார்கள்
1. சி.வை.தாமோதரனார் 1832 - 1901
2. உ.வே. சாமிநாதர் 1855 - 1942
6. பனையோலைகளில் கையால் எழுதப் பெற்றிருந்த பல தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களைப் பதிப்பித்தவர் சி.வை.தாமோதரனார்.
7. சி.வை.தாமோதரனார் பதிப்பித்த நூல்கள்:
1. தொல்காப்பியம்,
2. வீரசோழியம்,
3. இறையனார் அகப்பொருள்,
4. இலக்கண விளக்கம்
5. கலித்தொகை,
6. சூளாமணி.
8. தமிழறிஞர் மீனாட்சி சுந்தரனாரின் மாணவர். உ.வே. சாமிநாதர்
9. உ.வே.சாமிநாதர் பதிப்பித்த நூல்ல்கள்:
1. சீவக சிந்தாமணி- 1887
2.புறப்பொருள் வெண்பாமாலை. 1895
3. மணிமேகலை 1898
4. பதிற்றுப்பத்து-1904
10. 1816-ல் புனித ஜார்ஜ் கோட்டையில் கல்லூரியினை நிறுவியவர். P.W எல்லிஸ் (1777- 1819)
11. தென்னிந்திய மொழிகள் தனிப்பட்ட மொழிக்குடும்பத்தை சார்ந்தவை அவை இந்தோ. ஆரியக்குடும்ப மொழிகளோடு தொடர்பில்லாதவை எனும் கோட்பாட்டை உருவாக்கியவர். F.W. எல்லிஸ்.
12. திராவிட (அ) தென்னிந்திய மொழிகளின் ஒப்பீட்டு இலக்கணம் என்ற நூலை எழுதியவர் ராபர்ட் கால்டுவெல் (1814-1891).
13. திராவிட மொழிகளுக்கிடையில் நெருக்கமான ஒப்புமை இருப்பதையும் அப்படியான ஒப்புமை
சமஸ்கிருதத்துடன் இல்லை என்பதையும் கூறியவர் ராபர்ட் கால்டுவெல்.
14. பி. சுந்தரனாரால் (1855-1897) எழுதப்பெற்ற நாடக நூல் - மனோன்மணியம்.
15. வள்ளலார் எனப் பிரபலமாக அறியப்பட்டவர்-ராமலிங்க அடிகள். (1823-1874)
16. நடைமுறையில் இருந்த இந்துசமய பழமைவாதத்தை கேள்விக்குள்ளாக்கினார்- ராமலிங்க அடிகள்.
17. தமிழ் இசைக்குச் சிறப்புச் செய்ததோடு தமிழ் இசை வரலாறு குறித்து நூல்களையும் வெளியிட்டவர் ஆபிரகாம் பண்டிதர். (1859-1919)
18. பெத்தத்திற்குப் புத்துயிரளித்த ஒரு தொடக்ககால முன்னோடி M. சிங்காரவேலர் (1860-1946).
19. காலனிய சக்தியை எதிர்கொள்வதற்காக பொதுவுடமை வாதத்தையும் சமத்துவத்தையும் வளர்த்தவர் M. சிங்காரவேலர்.
20. சமூகரீதியாக உரிமைகள் மறுக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட மக்கள் பிரிவினரின் உரிமைகளுக்காகப் பகுத்தறிவுச் சித்தாந்தத்தை உயர்த்திப் பிடித்தவர்கள் பண்டிதர் அயோத்திதாசர் 1845-1914 பெரியார் ஈ.வெ. ராமசாமி 1879-1973.
21. சென்னை கிறித்தவக் கல்லூரியில் தமிழ் பேராசிரியராகப் பணியாற்றியவர். வி.கோ. சூரிய நாராயணசாஸ்திரி. 1870-1903.
22. பரிதிமாற் கலைஞர் என்னும் தமிழ் பெயரை சூட்டிக்கொண்டார் வி.கோ.சூரிய நாராயணசாஸ்திரி.
23. தமிழ் மொழி ஒரு செம்மொழி என்றும், எனவே சென்னைப் பல்கலைக்கழகம் தமிழை ஒரு வட்டாரமொழியென அழைக்கக் கூடாதென முதன்முதலாக வாதாடியவர் பரிதிமாற் கலைஞர்..
24. 14-வரிச்செய்யுள் வடிவத்தை தமிழுக்கு அறிமுகம் செய்தவர் பரிதிமாற் கலைஞர்.
