Thursday, October 19, 2023

லோடிகள் (1451 – 1526) :DELHI SULTANS-TNPSC HISTORY AND CULTURE OF INDIA IN TAMIL ( 6 TO 12 BOOK NOTES )

லோடிகள் (1451 – 1526)

சையதுகளை அடுத்து ஆட்சிக்கு வந்த லோடிகள் ஆப்கானியர்கள். டெல்லியின் முதல் ஆப்கானிய ஆட்சியாளர் பஹ்லுல் லோடி. அவருக்கு முன்பு ஆட்சி செய்த அனைவரும் துருக்கியர்கள். 1489ல் அவர் மறைந்த பின் அவரது மகன் சிக்கந்தர் லோடி ஆட்சிக்கு வந்தார்

லோடி ஆட்சியாளர்கள் மூவரில் சிக்கந்தர் லோடியே (1489 – 1517) புகழ்மிக்கவர். பீகார் முழுவதையும் அவர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார்.

பல ரஜபுத்திரத் தலைவர்களும் அவரால் முறியடிக்கப்பட்டனர். வங்காளத்தை தாக்கி அதன் ஆட்சியாளரை அடிபணியச் செய்தார்.

பஞ்சாப் முதல் பீகார் வரை தமது அரசை சிக்கந்தர் லோடி விரிவுபடுத்தினார். அவர் சிறந்த ஆட்சியாளரும்கூட சாலைகள் பல அமைக்கப்பட்டன. நீர்ப்பாசன வசதிகள் மேம்படுத்தப்பட்டன. இத்தகைய நற்குணங்கள் வாய்ந்த அவர் ஒரு சமய வெறியராகவும் இருந்தார்.

இந்துக்கள்மீது பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்தார். இருப்பினும்ää லோடி சுல்தான்களில் வலிமையும் அதிகாரமும் பெற்றுத் திகழ்ந்தவர் அவரே.

சிக்கந்தர் லோடிக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அவரது மூத்த மகன் இப்ராஹிம் லோடி ஆணவமிக்கவர். அரசவையிலேயே உயர்குடியிpனரை அவர் அவமதித்தார். கலகம் செய்தவர்கள் கொல்லப்பட்டனர். அவரது சிற்றப்பத அலாவுதீன் கலகத்தில் ஈடுப்பட்டார்.

பஞ்சாபின் ஆளுநராக இருந்த தௌலத்கான் லோடியும் இப்ராஹிம் லோடியால் அவமதிக்கப்பட்டார். மனம் வெறுத்த தௌலத்கான் லோடி இந்தியாமீது படையெடுத்து வரும்படி பாபருக்கு அழைப்பு விடுத்தார்.

டெல்லிக்கு எதிராக படையெடுத்து வந்த பாபர் 1526 ஆம் ஆண்டு பானிப்பட்டுப் போரில் இப்ராஹிம் லோடியை முறியடித்துக் கொன்றார். ஆப்கானியர்களின் அரச எழுபத்தி ஐந்து ஆண்டுகளே நீடித்தது.


பாஹ்லால் லோடி 

பாஹ்லால் லோடி (கி.பி. 1451–1489) டெல்லியை ஆண்ட சுல்தான்களில் லோடி மரபே இறுதியாக ஆட்சி செய்தது. இம்மரபைத் தொடங்கி வைத்தவர் பாஹ்லால் லோடி ஆவார்.

பாஹ்லால் லோடி அரியணையில் அமரவில்லை. உயர் குடியினரின் ஆதரவை பெறுவதற்காகவே உயர்குடியினரோடு கம்பளத்தில் அமர்ந்து ஆட்சி செய்தார்.

விவேகம் நிறைந்த மன்னரான பாஹ்லால் லோடி தனக்கென்று சில வரையறைகளை வகுத்துக்கொண்டார். தம் நாட்டு உயர்குடிகுழுவினரின் மனநிறைவினை அறிந்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கையை தொடங்குவார். இவர் போரின் மூலம் மேவார், சம்தல், சகிட், எட்வா,  குவாலியர் ஆகிய பகுதிகளை வென்றார்.  பாஹ்லால் லோடி கி.பி. 1489 இல் மரணமடைந்தார்.

சிக்கந்தர் ஷா (கி.பி. 1489–1517)

பஹ்லால் லோடியை அடுத்து அவரது மகன் சிக்கந்தர் ஷாஹி பதவி ஏற்றார். சிக்கந்தர் ஷா என்ற பட்டப் பெயருடன் ஆளத் தொடங்கினார். இவர் தமது பேரரசை பஞ்சாப் முதல் பீகார் வரை விரிவடையச் செய்தார். ஆக்ரா நகரை கட்டினார். இவர்களது காலத்தில் ஆக்ரா நகர் முக்கியத்துவம் பெற்று, நிர்வாகம் மற்றும் பண்பாடு மையமாகத் திகழ்ந்தது.

சிறந்த ஒற்றர் படையை உருவாக்கினார். வேளாண்மையும், தொழிற்துறையும், முன்னேற்றம் அடைந்தனர். இவர் காலத்தில் கணிதம், வானவியல், யோகா, மருத்துவம், உள்ளிட்ட பல சமஸ்கிருத நூல்கள் பாரசீக மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டன. ஷெனாய் இசையை இவர் மிகவும் விரும்பினார். லஹ்ஜட்–இ–சிக்கந்தர் ஷாஹி என்ற இசைத்தொகுப்பு இவர் காலத்தில் உருவாக்கப்பட்டது.

சிக்கந்தர் ஷா ஒரு தீவிர இஸ்லாமிய பற்றுடையவர். எனவே இந்துக்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தார். லோடி மரபின் சிறந்த அரசராக இவர் கி.பி. 1517 இல் மரணமடைந்தார்.

இப்ராஹிம் லோடி (கி.பி. 1517–1526)

சிக்கந்தர் லோடி அடுத்து இப்ராஹிம் லோடி பட்டமேற்றார். இவர் சகிப்புத்தன்மையற்றவராகவும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாதவராகவும் விளங்கினார். 

உயர்குடியினரை அவமானப்படுத்தியதோடு ஒரு சிலரை கொடுமையாக கொலையும் செய்தார். பஞ்சாம் ஆளுநரான தெளலத்கான் லோடியின் மகன் தில்வர்கான் லோடியை இவர் கொடுமைப்படுத்தியதால்,  தெளலத்கான் லோடி காபூல் மன்னர் பாபரின் உதவிக்கு அழைத்தார். 

பாபர் தனது பெரும் படையுடன் இந்தியாவிற்கு வந்தார். கி.பி. 1526 இல் நடைபெற்ற முதலாம் பானிபட் போரில் இப்ராஹிம் லோடியை வென்றார். இந்த வெற்றியானது டெல்லியில் சுல்தான்களின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, முகலாயர் ஆட்சியை தொடங்கி வைத்தது



No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: