TODAY CURRENT AFFAIRS IN TAMIL 08.10.2023
உலகக் கோப்பையில் அதிவேக சதமடித்த வீரர் :
உலகக் கோப்பையில் அதிவேக சதமடித்த வீரர் என்ற சாதனையை இலங்கைக்கு எதிரான நேற்றையப் போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் மார்கரம் படைத்துள்ளார். உலகக் கோப்பையின் நேற்றைய ஆட்டத்தில் இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா 102 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் மார்கரம் 49 பந்துகளில் சதம் விளாசி உலகக் கோப்பையில் அதிவேக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்
சா்க்கரைப் பாகு கழிவு மீதான ஜிஎஸ்டி 5%ஆக குறைப்பு:
சா்க்கரைப் பாகு கழிவு (மொலாசஸ்) மீதான சரக்கு - சேவை வரியை (ஜிஎஸ்டி) 28 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதேநேரம், மனித நுகா்வுக்கான மதுபானம் தயாரிப்பில் மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படும் தூய வடிவ ஆல்கஹால் (எக்ஸ்ட்ரா நியூட்ரல் ஆல்கஹால்) மீது வரி விதிக்கும் உரிமை மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நாகை-இலங்கை இடையே அக். 10 இல் பயணிகள் கப்பல் சேவை தொடக்கம்:
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்படும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதமா் மோடி அறிவித்தாா். இதையெடுத்து, மத்திய அரசு ஒதுக்கீடு செய்த ரூ. 3 கோடியில் பல்வேறு பணிகள் தமிழக அரசின் மூலம் நாகை துறைமுகத்தில் நடைபெற்றது. இந்தப் பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், நாகை- இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையே அக்டோபா் 10 ஆம் தேதி பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்படும் என அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதனை தொடா்ந்து இலங்கை செல்ல இருக்கும் செரியா பாணி சொகுசு கப்பல் நாகை துறைமுகம் வந்தடைந்து.
இந்திய கடற்படையில் ‘360 டிகிரி மதிப்பீட்டு முறை
இந்திய கடற்படையில் பணி செய்யும் வீரா்கள் பதவி உயா்வு பெறுவதை அவா்களின் குழுத் தலைவா்களே முடிவு செய்து வருகின்றனா். இதனை மாற்றி வீரா்களின் திறன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் ஆய்வு மேற்கொண்டு பதவி உயா்வு வழங்க ‘360 டிகிரி மதிப்பீட்டு முறையை’ இந்திய கடற்படை அறிமுகப்படுத்தியது.
இம்முறையில் பதவி உயா்வு பெற தகுதி உள்ள அனைத்து வீரா்களின் துறைசாா் அறிவு, தலைமைப் பண்புகள், போா் மற்றும் நெருக்கடி நிலை காலங்களுக்குப் பொருத்தமான தன்மைகள், உயா்பதவி வகிக்க தேவையான தகுதிகள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் அடங்கிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வீரா்கள் மதிப்பிடப்படுவா். பின்னா் கொடி அதிகாரியின் தலைமையில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழு தோா்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு வீரரையும் தனத்தனியே பகுப்பாய்வு செய்யும். அதன் பின்னரே பதவி உயா்வு வழங்கப்படும். இதன் மூலம் கடற்படையில் மேற்கொள்ள வேண்டிய சீா்திருத்தங்கள் குறித்தும் அறிய இயலும்.