25. தமிழ் மொழியியல் தூய்மைவாதத்தின் தந்தை என்றும் தனித்தமிழ் இயக்கத்தை (தூய தமிழ் இயக்கம்) உருவாக்கியவர் எனவும் கருதப்படுவர். மறை மலை அடிகள் (1876-1950).
26. மறைமலை அடிகள் விளக்கவுரை எழுதிய சங்க இலக்கிய நூல்கள் பட்டினப்பாலை, முல்லைப்பாட்டு. 27. மறைமலை அடிகள் இளைஞராக இருந்த போது பணிபுரிந்த பத்திரிகை. சித்தாந்த தீபிகா.
28. மறைமலை அடிகள் அவர்களின் ஆசிரியர்கள் பி. சுந்தரனார்,சோமசுந்தர நாயகர்.
29. தனித்தமிழ் இயக்கம் தொடங்கிய ஆண்டு-1916.
30. மறைமலை அடிகளாரின் மகள் நீலாம்பிகை அம்மையார்.
31. தனித்தமிழ் இயக்கம் உருவாக்கப்பட்டதில் முக்கிய பங்கு வகித்தவர் நீலாம்பிகை அம்மையார்.
32. வேதாச்சலம் என்ற தனது பெயரை தூய தமிழில் என மாற்றிக் கொண்டவர்- மறைமலை அடிகள்.
33. மறைமலை அடிகளாரின் ஞானசாகரம் எனும் பத்திரிக்கை எவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டது-அறிவுக்கடல்.
34. சமரச சன்மார்க்க சங்கம் எனும் நிறுவனம் எவ்வாறு மாற்றம் செய்யப்பட்டது பொது நிலைக் கழகம்.
35. தமிழ் சொற்களுக்குள் புகுந்துவிட்ட சமஸ்கிருதச் சொற்களுக்கு இணையான பொருள்தரக்கூடிய தமிழ் சொற்களடங்கிய அகராதி ஒன்றை தொகுத்தவர் நீலாம்பிகை
36. 1911- மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி பிராமணர்களின் விழுக்காடு -3%
37. 1911-மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி பிராமணரல்லாதோர் விழுக்காடு-90%..
38. 1901 முதல் 1911 வரையிலான பத்தாண்டுகளில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு
முடித்த பிராமணர் எண்ணிக்கை-4074.
39. பிராமணமரல்லாதோரின் எண்ணிகை -1035
40. 1909 ல் பிராமணர் அல்லாத மாணவர்களுக்கு உதவி செய்வதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு-மதராஸ் பிராமணரல்லாதோர் சங்கம்.
41. 1912 ல் மதராஸ் ஐக்கிய கழகம் எனும் அமைப்பை உருவாக்கிய மருத்துவர் டாக்டர் சி. நடேசனார்.
42. மதராஸ் ஐக்கிய கழகம் பின்னாளில் எவ்வாறு மாறியது-மதராஸ் திராவிடர் சங்கம். 43. ஜூலை 1916-ல் திருவல்லிக்கேணியில் (சென்னை) திராவிடர் இல்லம் என்ற பெயரில் ஒரு தங்கும் விடுதியை நிறுவியவர் டாக்டர் சி. நடேசனார்.
44. 1916 நவம்பர் 20 தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை (South Indian Liberal Federation)
உருவாக்க ஒருங்கிணைந்தனர்.
1. டாக்டர் நடேசனார்.
2. சர் பிட்டி தியாகராயர்.
3. டி எம் நாயர்
4. அலமேலுமங்கை தாயாரம்மாள் உட்பட 30 முக்கிய பிராமணர் அல்லாத தலைவர்கள்.
45. விக்டோரியா பொது அரங்கில் நடைபெற்ற கூட்டமொன்றில் பிராமணரல்லாதோர் அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு. 1916 டிசம்பர்.
46. தென்னிந்திய நல உரிமைகள் சங்கம் தொடங்கிய பத்திரிகைகள்
1. தமிழில்-திராவிடன்
3. தெலுங்கில்-ஆந்திர பிரகாசிகா.
2. ஆங்கிலத்தில் ஐஸ்டிஸ்.
47. பிராமணர் அல்லாதோர் அறிக்கையில் "சென்னை மாகாணத்தில் 4 கோடியே 11. 1/2 லட்சம் மக்களில் எத்தனை கோடி மக்கள் பிராமணரல்லாதவர்கள் என்று குறிப்பிட்டுள்ளது. 4 கோடி.
48. 1920-ல் நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற கட்சி நீதிக்கட்சி.
49. சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சர் A.சுப்பராயலு
50. தேர்தல்களில், முதன்முதலாகப் பங்கேற்ற இந்திய தேசிய காங்கிரஸ் வெற்றி பெற்று நீதிக்கட்சியை தோல்வி அடையச் செய்த ஆண்டு 1937.
51. பிராமணர் அல்லாத சமூக குழுக்களைச் சேர்ந்த மாணவர்களுக்கென தங்கும் விடுதிகள் எந்த ஆண்டில் உருவாக்கப்பட்டன-1923.
52. நீதிக்கட்சி முதன் முதலாக தேர்தல் அரசியலில் பெண்கள் பங்கேற்பதை எந்த ஆண்டில் அங்கீகரிக்கப்பட்டது 1921.
53. 1926-ல் இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் முத்துலட்சுமி அம்மையார்.
54. பல்வேறு சாதிகளையும் சமூகங்களையும் சார்ந்தவர்களுக்கு அரசுப் பணிகளில் சேர்வதற்கு சமமான வாய்ப்புகளை உறுதி செய்யும் பொருட்டு இரண்டு வகுப்புவாரி அரசாணைகள் இயற்றப்பட்ட ஆண்டு1921 செப்டம்பர் 16, 1922 ஆகஸ்ட்
55. அரசு அதிகாரிகளைத் தேர்வு செய்ய பணியாளர் தேர்வு வாரியத்தை நீதிக்கட்சி அமைத்த ஆண்டு- 1924.
56. பிரிட்டிஷ் இந்திய அரசு பொதுப் பணியாளர் தேர்வாணையத்தை உருவாக்கிய ஆண்டு 1929.
57 . நீதிக்கட்சி இந்து சமய அறநிலையச் சட்டத்தை இயற்றிய ஆண்டு 1926.
58. தமிழ்நாட்டில் பிராமணர் அல்லாதவர்களின் மேம்பாட்டிற்கான ஒரு திட்டத்தையும் அறிமுகம்
செய்த இயக்கம் சுயமரியாதை இயக்கம் (Self Respect Movement).
59. பகுத்தறிவும் சுயமரியாதையும் அனைத்து மனிதர்களின் பிறப்புரிமை என பிரகடனம் செய்த இயக்கம் சுயமரியாதை இயக்கம்.
60. பெண்களின் தாழ்வான நிலைக்கு எழுத்தறிவின்மையே காரணம் என அறிவித்த இயக்கம்- சுயமரியாதை இயக்கம்.
61. சுயமரியாதை இயக்கச் சொற்பொழிவுகளின் மையப் பொருளாக இருந்தது இனம்.
62. இந்துக்களின் நலன்களுக்காக மட்டுமல்லாமல் இஸ்லாமியர்களின் நலனுக்காகவும் போராடியது. சுயமரியாதை இயக்கம்.
63. இஸ்லாமின் மேன்மை மிகுந்த கோட்பாடுகளான சமத்துவம் சகோதரத்துவம் ஆகியவற்றை பாராட்டியது. சுயமரியாதை இயக்கம்.
64. இஸ்லாம் சமூகத்தில் சீரதிருத்த முன்முயற்சிகள் மேற்கொண்ட துருக்கியைச் சேர்ந்த முஸ்தபா சுமால் பாட்சா, ஆப்கானிஸ்தானத்தைச் சேர்ந்த அமானுல்லா ஆகியோரை திராவிட முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டுமென கூறியவர் பெரியார்.
65. சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தவர் பெரியார் ஈ.வெ ராமசாமி. 1879- 1973.
65. பெரியாரின் பெற்றோர் வெங்கடப்பர் சின்னத்தாயம்மாள்.
67. பெரியார் ஈரோட்டின் நகரசபை தலைவராக பதவி வகித்த ஆண்டு 1918 1919
68. மது விலக்கு இயக்கத்திற்கு ஆதரவாகத் தனது தோப்பிலிருந்த 500 தென்னை மரங்களை வெட்டியவர்-பெரியார்.
69. சட்டசபை போன்ற பிரதிநித்துவ அமைப்புகளில் பிராமணர் அல்லாதவர்களுக்கு இட ஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்பதில் முனைப்புடன் இருந்தவர் பெரியார்.
70. பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய ஆண்டு 1925.
71. பெரியார் வெளியிட்ட இதழ்கள் மற்றும் செய்தித்தாள்கள் வருடங்கள்
1.குடிஅரசு (வார இதழ்) 1925 மே 2ஆம் நாள் தொடங்கப்பட்டது.
