TODAY CURRENT AFFAIRS IN TAMIL 19.10.2023:
உலக ஓய்வூதியக் குறியீடு 2023:
15 வது வருடாந்திர மெர்சர் சி. எஃப். ஏ இன்ஸ்டிடியூட் வெளிட்ட அறிக்கையில் உலக ஓய்வூதியக் குறியீடு 2023 இல் 47 நாடுகளில் இந்தியா 45 வது இடத்திற்குச் சரிந்தது 45.9 புள்ளிகள் பெற்றுள்ளது. 2022ல் 44 நாடுகளில் 41வது இடத்திலும், 2021ல் 43 நாடுகளில் 40வது இடத்திலும் இருந்தது. நெதர்லாந்து 85.0 பெற்று முதல் இடத்திலும் , ஐஸ்லாந்து 83.5 பெற்று இரண்டாம் இடத்திலும் மற்றும் டென்மார்க் 81.3 பெற்று மூன்றாம் இடத்திலும் உள்ளது .அர்ஜென்டினா மிகக் குறைந்த 42.3 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது .
இருவாச்சி இனப் பறவைகள் :
வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு வால்பாறை பகுதியிலுள்ள (ஆனைமலை புலிகள் காப்பக) இருவாச்சி பறவைகளை பாதுகாக்க வேண்டுமெனக் கூறியுள்ளார்.
உலகில் 55 இருவாச்சி இனப் பறவைகளும், இந்தியாவில் 6 இருவாச்சி இனப் பறவைகளும் மேற்குத் தொடர்ச்சி மலையில் 4 இருவாச்சி இனப் பறவைகளும் உள்ளன.
உலகின் 200 முக்கிய சுற்றுச்சூழல் மண்டலங்களில் ஒன்றான மேற்குத் தொடர்ச்சி மலையில் மலவார் கருப்பு வெள்ளை இருவாச்சி, இந்திய சாம்பல் இருவாச்சி, மலபார் சாம்பல் இருவாச்சி, மலை இருவாச்சி போன்ற 4 இருவாச்சி இனப் பறவைகள் உள்ளன.
“தமிழகத்தில் அழிந்து வரும் இருவாச்சி இனத்தை காக்க வேண்டும் என தமிழக அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளது.
ஆந்திரத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடக்கம் :
ஆந்திரம் மாநிலத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பை (பிசி) சோ்ந்த 139 ஜாதியினா் பயனடையும் வகையில், அவா்களுக்கான ஜாதிவாரி கணக்கெடுப்பு நவ. 15-ஆம் தேதி தொடங்கும் என புதன்கிழமை மாநில பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் நலத் துறை அமைச்சா் சி. ஸ்ரீநிவாச வேணுகோபால கிருஷ்ணா தெரிவித்தாா்.
சுயப்பட முனையங்கள் உருவாக்கல் வழிகாட்டுதல்:
பாதுகாப்பு அமைச்சகம் தனது அனைத்து துறைகளுக்கும் செயற்படுத்தப்பட்ட/செய்யப்படும் நல்ல பணிகளை வெளிப்படுத்தும் வகையில் சுயப்பட முனையங்களை உருவாக்குவதற்கான விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களில் மொத்தம் 822 சுயப்பட முனையங்கள் உள்ளன சுயப்பட முனையங்களை அதிக பட்ச நடமாட்டம் மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் திறன் கொண்ட முக்கிய இடங்களில் அமைக்கப்பட வேண்டும்.சுயப்பட முனையங்களுக்கான பல பரந்த கருப்பொருள்களை அமைச்சகம் பட்டியலிட்டுள்ளது. அவற்றில்
- தற்சார்பு இந்தியா
- சசக்திகரன்
- ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு
- நரி சக்தி
- எல்லை உள்கட்டமைப்பு மேம்பாடு
- முன்னாள் படைவீரர்களின் நலன் ஆகியவை அடங்கும்.
இந்தியாவின் முதல் நில வரைபடவியல் அருங்காட்சியகம் திறப்பு :
உத்திரகாண்ட்டின் முசோரியின் பார்க் எஸ்டேட்டில் இந்தியாவின் முதல் நில வரைபடவியல் அருங்காட்சியகமான சர்ஜார்ஜ் அருங்காட்சியகமானது திறக்கப்பட்டுள்ளது.
மேரா யுவ பாரத் 2023:
இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கவும், தலைமைத்துவத்தை வளர்ப்பதற்கும், தேசிய வளர்ச்சிக்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கும் “மேரா யுவ பாரத்” க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முன்முயற்சி தேசிய இளைஞர் கொள்கையுடன் ஒத்துப்போகிறது மற்றும் 15-29 வயதுடைய நபர்களைகவனம் செலுத்துகிறது .மேரா யுவ பாரத் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 நாள் அன்று தேசிய ஒற்றுமை நாளில் தொடங்கப்படும்.
உலக உணவு இந்தியா கண்காட்சி:
நவம்பர் மாத்தில் டெல்லி பிரகதி மைதானத்தில் சிறுதானியங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இந்திய உணவு முக்கியத்துவத்தினை குறிக்கும் விதமாகவும் உலக உணவு இந்தியா கண்காட்சி நடைபெற உள்ளது.
இக்கண்காட்சியினை இந்தியாவுடன் நெதர்லாந்து இணைந்து நடத்த உள்ளது.
“உலகின் மிகவும் சரியான நேரத்தில் செயல்படும் விமான நிலையம் ” :
சிரியம் என்ற நிறுவனத்தின் இன் அறிக்கையின்படி பெங்களூரு சர்வதேச விமான நிலையம் என்றும் அழைக்கப்படும் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் (KIA) கடந்த மூன்று மாதங்களாக “உலகின் மிகவும் சரியான நேரத்தில் செயல்படும் விமான நிலையம் ” என்ற சாதனை படைத்துள்ளது .
உலக திறமைகள் தரவரிசை 2023 :
சர்வதேச மேலாண்மை மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள உலக திறமைகள் தரவரிசை-2023 பட்டியலில் இந்தியா 56வது இடம் பிடித்துள்ளது.
மக்களின் வாழ்க்கைதரம், குறைந்தபட்ச ஊதியம், கல்வி ஆகியவற்றின் ஆய்வுகளின் படி 64 நாடுகள் அடங்கியுள்ள பட்டியலானது வெளியிடப்பட்டள்ளது.
முதல் மூன்று இடங்கள் முறையே சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க், ஐஸ்லாந்து போன்ற நாடுகள் பிடித்துள்ளன.
பசுமைக் கடன்:
சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் பசுமை கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பசுமைக் கடன் என்பது சுற்றுச்சூழலில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் குறிப்பிட்ட செயல்களுக்காக வழங்கப்படும் ஒரு ஊக்கத்தொகையாகும்
AIBD அமைப்பின் தலைமை நீடிப்பு :
இந்தியா வகித்து வந்த ஆசிய-பசுபிக் ஒளிபரப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமை பொறுப்பானது மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
AIBD எனப்படும் ASIA (Pacific Institute For Broadcasting Development) அமைப்பானது மலேசியாவின் கோலாலம்பூரினை தலைமையகமாக கொண்டு 1977-ல் உருவாக்கப்பட்டது.