சிறாா் பாலியல் துன்புறுத்தல் தொடா்பாக 2,114 குழுக்கள் மற்றும் சேனல்கள் தடை-டெலிகிராம்:
இந்தியாவில் சிறாா் பாலியல் துன்புறுத்தல் புகைப்படங்கள் மற்றும் காணொலிகளை விரைந்து நீக்கவேண்டும் என்று ‘எக்ஸ்’, ‘யூடியூப்’ மற்றும் ‘டெலிகிராம்’-க்கு உத்தரவிட்டு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில், ‘டெலிகிராம்’ தளம் சாா்பில் வெளியிடப்பட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டதாவது: கடந்த அக்டோபா் 6-ஆம் தேதி சிறாா் பாலியல் துன்புறுத்தல் தொடா்பாக 2,114 குழுக்கள் மற்றும் சேனல்கள் தடை செய்யப்பட்டன. இதன் மூலம், இந்த மாதத்தில் மொத்தம் 10,312 குழுக்கள் மற்றும் சேனல்கள் தடை செய்யப்பட்டுள்ளன. பாலியல் வன்கொடுமை மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமை, சிறாா் ஆபாச படங்கள், சிறாா் பாலியல் துன்புறுத்தல் புகைப்படங்கள் மற்றும் காணொலிகள் குறித்து புகாரளித்த 10 முதல் 12 மணி நேரத்தில், அவை டெலிகிராம் தளத்தில் இருந்து நீக்கப்படுகின்றன. இந்த விவகாரங்களில், இந்தியாவின் தகவல் தொழிநுட்ப விதிமுறைகள் 2021-க்கு உடன்பட்டு டெலிகிராம் செயல்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியப் போட்டியில் இந்தியா -107 பதக்கங்கள் சாதனை:
ஹாங்ஷௌ ஆசியப் போட்டியில் இந்தியா 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலப் பதக்கங்களுடன் ஒட்டுமொத்தமாக 107 பதக்கங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. முதன்முறையாக ஆசியப் போட்டி வரலாற்றிலேயே 100 பதக்கங்களுக்கு மேல் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023-அக்டோபர் 8
8th October இந்திய விமானப்படை தினம் : இந்திய விமானப் படை நாள் (Indian Air Force Day) ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 8 அன்று இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.இந்தியப் பாதுகாப்புப் படையின் ஓர் அங்கமாக இந்திய விமானப் படை, 1932இல் அக்டோபர் மாதம் 8ஆம் நாளில், இந்தியா ஆங்கிலேய ஆதிக்கத்தின் கீழ் இருந்தபோது உருவாக்கப்பட்டது. இந்திய விமானப்படைச் சட்டம் 1932 ன்படி பிரித்தானியா ராயல் விமானப் படையின் ஒரு பகுதியாக இந்திய விமானப்படை தோற்றுவிக்கப்பட்டது. தொடக்கத்தில் பிரித்தானியாவின் சீருடை மற்றும் முத்திரைகளையே, இந்திய விமான படையினரும் பின்பற்றினர், இரண்டாம் உலகபோரின்போது சப்பானிய பர்மா படையை தடுத்து நிறுத்தியதில் முக்கிய பங்கு வகித்தது. இந்திய விடுதலைக்கு பின்பு, இந்திய பாதுகாப்பு படையின் ஓர் அங்கமாக இருந்த விமானப்படை உலகின் நான்காவது பெரிய விமானப்படையாக உருப்பெற்றது-(இந்திய விமானப்படையானது "நபம் ஸ்பர்ஷம் தீப்தம்" என்ற முழக்கத்துடன் செயல்படுகிறது, இது "புகழ்வுடன் வானத்தைத் தொடவும்".)
8th October உலக டிஸ்லெக்ஸியா தினம் : உலக டிஸ்லெக்ஸியா தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. டிஸ்லெக்ஸியா என்பது பொதுவாக கற்றலில் ஏற்படும் குறைபாடாகும். இது படிப்பு மற்றும் எழுதும் திறனைப் பாதிக்கிறது. இந்தக் குறைபாடு உள்ளவர்களுக்கு சரளமாக வாசிப்பதும், எழுதுவதும் சவாலான விஷயமாகும்.உலக டிஸ்லெக்ஸியா தினம், இந்தப் பிரச்சினைகள் பற்றியும் அவற்றை எவ்வாறு சரி செய்வது என்பது பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை, டிஸ்லெக்ஸியா குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகளை நடத்துகிறது .
- LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL
- இந்திய தேசிய தினங்கள் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
- யுனெஸ்கோவில் அனுசரிக்கப்படும் சர்வதேச தினங்கள்
- 2023 ஆம் ஆண்டின் தமிழ் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
SUMMITS AND CONFERENCES 2023 IN TAMIL:
No comments:
Post a Comment