2.ரிவோல்ட் (Revolt) (ஆங்கில வார இதழ்) 1928 நவம்பர் 07 ஆம் தொடங்கப்பட்டது.
3.புரட்சி (வார இதழ்) 1933 நவம்பர் 20 ஆம் நாள்தொடங்கப்பட்டது.[48] 17.6.1934ஆம் நாள் இறுதி இதழ் வெளிவந்தது.
4.பகுத்தறிவு (நாளிதழ்).1934 ஏப்ரல் 15 ஆம் நாள் தொடங்கப்பட்டு 1934 மே 27ஆம் நாளோடு நிறுத்தப்பட்டது
5.விடுதலை (வாரம் இருமுறை) 1935, சூன் 01ஆம் நாள் தொடங்கப்பட்டது.
6.விடுதலை (நாளிதழ்) 1937, சூன் 1 ஆம் நாள் தொடங்கப்பட்டது
7.உண்மை (மாத இதழ்)
8.தி மார்டர்ன் இரேசனலிசிட்டு (The Modern Rationalist) (ஆங்கில மாத இதழ்) 1971 செப்டம்பர் 1 ஆம் நாள் தொடங்கப்பட்டது
72. சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரபூர்வ செய்தித்தாள் - குடிஅரசு.
73. பெரியார் சென்ற வெளிநாடுகள்:
1. சிங்கப்பூர் -1929-1930.
2. மலேசியா-1954.
3. எகிப்து, சோவியத் ரஷ்யா, கிரீஸ், துருக்கி, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், போர்த்துக்கல் 1931-1932.
74. 1954 ல் நடைபெற்ற புத்தரின் 2500 வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள பெரியார் எங்கு சென்றார் - பரமா.
75. பெரியாரின் எந்த நாட்டின் பயண அனுபவங்கள் அவரை சமதர்ம கருத்துக்களின்பால் நாட்டம்
கொள்ள வைத்தன. ரஷ்யா, ஐரோப்பா.
76. பௌத்த சமய முன்னோடியும், தென்னிந்தியாவின் முதல் பொதுவுடமை வாதியுமான யாருடன் பெரியார் நெருக்கமான உறவு கொண்டிருந்தார். சிங்காரவேலர்.
77. அம்பேத்கார் எழுதிய சாதி Annihilation of caste எனும் நூலை வெளிவந்தவுடன் பெரியார் தமிழில் பதிப்பித்த ஆண்டு 1936.
78. இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்ற ஆண்டு 1937 1939.
79. சிறையில் இருந்தபோது நீதிக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பெரியார். - நீதிக்கட்சி சுயமரியாதை இயக்கத்துடன் இணைந்து.
80. நீதிக்கட்சி திராவிடர் கழகம் (திக) எனப் புதுப்பெயர் சூட்டப்பெற்ற ஆண்டு-1944
81. குலக்கல்வி திட்டம். ராஜாஜி.
82. குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்தவர் ராஜாஜி. 1952-1954.
83. மாணவர்களுக்கு அவர்களின் தந்தையர்கள் செய்துவந்த தொழில்களில் பயிற்சி அளிப்பது- குலக்கல்வி திட்டம்.
84. குலக்கல்வி திட்டதிற்கு எதிராக பெரியார் மேற்கொண்ட போராட்டங்கள்- ராஜாஜியின் பதவி விலகலுக்கு காரணமாயிற்று
85. பின்னர் சென்னை மாநிலத்தின் முதலமைச்சர் ஆனார். காமராஜர்.
85. சமயம் என்றால் நீங்கள் மூட நம்பிக்கைகளை ஏற்றுக் கொள்கிறீர்கள் என்று பொருள் என உறுதிபடக் கூறிவர். பெரியார்.
. திருமணம் செய்து கொடுப்பது எனும் வார்த்தைகளை மறுத்த அவை பெண்களைப்
87 பொருட்களாக நடத்துகின்றன. அவைகளுக்கு மாற்றாக திருக்குறளில் இருந்து எடுக்கப்பட்ட வாழ்க்கைத் துணை என்று வார்த்தையைப் பயன்படுத்த வேண்டினார் பெரியார்.
88. கோவில்களில் நிலவிய பரம்பரை அர்ச்சகர்கள் முறையை எதிர்த்தவர். பெரியார்.
89. பெண்ணியம் குறித்து பெரியார் எழுதிய மிக முக்கியமான நூல் பெண் ஏன் அடிமையானாள்.
90. பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கப்படுவது அவர்களுக்குச் சமூகத்தில் நன்மதிப்பையும்,
பாதுகாப்பையும் வழங்கும் என நம்பியவர். பெரியார்.
91. குடும்பக் கட்டுப்பாடு, கருத்தடை ஆகியவற்றை வலுவாக ஆதரித்த அவர் தாய்மை என்பது பெண்ணுக்கு பெருஞ்சுமையாக உள்ளது என்றவர் பெரியார்.
92. தமிழ்நாடு இந்து வாரிசுரிமைச் சீர்திருத்தச் சட்டத்தை அறிமுகம் செய்த ஆண்டு-1989.
93. தாத்தா எனப் பரவலாக அறியப்பட்டவர். இரட்டை மலை சீனிவாசன். 1859-1945
94. 1859 ஆண்டு இரட்டை மலை சீனிவாசன் காஞ்சிபுரத்தில் பிறந்தார்.
95. இரட்டை மலை சீனிவாசன் அவர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு பட்டங்கள்
1. ராவ் சாகிப். -1926.
2.திவான் பகதூர்.- 1936.
3.ராவ் பகதூர் -1930.
96. இரட்டை மலை சீனிவாசன் அவர்களின் சுயசரிதையான ஜீவிய சரித சுருக்கம் வெளியிடப்பட்ட शुआंग - 1939.
97. 1893 ல் ஆதிதிராவிட மகாஜன சபை எனும் அமைப்பை உருவாக்கியவர் இரட்டை மலை சீனிவாசன்.
98. ஒடுக்கப்பட்ட மக்களின் கூட்டமைப்பு, சென்னை மாகாண ஒடுக்கப்பட்ட வகுப்பாரின்
கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளின் தலைவராகப் பணியாற்றிவர். இரட்டை மலை சீனிவாசன்.
99. காந்தியடிகளை இரட்டைமலை சீனிவாசன் எங்கு சந்தித்து அவருடன் நெருக்கமானார்- தென்னாப்பிரிக்கா
100. இரட்டை மலை சீனிவாசன் சென்னை மாகாணசட்டசபையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட शुआंग 1923.
101. 1930-1931 லண்டனில் நடைபெற்ற இரண்டாவது வட்டமேசை மாநாடுகளில் சுலந்து கொண்டார்-இரட்டைமலை சீனிவாசன்.
102. பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்களுள் இவரும் ஒருவர் இரட்டைமலை சீனிவாசன்
103. மக்களால் எம்.சி. ராஜா என அழைக்கப்பட்டவர் மயிலை சின்னதம்பி ராஜா 1883-1943
104. தென்னிந்திய நல உரிமைச் சங்கம் உருவாக்கியவர்களில் ஒருவராவார். எம்.சி. ராஜா.
105. சென்னை மாகாணத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து சட்டமேலவைக்கு தேர்தெடுக்கப்பட்ட முதல் உறுப்பினராவார் மயிலை சின்னதம்பி ராஜா.1920-1926.
106. சென்னை சட்டசபையில் நீதிக் கட்சியின் துணைத் தலைவராக செயல்பட்டுள்ளார். எம்.சி. ராஜா
107. ஆதிதிராவிடர், ஆதிஆந்திரர் எனும் வார்த்தைகளைப் பயன்படுத்துமாறு பரிந்துரைத்தவர்-மயிலை சின்னதம்பி ராஜா.
108. 1928-ல் அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் சங்கம் எனும் அமைப்பை உருவாக்கி அதன் தலைவராக நீண்டகாலம் பணியாற்றிவர் மயிலை சின்னதம்பி ராஜா,
109. சென்னை மாகாணத்தில் தொழிலாளர் சங்கங்களை அமைப்பதில் முன்முயற்சி மேற்கொண்டவர்கள் பி.பி. வாடியா. ம. சிங்காரவேலர் திரு.வி. கல்யானாசுந்தரம்.
110. இந்தியாவின் முதல் தொழில் சங்கமான சென்னை தொழிலாளர் சங்கம் madras Labour Union உருவாக்கப்பட்ட ஆண்டு-1918.
111. அகில இந்திய தொழிலாளர் சங்கத்தின் முதல் மாநாடு எங்கு எப்போது நடைபெற்ற ஆண்டு- பம்பாயில் 1920 அக்டோபர் 31
112. சென்னை மாகாண தொழிலாளர் இயக்க நடவடிக்கைகளில் ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தவர்- ம. சிங்காரவேலர். (1860 1946).
