TODAY CURRENT AFFAIRS IN TAMIL 01.09.2023:
- தென்காசி மாவட்டம், செங்கோட்டையை சேர்ந்த நிகர் ஷாஜி ஆதித்யா எல்-1 விண்கல திட்ட இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் 2023 செப்டம்பர் 02-ல் ஆதித்யா எல்-1 விண்கலமானது BSLVC 57 ராக்கெட் உதவியுடன் விண்ணில் செலுத்தப்பட உள்ளது சூரியனை ஆய்வு செய்யும் நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியனை அடுத்து நான்காவது நாடாக இந்தியா இணைந்துள்ளது-ஆதித்யா-எல்1 விண்கலம் அடிப்படை தகவல்கள்
- இந்திய கிரிக்கெட் அணியின் உள்நாட்டு தொடா்களை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒளிபரப்பு செய்வதற்கான உரிமத்தை வயாகாம் 18 நிறுவனம் சுமாா் ரூ.6,000 கோடிக்கு வாங்கியது. தொலைக்காட்சி, டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமத்துக்காக பிசிசிஐ தனித்தனியே நடத்திய இணையவழி ஏலத்தில் ஸ்டாா் இந்தியா, சோனி நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி ஒளிபரப்பு உரிமத்தை ரூ.5,963 கோடிக்கு கையகப்படுத்தியிருக்கிறது வயாகாம் 18 நிறுவனம்.
- தமிழக அரசுப் பள்ளிகளை சுகாதாரமான முறையில் வைத்திருக்கும் வகையில் எங்கள பள்ளி மிளிரும் பள்ளித் திட்டமானது செயல்படுத்தப்பட உள்ளது இத்திட்டத்தில் பள்ளி வளாகத்தை பசுமையாக வைத்திருப்பது, மாணவர்களிடையே சுய சுகாதாரத்தைப் பேணச் செய்வது, சுற்றுச்சூழல் மற்றும் கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, நெகிழி இல்லாத வளாகத்தை உருவாக்கும் திட்டம் போன்ற சிறப்பு அம்சங்கள் அடங்கியுள்ளன.
- புதிய சிம்-காா்டு விற்பனை விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்-மத்திய அரசு: நாட்டில் அங்கீகரிக்கப்படாத வியாபாரிகள் மூலம் சிம்-காா்டு விற்கப்படுவது கண்டறியப்பட்டால் விரைவில் நடைமுறைக்கு வரும் புதிய விதிகளின்படி சம்பந்தப்பட்ட தொலைத்தொடா்பு நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என மத்திய தொலைத்தொடா்பு துறை அறிவித்துள்ளது.சிம்-காா்டு இணைப்பை மையமாகக் கொண்டு பல்வேறு மோசடிகள் நடைபெறுகின்றன. அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சிம்-காா்டு விற்பனையை ஒழுங்கப்படுத்த திட்டமிட்டு மத்திய அரசு வகுத்த புதிய விதிகள் வரும் அக்டோபா் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
- த.முருகேசன் தலைமையிலான 14 பேர் அடங்கிய குழுவானது தமிழ்நாட்டின் கல்விக் கொள்கையை வடிவமைக்க ஏற்படுத்தப்பட்டள்ளது.
- மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறையானது நடப்பு 2023-24-ஆம் நிதியாண்டில் நிா்ணயிக்கப்பட்ட மொத்த இலக்கில் 33.9 சதவீதத்தை எட்டியுள்ளதாக கணக்கு கட்டுப்பாட்டு இயக்குநரகத்தின் (சிஜிஏ) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ரயில்வே வாரியத் தலைவராக பொறுப்பேற்ற முதல் பெண்: இந்திய ரயில்வே வாரிய தலைவர் மற்றும் தலைமைச் செயல் அலுவலராக ஜெய வர்மா சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- அசாமினைச் சேர்ந்த புற்றுநோய் மருத்துவர் ரவி கண்ணனுக்கு பிலிப்பைன்ஸ் நாட்டின் உயரிய விருதான ரமோன் மகசேசே விருதான வழங்கப்பட்டுள்ளது. இவர் தமிழகத்தினை பூர்வீகமாக கொண்டவர்.TNPSC UNIT II: நடப்பு விவகாரங்கள் விருதுகள் கௌரவங்கள் 2023
- நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2023-24 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் அதிகபட்சமாக 7.8 சதவிகித பொருளாதார வளர்ச்சி விகிதத்தைப் பதிவுசெய்துள்ளதாகவும், விவசாயம் மற்றும் நிதித் துறைகளின் சிறந்த செயல்திறன் காரணமாக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா வளர்ச்சியடையும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக தேசிய புள்ளியியல் அலுவலக தரவுகள் தெரிவிக்கின்றன. 2022-23 அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 4.5 சதவிகிதமாகவும், ஜனவரி-மார்ச் காலாண்டில் 6.1 சதவிகிதமாகவும், ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 13.1 சதவிகிதமாகவும் இருந்தது.
- இந்தியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு இடையே விமான போக்குவரத்து புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கையெழுத்தாகியுள்ளது.
- கனடா தேசிய மகளிர் கிரிக்கெட் அணியில் இணைந்து சாதனை படைத்த முதல் திருநங்கை போட்டியாளரான டேனியல் மெக்காஹே சர்வதே கிரிக்கெட் போட்டியிலிருந்து தனது ஓய்வினை அறிவித்துள்ளார்
No comments:
Post a Comment