Thursday, October 19, 2023

DELHI SULTANS / டெல்லி சுல்தான் -TNPSC HISTORY AND CULTURE OF INDIA IN TAMIL ( 6 TO 12 BOOK NOTES )

 

டெல்லி சுல்தான்

பதின்மூன்று முதல் பதினாறாம் நூற்றாண்டு முற்பகுதி வரையான காலத்தில் (1200 - 1550) இஸ்லாமிய அரசு (தில்லி சுல்தானியம்) நிறுவப்பட்டது. இதன் விளைவாக இஸ்லாமிய நிறுவனங்களும் இஸ்லாமியப் பண்பாடும் இந்தியாவில் காலூன்றின. இக்காலகட்டத்தின் வரலாற்றை வெவ்வேறு கண்ணோட்டத்தில் வரலாற்றாசிரியர்கள் விளக்கியுள்ளனர்.

டெல்லி சுல்தானியர்களைப் பற்றி அறிய உதவும் சான்றுகள்

  • அல்-பெருனி : தாரிக்-அல்-ஹிந்த் (அரபு மொழியில் எழுதப்பட்ட இந்திய தத்துவஞானமும் மதமும்)
  • மின்ஹஜ் உஸ் சிராஜ்: தபகத்-இ-நசிரி (1260) (அரபு மொழியில் எழுதப்பட்ட உலக இஸ்லாமிய வரலாறு)
  • ஜியாவுத்தின் பாரனி : தாரிக்-இ-பெரோஸ் ஷாஹி (1357) பெரோஸ் துக்ளக் வரையிலான தில்லி சுல்தான்கள் வரலாறு
  • அமிர் குஸ்ரு: மிஃப்தா உல் ஃபுதூ (ஜலாலுதீன் கில்ஜியின் வெற்றிகள்); கஜைன்; உல் ஃபுதூ (அலாவுதீன் கில்ஜியின் வெற்றிகள் - பாரசீக மொழியில்)
  • துக்ளக் நாமா (பாரசீக மொழியில் துக்ளக் வம்ச வரலாறு)
  • சம்ஸ்-இ-சிராஜ் அஃபிஃப்: தாரிக் இ ஃபெரோஜ் ஷாஹி (தில்லி சுல்தானியம் பற்றிப் பாரசீக மொழியிலுள்ள பாரனியின் குறிப்புகளை ஒட்டியது)
  • குலாம் யாஹ்யா பின் அஹ்மத்: தாரிக் இ-முபாரக் ஷாஹி (சையது ஆட்சியாளர் முபாரக் ஷாவின் ஆட்சியில் பாரசீக மொழியில் எழுதப்பட்டது)
  • ஃபெரிஷ்டா : இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியின் வரலாறு (பாரசீக மொழி)

இக்காலகட்ட (1206-1526) தில்லி சுல்தானியம் ஒரே மரபைச் சேர்ந்த ஆட்சியாளர்களால் ஆளப்படவில்லை. அதன் ஆட்சியாளர்கள் ஐந்து வெவ்வேறு வம்சங்களைச் சேர்ந்தவர்கள் 

1.அடிமை வம்சம் (1206-1290) PDF

2. கில்ஜி வம்சம் (1290-1320) PDF

3.துக்ளக் வம்சம் (1320-1414), PDF

4.சையது வம்சம் (1414-1451), PDF

5.லோடி வம்சம் (1451-1526) PDF

சுல்தானிய ஆட்சி நிர்வாகம் PDF

6 TO 12 BOOK -DELHI SULTANS (ONELINE PDF) -TNPSC HISTORY AND CULTURE OF INDIA IN TAMIL



No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: