பகுதி – (ஆ) – இலக்கியம்
ஐம்பெருங் காப்பியங்கள்:
சீவக சிந்தாமணி
சீவக சிந்தாமணி என்பது சங்க காலத்துக்குப் பின்னர் தோன்றிய ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று. சோழர் காலத்தில் எழுதப்பட்டது. திருத்தக்கதேவர் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்ட இக் காப்பியம் சீவகன் என்பவனின் அக வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. சமய இலக்கியங்களே அதிகம் படைக்கப்பட்ட அக்காலத்தில், மக்களிடத்திலும் மன்னனிடமும் கூட இதற்கான தேவையும், ஆதரவும் இருந்ததாகத் தெரிகிறது.
சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் தமிழில் தோன்றிய முதல் இரு காப்பியங்களாகக் கருதப்படும், கதையை அடிப்படையாகக் கொண்ட இலக்கியங்களைத் தொடர்ந்து மூன்றாவதாக உருவான கதை கூறும் தமிழ் இலக்கியம் இது. எனினும் முன்னையவற்றைப் போலன்றிச் சீவகசிந்தாமணி விருத்தப்பாக்களால் ஆனது. இதனால் விருத்தப் பாக்களால் ஆன முதல் தமிழ்க் காப்பியமாகவும் இது திகழ்கின்றது.
நூல் குறிப்பு:
சீவக சிந்தாமணி," மூவா முதலா உலகம் " எனத் தொடங்கும் கடவுள் வாழ்த்தோடு தொடங்குகிறது. இந்நூலில் நாமகள் இலம்பகம் முதலாக முத்தி இலம்பகம் ஈறாக, 13 இலம்பகங்களைக் கொண்டு திகழ்கின்றது. இலம்பகம் யாவும் மகளிர் பெயரினையே பெற்றுள்ளன. ஒவ்வோர் இலம்பகத்திலும் ஒரு மண நிகழ்ச்சி கூறப்பட்டுள்ளது. இலக்கியச் சிறப்பு மிக்க இந்நூலில் 3145 பாடல்கள் உள்ளன. விருத்தம் என்னும் பாவகையால் பாடப் பெற்றது.
- ஆசிரியர் = திருத்தக்கதேவர்
- காலம் = கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு
- சமயம் = சமணம்
- 13 இலம்பகம்
- 3145 பாடல்கள்
- முதல் இலம்பகம் = நாமகள் இலம்பகம்
- இறுதி இலம்பகம் = முக்தி இலம்பகம்
- பாவகை = விருத்தப்பா
- பாடல்கள் = 3145 விருத்தங்கள்
- சிந்தாமணி என்பது கேட்டதை கொடுக்கும் தேவலோகத்தில் உள்ள ஒரு மணி.
நூலாசிரியர்:
இக்காப்பியத்தை இயற்றிய திருத்தக்கதேவர் சமண முனிவராவார். இவர்,
- திருத்தகு முனிவர்
- திருத்தகு மகா முனிவர்
- தேவர்
என்று அழைக்கப் பெறுவார். இவர் சைன ஆசாரியர் சங்கங்களில் ஒன்றாகிய திரமிள சங்கத்து அருங்கலான்வயத்தைச் சேர்ந்தவர் என்பர். திருத்தக்கதேவர் சோழர் குடியில் பிறந்தவர். இளமையிலேயே கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியவர். வடமொழிப் பயிற்சி மிக்கவர். காமம், பொய், கொலை, கள், சூதாடல் என்ற ஐவகைத் தீமையும் அகற்றியவர். சமணத் துறவியாக வாழ்ந்தவர். விருத்தமெனும் பாடல்களைக் கொண்டு பெருங்காப்பியம் பாடியவர்களில் இவர் முதன்மையானவர்.
- திருத்தக்கதேவர் சோழ மரபினர்.
- இவர் எழுதிய மற்றொரு நூல் = நரிவிருத்தம்
- சீவக சிந்தாமணியை தேவர் எட்டே நாட்களில் படைத்தார்.
- இவர் நூலை அரங்கேற்றிய இடம் = மதுரை தமிழ் சங்கம்
- இவரை பற்றிய குறிப்பு கர்நாடக மாநிலம் சிரவண பெலகுளா கோவில் கல்வெட்டில் உள்ளது.
சீவக சிந்தாமணியின் வேறு பெயர்கள்:
- மணநூல்
- முக்திநூல்
- காமநூல்
- மறைநூல்
- முடிபொருள் தொடர்நிலைச் செய்யுள்(அடியார்க்கு நல்லார்)
- இயற்கை தவம்
- முதல் விருத்தப்பா காப்பியம்
- சிந்தாமணி தமிழ் இலக்கிய நந்தாமணி
முக்கிய பாத்திரங்கள்:
- சீவகன்
- சச்சந்தன் (தந்தை), விசயமாதேவி (தாய்)
- கந்துக்கடன் (வளர்ப்புத் தந்தை), சுநந்தை (வளர்ப்புத் தாய்)
- நந்தட்டன், நபுலன், விபுலன் (வளர்ப்புத் தந்தையின் மக்கள்)
- சீதத்தன், புத்திசேனன், பதுமுகன், தேவதத்தன் (நண்பர்கள்)
- காந்தருவதத்தை, குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை (சீவகன் மனைவியர்)
- அச்சணந்தி (ஆசிரியர்)
- கட்டியங்காரன் (பகைவன்)
கதைச் சுருக்கம்
மன்னனுக்கு மகனாக, அரசியின் வயிற்றில் உருவானவன் சீவகன். எனினும் விதி வசத்தால் சுடுகாட்டில் பிறக்கிறான். பின்னர் கந்துக்கடன் என்னும் வணிகன் ஒருவனின் வீட்டில் வளர்கின்றான்.
அச்சணந்தி என்னும் ஆசானிடம் கல்வி பயின்ற இவன் சிறந்த தோற்றப்பொலிவு கொண்டவன், மிகுந்த அறிவு நிரம்பியவன், பல்வேறு கலைகளிலும் வல்லவன், சிறந்த வீரன். இவன் எட்டு மங்கையரை மணந்து கொள்கிறான். அந்த எட்டு மகளிர்க்கும் எட்டு வகை குணங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் இந்நூலுக்கு மணநூல் என்ற சிறப்புப்பெயரும் உண்டு. இவ்வாறு பல மணம் புரிந்தவன் ஆனாலும், இவன் ஒரு காமுகனாக அன்றிச் சிறந்த மன அடக்கம் கொண்டவனாகவே சித்திரிக்கப்படுகிறான். இவ்வாறு பல பெண்களை மணம்புரிந்ததன் மூலம், பணபலத்தையும், படைபலத்தையும் பெருக்கிக் கொண்டு அரசபதவியை அடைகிறான்.
30 ஆண்டுகள் நீதியுடன் ஆட்சி செய்த சீவகன், ஆட்சிப் பொறுப்பை மகனிடம் அளித்துவிட்டுத் துறவறம் பூண்டு முத்தி பெறுகிறான்.
நூல் உணர்த்தும் உண்மைகள்
- அமைச்சரை ஆராய்ந்து தெளிதல் வேண்டும்.
- பெண்வழிச்சேறல் பெருந்துன்பம் விளைவிக்கும்.
- தன்ஆட்சியர் கட்டளைப்படி நடத்தல் வேண்டும்.
- பகையை வெல்லக் காலமும், இடமும் வரும் வரை யாரிடமும் தன் எண்ணத்தை வெளிப்படுத்தக் கூடாது.
- எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்த வேண்டும்.
- நன்றி மறவாது இருத்தல் வேண்டும்.
KEY POINTS TNPSC EXAMS -SEEVAKA CHINTAMANI
- சைவனான குலோத்துங்க மன்னன் விரும்பிகற்ற காப்பியம்
- நூல் முழுமைக்கும் சைவரான நச்சினார்கினியர் உரை எழுதியுள்ளார்.
- உ.வே.சா பதிபித்த முதல் காப்பியம் இது.
- கிறித்துவரான ஜி.யு.போப் இந்நூலை, “தமிழில் உள்ள இலக்கியச் சின்னங்களுள் மிக உயர்வானது. தமிழ்மொழியின் இலியதும் ஓடிசியுமான புதிய பெரிய இக்காப்பியம் உலகப் பெருங்காப்பியங்களுள் ஒன்று” என கூறினார்.
- ஜி.யு.போப் திருதக்கதேவரை “தமிழ் கவிஞர்களுள் இளவரசன்” எனப் புகழ்ந்துள்ளார்.
- வடமொழியில் உள்ள கத்திய சூளாமணி, சத்திர சூளாமணி என்ற இரு நூலையும் தழுவி எழுதப்பட்டது.
- கம்பர், “சிந்தாமணியிலும் ஓர் அகப்பை முகந்து கொண்டேன்” என்று கூறியதாக செவிவழிச் செய்தி ஒன்றும் உண்டு.
நச்சினார்கினியர்:
- இவர் சைவர்.
- சீவசிந்தாமணிக்கு இருமுறை உரை எழுதியதாக கூறப்படுகிறது.
- இவரை, “உச்சிமேற்கொள் புலவர் நச்சினார்கினியர்” எனப் போற்றுவர்.
- இவர் கொண்டு கூட்டி பொருள் உரைப்பதில் வல்லவர்
- இவர் “தமிழ்மல்லி நாதசூரி” எனப் போற்றப்படுவார்
மேற்கோள்:
- இவ்வாறாகப் பிறப்பதுவோ
- இதுவோ மன்னற்கு இயல் வேந்தே
- மெய்வகை தெரிதல் தம்மை
- விளங்கிய பொருள்கள் தம்மை
- பொய்வகை இன்றித்தேறல் காட்சி
- ஐம்பொறியும் வாட்டி
- உய்வகை உயிரைத்தேயாது
- ஒழுகுதல் ஒழுக்கம், மூன்றும்
- இவ்வகை நிறைந்த போழ்தே
- இருவினையும் கழியும் என்றான்
- சிலப்பதிகாரம்- CILAPPATIKARAM--TNPSC TAMIL ILLAKKIYAM NOTES PDF
- மணிமேகலை- MANIMEGALAI-TNPSC TAMIL ILLAKKIYAM NOTES PDF
- சீவக சிந்தாமணி -SEEVAKA CHINTAMANI--TNPSC TAMIL ILLAKKIYAM NOTES PDF
- வளையாபதி- VALAYAPATHI--TNPSC TAMIL ILLAKKIYAM NOTES PDF
- குண்டலகேசி - KUNDALAKESI--TNPSC TAMIL ILLAKKIYAM NOTES PDF
No comments:
Post a Comment