TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL
தென்னிந்திய அரசுகள்:
சாளுக்கியர்கள் (கி.பி. 543 -755)
சாளுக்கியர்கள்-வினா விடைகள் (6th to 12th புதிய சமச்சீர் புத்தகம்) GUIDE
1. சாளுக்கியர் ஆண்ட பகுதி என்ன? : தென்னிந்தியாவின் மத்தியிலும் மேற்கிலும் மராத்திய நாட்டை உள்ளடக்கிய பெரும்பகுதி
2. சாளுக்கியர்களின் தலைநகர் எது? : வாதாபி (பதாமி)
3. சாளுக்கியர்களின் அரசு மரபுகள் யாவை? : 1. வாதாபிச் சாளுக்கியர்கள்,2. வெங்கிச் சாளுக்கியர்கள் (கீழைச் சாளுக்கியர்கள்) ,3. கல்யாணிச் சாளுக்கியர்கள் (மேலைச் சாளுக்கியர்கள்)
4. சாளுக்கிய அரசின் எல்லைகள் யாவை? : வடக்கே ஹர்ஷரின் பேரரசும், தெற்கே பல்லவ நாடும், கிழக்கே கலிங்கமும் (ஒடிசா)
5. பீஜப்பூர் மாவட்டம் பட்டடக்கல்லில் ஒரு குறுநில மன்னராக இருந்தவர் யார்?
: வாதாபிச் சாளுக்கியர் முதலாம் புலிகேசி
6. முதலாம் புலிகேசி கி.பி ___வாதாபி மலைக்கோட்டையை கைப்பற்றினார்
: 543 ல்
7. முதலாம் புலிகேசியின் மகன் யார்? : முதலாம் கீர்த்திவர்மன்
8. முதலாம் கீர்த்திவர்மன் ஆட்சிக்காலம் என்ன? : கி.பி. (பொ.ஆ) 566 - 597)
9. கொங்கணக் கடற்கரைப் பகுதியைச் சாளுக்கியரின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தவர் யார்? : முதலாம் கீர்த்திவர்மன்
10. இரண்டாம் புலிகேசி ஆட்சிக்காலம் என்ன? : கி.பி. 610 – 642
11. சாளுக்கிய வம்சத்தின் மிகவும் வலிமை பெற்ற அரசர் யார்? : இரண்டாம் புலிகேசி
12. யார் இரண்டாம் புலிகேசியின் அவைக்குத் தூதுக்குழு ஒன்றை அனுப்பிவைத்தவர்? : பாரசீக (ஈரான்) அரசர் இரண்டாம் குஸ்ரூ
13. வட இந்திய அரசர் ஹர்ஷருக்கு அடிபணிய மறுத்தவர் யார்? : இரண்டாம் புலிகேசி
14. ஹர்ஷர் மற்றும் இரண்டாம் புலிகேசி ஒப்புக் கொண்டபுரிதலின்படி எந்த நதி எல்லையாக வரையறை செய்யப்பட்டது? : நர்மதை நதி
15. இரண்டாம் புலிகேசி எந்த ஆண்டு வெங்கி அரசைக் கைப்பற்றினார்? : கி.பி. (பொ.ஆ) 624
16. இரண்டாம் புலிகேசி வெங்கி பகுதியை யாருக்கு வழங்கினார்? : சகோதரர் விஷ்ணுவர்த்தனர்
17. எந்த ஆண்டு பல்லவர்கள் தக்காணத்தைச் சூறையாடி வாதாபியைக் கைப்பற்றினர்? : கி.பி.(பொ.ஆ) 641 – 647
18.சாளுக்கியர் எந்த ஆண்டு மீண்டும் தக்காணத்தை மீட்டனர்? : கி.பி. 655
19. முதலாம் விக்கிரமாதித்தன் காலம் என்ன? : கி.பி. (பொ.ஆ) 655 – 680
20. முதலாம் விக்கிரமாதித்தன் பின் வந்தவர் ___ : இரண்டாம் விக்கிரமாதித்தன்
21. இரண்டாம் கீர்த்திவர்மனை யார் தோற்கடித்தார்? : ராஷ்டிரகூட வம்ச அரசை நிறுவிய தந்திதுர்க்கர்
22. அய்கோல் கல்வெட்டு எங்கு உள்ளது? : அய்கோலிலுள்ள (பாகல்கோட் மாவட்டம், கர்நாடகா) மேகுதி கோவிலில் உள்ளது
23. அய்கோல் கல்வெட்டு யாரால் எழுதப்பட்டது? : இரண்டாம் புலிகேசியின் அவைக்களப் புலவரான ரவிகீர்த்தி என்பவர்
24. அய்கோல் கல்வெட்டு எதைப் பற்றி குறிப்பிடுகிறது? : ஹர்ஷவர்த்தனர் இரண்டாம் புலிகேசியால் தோற்கடிக்கப்பட்டதை
25. கல்யாணி மேலைச் சாளுக்கியர்கள் யார்? : வாதாபிச் சாளுக்கியரின் வழித்தோன்றல்கள்
26. மேலைச் சாளுக்கியர்கள் தலைநகர் எது? : கல்யாணியைத் (தற்போதைய பசவ கல்யாண்)
27. இரண்டாம் தைலப்பர் யார்? : ராஷ்டிரகூடர்களின் சிற்றரசராக பீஜப்பூர் பகுதியை ஆண்டுவந்தவர்
28. இரண்டாம் தைலப்பர் எந்த ஆண்டு கல்யாணியைக் கைப்பற்றினார்? : கி.பி. (பொ.ஆ) 973 ல் மாளவ அரசர் பரமாரரைத் தோற்கடித்து
29. இரண்டாம் தைலப்பர் வம்சம் யார் ஆட்சியின்போது பேரரசாக வேகமாக வளர்ச்சி பெற்றது? : முதலாம் சோமேஸ்வரன்
30. முதலாம் சோமேஸ்வரர் தலைநகரை எங்கு இருந்து எங்கு மாற்றினார்? : மன்யகேட்டாவிலிருந்து கல்யாணிக்கு
31. மேலைச் சாளுக்கியர்களும் தஞ்சாவூர்ச் சோழர்களும் எந்த பகுதியை கைப்பற்ற போரிட்டனர்? : வளம் நிறைந்த வெங்கி
32. ஆறாம் விக்கிரமாதித்யரின் காலத்தில் சாளுக்கியரின் கட்டுப்பாட்டுப் பாதிகள் யாவை? : வடக்கே நர்மதை ஆற்றுக்கும், தெற்கே காவேரி ஆற்றுக்கும் இடைப்பட்ட பெரும்பகுதி
33. வெசாரா பாணியிலான கோவில் விமானங்களைக் கட்டும் முறை என்றால் என்ன? : தென் இந்திய (திராவிட) மற்றும் வட இந்திய (நகரா) கட்டடப் பாணிகளின் கலப்பு
34. கட்டுமானத்திற்கு மிருதுவான ____கற்களைப் பயன்படுத்தினர் : மணற்
35. சாளுக்கியர்களின் கட்டுமானக் கோவில்களுக்கு உதாரணங்கள் யாவை? : அய்கோல், வாதாபி, பட்டடக்கல்
36. விருப்பாக்ஷா கோவில் எங்கு உள்ளது? : பீஜப்பூர் மாவட்டம் பட்டடக்கல்
37. வாதாபியிலுள்ள விஷ்ணு கோவில் யாரல் கட்டப்பட்டது? : சாளுக்கிய வம்சத்தைச் சேர்ந்த மங்களேசன்
38. இரண்டாம் விக்கிரமாதித்தனுடைய கல்வெட்டு எது? : அய்கோல் கல்வெட்டு
39. கல்யாணி மேலைச் சாளுக்கியரின் கட்டிடக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள் யாவை? : குகைக்கோவில்கள் அஜந்தா, எல்லோரா, நாசிக்
40. லக்கண்டியிலுள்ள ____ கோவில் : காசி விஸ்வேஸ்வரர்
41. குருவட்டியிலுள்ள ___ கோவில் : மல்லிகார்ஜுனா
42. ____ என்னுமிடத்திலுள்ள கள்ளேஸ்வரர் கோவில் : பகலி
43. இட்டகியிலுள்ள ____ கோவில் : மகாதேவர்
44. சாளுக்கியர்கள் ஓவியத்தில் எந்த முறையை பின்பற்றினர்? : வாகடகர்
45. பாரசீகத் தூதுக்குழுவை இரண்டாம் புலிகேசி வரவேற்பது போன்ற காட்சி எங்கு உள்ளது? : அஜந்தா ஓவியத்தில்
46. பட்டடக்கல் எங்கு உள்ளது? : கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்திலுள்ள ஒரு சிற்றூர்
47. பட்டடக்கல்லில் எத்தனை கோவில்கள் உள்ளன? : 10 கோவில்கள் (4 வட இந்திய பாணியான நகரா பாணி,ஆறு தென்னிந்திய திராவிட பாணி)
48. விருப்பாக்ஷா கோவில் மற்றும் சங்கமேஸ்வரா கோவிலில் ____ பாணி : திராவிடப்
49. பாப்பநாதர் கோவில் ___ பாணி : நகரா
50. விருப்பாக்ஷா கோவில் எந்த கோவிலை மாதிரியாக கொண்டு கட்டப்பட்டுள்ளது? : காஞ்சி கைலாசநாதர் கோவில்