TODAY CURRENT AFFAIRS IN TAMIL 10.09.2023:
- பப்ஜியின் இந்திய வடிவமான பிஜிஎம்ஐ (BGMI) ஆன்லைன் கேமின் பிராண்டு தூதுவராக பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை அறிவித்திருக்கிறது கிராஃப்டான் நிறுவனம். மேலும், ரன்வீர் சிங்கைக் கொண்டே பிளே ப்யூர் என்ற தங்களின் புதிய பிரச்சாரக் காணொளி ஒன்றையும் யூடியூபில் பகிர்ந்திருக்கிறது பிஜிஎம்ஐ
- இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி பாலம் - கேரளாவில் திறப்பு:ரூ.3கோடி செலவில் 120அடி நீளத்தில் 5அடுக்கு கண்ணாடிகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த கண்ணாடி பாலம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,600அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.
- விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுப்பதற்காக அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தமிழக அரசு 6 மாதங்கள் வரைத் தற்காலிக தடை விதித்துள்ளது. மேலும், மஞ்சள் பாஸ்பரஸ் எனும் எலிக் கொல்லி மருந்துக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட 6 பூச்சிக்கொல்லிகள்: ப்ரோஃபினோபோஸ் (Profenophos), மோனோக்ரோடோபோஸ் (Monocrothophos), அசபேட்(Acephate), குளோர் பைரிபோஸ் சைபர்மெத்ரின்(Chlorpyriphos Cypermethrin), ப்ரோஃபினோபோஸ் சைபர்மெத்ரின் (Profenophos Cypermethrin), குளோர்பைரிபோஸ் (Chlorpyriphos) இந்த பொருட்களின் சில்லறை விற்பனையும் மொத்த விற்பனையும் ஆன்லைன் விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளது.
- 19 வயதிலேயே முதல் கிராண்டுஸ்லாம் பட்டத்தை வென்றார் அமெரிக்காவைச் சேர்ந்த கோகோ காஃப்: டிரேசி ஆஸ்டின் மற்றும் செரீனா வில்லியம்ஸூக்கு அடுத்தபடியாக, யுஎஸ் ஓபன் கிராண்டுஸ்லாம் பட்டத்தை வெல்லும் இளம்பெண்கள் பட்டியலில் மூன்றாவதாக இணைந்திருக்கிறார் கோகோ காஃப்.
- இமாச்சலப் பிரதேசத்தின் 15வது முதல்வராக சுக்விந்தர் சிங் சுக்கு (58), பதவி ஏற்றார்.
IMPORTANT DAYS AND DATES IN SEPTEMBER 2023 - செப்டம்பர் 10
உலக தற்கொலை தடுப்பு தினம் (WSPD):உலக தற்கொலை தடுப்பு தினம் (WSPD) ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10 அன்று தற்கொலை நிகழ்வுகளைத் தடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த அனுசரிக்கப்படுகிறது. தற்கொலை தடுப்புக்கான சர்வதேச சங்கம் (IASP) இந்த நாளை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நாள் WHO ஆல் இணைந்து அனுசரணை செய்யப்படுகிறது.
SUMMITS AND CONFERENCES 2023:
- SUMMITS AND CONFERENCES JULY 2023
- SUMMITSAND CONFERENCES AUGUST 2023
- SUMMITSAND CONFERENCES SEPTEMBER 2023