113. ம. சிங்காரவேலர் இளமைக் காலத்தில் பௌத்தத்தை பரிந்துரை செய்தார்.
114. காரல் மார்க்ஸ், சார்லஸ் டார்வின், ஹெர்பர்ட் ஸ்பென்சர், ஆல்பர்ட் ஐன்ஸ்டின் ஆகியோரின் கருத்துக்களைத் தமிழில் வடித்தவர் - ம. சிங்காரவேலர்.
115. 1923 முதல் முதலாக மே தின விழாவை ஏற்பாடு செய்தவர் ம. சிங்காரவேலர்.
116. ம. சிங்காரவேலர் தொழிலாளி வர்க்கத்தின் பிரச்சனைகளைப் வெளிப்படுத்துவதற்காக எந்த பத்திரிக்கையை வெளியிட்டார் தொழிலாளன் (Worker).
117. பெரியாரோடும் சுயமரியாதை இயக்கத்தோடும் நெருக்கமாக இருந்தவர்.-ம.சிங்காரவேலர்.
118. தமிழ் இசை வரலாற்றை முறையாக கற்றாய்ந்து, பழந்தமிழர் இசை முறையை மீட்டுருவாக்கம் செய்ய முயன்றவர் ஆபிரகாம் பண்டிதர்.
119. 1912 -ல் ஆபிரகாம் பண்டிதர் தஞ்சாவூர் ஏற்படுத்தி அமைப்பு சங்கீத வித்யா மகாஜன சங்கம்.
120. தமிழிசையின் நிலை குறித்து விவாதிக்க முதல் தமிழிசை மாநாடு நடத்தப்பட்ட ஆண்டு 1943.
121. சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த யார் இந்தி மொழியைப் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக அறிமுக செய்தார் - ராஜாஜி.
122. தமிழ் நாட்டில் உருவான பெண்ணிய இயக்கங்கள்
1. பெண்கள் இந்திய சங்கம் (Women's India Association - WIA)
2.அகில இந்திய மகளிர் மாநாடு (All India Women's conference - ALWC)
123. 1917 ல் இந்தியப் பெண்கள் சங்கம் (WIA) சென்னை அடையாறு பகுதியில் தொடங்கியவர்கள் அன்னிபெசன்ட், டோரதி ஜினராஜதாசா மார்கரெட் கசின்ஸ்.
124. அகில இந்திய பெண்கள் மாநாடு நிறுவப்பட்ட ஆண்டு 1927. 125. சுயமரியாதை இயக்கத்தில் பணியாற்றிய முக்கிய பெண்கள்:
1. முத்துலட்சுமி அம்மையார்,
2. நாகம்மை,
3. கண்ணம்மா,
4. நீலாவதி,
5. மூவலூர் இராமாமிர்தம்,
5. ருக்மணி அம்மாள்,
7. அலமேலு மங்கை தாயாரம்மாள்,
6. நீலாம்பிகை
9. சிவகாமி சிதம்பரனார்
126. கடவுளுக்கு இறைப்பணி செய்யும் சேவகர்களாக இளம் பெண்களை இந்து கோவில்களுக்கு அர்ப்பணிக்கும் வழக்கம் இருந்தது அவ்வாறு அர்ப்பணிக்கப்பட்டோர் எவ்வாறு அறியப்பட்டனர். தேவதாசி.
127. தேவதாசி முறையை ஒழிப்பதற்காகச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பதற்காக நடைபெற்ற இயக்கத்தில் முதலிடம் வகித்தவர் டாக்டர். முத்துலட்சுமி அம்மையார்.
126. 1930-இல் சென்னை சட்டமன்றத்தில் சென்னை மாகாணத்தில் இந்துகோவில்களுக்குப் பெண்கள் அர்பணிக்கப்படுவதை தடுப்பது எனும் மசோதாவை அறிமுகப்படுத்தியவர்- முத்துலட்சுமி அம்மையார்.
129. மதராஸ் தேவதாசி சட்டம் எனும் சட்டம் அரசால் இயற்றப்பட்ட ஆண்டு 1947.
130. தேவதாசி முறைக்கு உதவிசெய்கிற தூண்டிவிடுகிற குற்றத்தை செய்வோர்க்கு குறைந்த பட்சம் எத்தனை ஆண்டுகள் சிறை தண்டனை என ஆணையிட்டது. 5 ஆண்டுகள்.