TODAY CURRENT AFFAIRS IN TAMIL 08.09.2023:
- பெரிய துறைமுகங்களில் ஒன்றான தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகம், கடந்த 1976 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இத்துறைமுகத்தின் புதிய இலச்சினை (லோகோ) வடிவமைக்கப்பட்டது. புதிய இலச்சினையை வெளியிடும் நிகழ்ச்சி, துறைமுக ஆணைய நிா்வாக அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீா்வழி போக்குவரத்துத் துறைச் செயலா் தா.கி.ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, புதிய இலச்சினையை வெளியிட்டாா்.தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தில் திரவ ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் திட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீா்வழி போக்குவரத்துத் துறைச் செயலா் தா.கி. ராமச்சந்திரன் தெரிவித்தாா்.
- தில்லியில் செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் ஜி20 உச்சி மாநாட்டிற்காக G20 இந்தியா செயலியானது G20க்காக உருவாக்கப்பட்டள்ளது.-ஜி 20 இந்தியா 2023 உச்சிமாநாட்டின் முக்கிய அம்சங்கள்
- மாநிலங்களவையில் 25 மசோதாக்கள் நிலுவையில் உள்ளதாக அந்த அவையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறும் மசோதாக்கள் மட்டுமே சட்டவடிவு பெறும். மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு நிலுவையில் உள்ள மசோதாக்கள், அதன் 5 ஆண்டு பதவிக்காலம் நிறைவடைந்தவுடன் தாமாகவே காலாவதியாகிவிடும்.
- தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான ஆசியான் கூட்டமைப்பில் 10 நாடுகள் இடம்பெற்றுள்ளன. ஆசியான்-இந்தியா இடையேயான 20-ஆவது மாநாடு, இந்தோனேசியா தலைநகா் ஜகாா்த்தாவில் 07.08.2023 நடைபெற்றது
- இந்திய விமானப் படைக்கு ஏா்பஸ் நிறுவனத்தின் ‘சி-295’ ரக போக்குவரத்து விமானத்தின் முதல் விமானம் இந்த மாதத்துக்குள் வழங்கப்படும் என அந்நிறுவனத்தின் இந்திய பிரிவுத் தலைவா் ரெமி மெய்லாா்டு 07.08.2023 தெரிவித்தாா். ஏா்பஸ் நிறுவனத்தின் தயாரிப்பான சி-295 ரக போக்குவரத்து விமானம், 10 டன்கள் வரை சுமை தாங்கிச் செல்லும் திறன்கொண்டது. இந்த விமானம் 71 வீரா்கள் அல்லது 50 பாராசூட் படைப்பிரிவு வீரா்களைச் சுமந்து செல்லும். மேலும், குறுகிய அல்லது ஆயத்தமில்லாத ஓடுதளங்களிலும் இந்த விமானத்தை இறக்கவும் மேலெழும்பச் செய்யவும் தகுதி வாய்ந்தது.
- தென்கிழக்கு ஆசிய நாடுகள்-இந்தியா இடையேயான 20-ஆவது மாநாடு இந்தோனேசியா தலைநகா் ஜகாா்த்தாவில் 07.08.2023 நடைபெற்றது. அந்த மாநாட்டில் தைமூா் லெஸ்தே சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டது. மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமா் மோடி, தைமூா் லெஸ்தே நாட்டில் இந்தியாவின் தூதரகம் அமைக்கப்படும் எனத் தெரிவித்தாா்.
- சூரியனின் புறவெளியை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா-எல் 1 விண்கலம் பூமி, நிலவை படம் பிடித்தும், தன்னையும் தற்படம் எடுத்தும் அனுப்பி உள்ளது. இந்தப் படங்களை இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ 07.08.2023 வெளியிட்டது.-ஆதித்யா-எல்1 விண்கலம் அடிப்படை தகவல்கள்
- உலகம் முழுவதும் பெரும்பாலாக அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வரும் பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள், கடந்த 1998ல் செர்ஜி பிரின், லாரி பேஜ் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது. இம்மாத இறுதியில் கூகுள் 25 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
- மத்திய பிரதேசத்தின் ரெய்சன் மாவட்டத்தின் சாஞ்சி நகரமானது இந்தியாவின் முதல் சோலார் நகரமாக (Solar City) திகழ்கிறது.
- திருப்பத்தூா் அருகே 17-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த அங்கநாதீஸ்வரா் கோயிலுக்கான நிலக்கொடைக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியா் ஆ.பிரபு,சமூக ஆா்வலா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஆய்வு குழுவினா் திருப்பத்தூா் அடுத்த சோமலாபுரம் என்ற இடத்தில் தனியாா் விவசாய நிலத்தில் ஒரு கல்வெட்டு இருப்பதைக் கண்டறிந்தனா். இங்கு கிடைத்துள்ள கல்வெட்டானது, 5 அடி நீளமும் 3 அடி அகலமும் கொண்ட பலகைக் கல்லால் வடிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் 17 வரிகள் எழுதப்பட்டுள்ளன. கல்வெட்டுச் செய்திகள் தமிழும் கிரந்தமும் சில இடங்களில் வடமொழியும் கலந்து எழுதப்பட்டுள்ளன. திறந்த வெளியில் பல்லாண்டுகளாக பாதுகாப்பற்ற சூழலில் கிடந்ததால் கல்வெட்டு உராய்ந்து எழுத்துக்கள் மங்கிய நிலையில் காணப்படுகின்றன.
- இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான டி.ஒய்.சந்திரசூட், சிங்கப்பூர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான சுந்தரேஷ் மேனன் ஆகிய இருவருக்கும் இடையே இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாட்டின் உச்சநீதிமன்றங்கள் நீதித்துறையில் ஒன்றிணைந்து செயல்படும் வகையில் நீதித்துறை ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.
- ஆந்திரப்பிரதேசத்தின் விஜயவாடா ரயில் நிலையமானது இந்தியன் கீரின் பில்டிங் கவுன்சிலின் (Indian Green Building Council) பசுமை நிலைய சான்றிதழை பெற்றுள்ளது.
- மூன் ஸ்நைப்பர் (Moon Sniper) : ஜப்பானின் ஜக்ஸா விண்வெளி ஆய்வு நிறுவனமானது நிலவில் ஆய்வுகளை மேற்கொள்ள எக்ஸ்-ரே (X-Ray) என்னும் தொலைநோக்கியும், SLIM (Smart Lander for Investigating Moon) என்ற லேண்டரும் கூடிய விண்கலத்தை ஹெச்ஐஐ-ஏ (HII-A) ராக்கெட் உதவியால் விண்ணில் ஏவியுள்ளது.
IMPORTANT DAYS AND DATES IN SEPTEMBER 2023 - செப்டம்பர் 8
சர்வதேச எழுத்தறிவு தினம் (International Literacy Day): கல்வியறிவின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8 ஆம் தேதி சர்வதேச எழுத்தறிவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இது கண்ணியம் மற்றும் மனித உரிமைகள் என்பதில் சந்தேகமில்லை. இது ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி இலக்குகளின் முக்கிய அங்கம் என்பதை உங்களுக்குச் சொல்கிறோம்.கருப்பொருள்: “Promoting literacy for a world in transition: Building the foundation for sustainable and peaceful societies”
உலக உடல் சிகிச்சை தினம் (World Physiotherapy Day) :உலக உடல் சிகிச்சை தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8 அன்று அனுசரிக்கப்படுகிறது, இது உலகெங்கிலும் உள்ள உடல் சிகிச்சையாளர்களுக்கு மக்களின் நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் தொழிலின் முக்கிய பங்களிப்பைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.கருப்பொருள்: Illumination Arthritis
No comments:
Post a Comment