சிலப்பதிகாரம் தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று. இந்நூல் 'பாட்டிடையிட்ட தொடர்நிலைச் செய்யுள்' எனவும் வழங்கப்படுகிறது. இக்காப்பியத்தில் இயல், இசை, நாடகம் என்னும் மூன்றினையும் காணலாம். பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பர். ஏனைய நூல்கள் அரசனையோ தெய்வங்களையோ பாட்டுடைத் தலைவனாகக் கொண்டிருக்க சிலப்பதிகாரம் கோவலன் என்ற குடிமகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டதால் இதனை 'குடிமக்கள் காப்பியம்' என்றும் கூறுவர். இன்பியலும் துன்பியலும் கலந்து எழுதப்பட்ட இந்நூலை இயற்றியவர் இளங்கோ அடிகள் என்பவராவார். இவர் புகழ் பெற்ற சேரமன்னன் செங்குட்டுவனுடைய தம்பி எனக் கருதப்படுகின்றது.
* ஆசிரியர் = இளங்கோவடிகள்
* காலம் = கி.பி.2ஆம் நூற்றாண்டு
* அடிகள் = 5001
* காதைகள் = 30
* காண்டங்கள் = 3
* பாவகை = நிலைமண்டில ஆசிரியப்பா
* சமயம் = சமணம்
உரைகள்:
* அரும்பதங்களுக்கு மட்டும் உரை எழுதியவர் அரும்பத உரைகாரர்.
* அடியார்க்கு நல்லாரின் உரை
* ந.மு.வேங்கடசாமி நாட்டார் உரை
ஆசிரியர் குறிப்பு:
* பெயர் = இளங்கோவடிகள்
* பெற்றோர் = இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சோழன் மகள் நற்சோனை
* அண்ணன் = சேரன் செங்குட்டுவன்
இவர் இளவரசுப் பட்டத்தை விடுத்துத் துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். தன் அண்ணன் செங்குட்டுவனுடன் மலை வளம் காணச் சென்றபோது, கண்ணகியைப் பற்றிய செய்தியை சீத்தலைச் சாத்தனார் எனும் புலவர் மூலமாக அறிந்தார் இளங்கோ. கண்ணகியின் கற்பொழுக்கமும், பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் நேர்மையும் அரசியல் நடுநிலைமையும் அவரை மிகவும் கவர, மூவேந்தர்களுக்கும் உரிய தமிழின் உயர் காவியமாக சிலப்பதிகாரத்தை கவிபுனைந்தார் அவர்.
சிலப்பதிகாரம் கோவலன், கண்ணகி மற்றும் கோவலனின் துணைவி மாதவி ஆகியோரது வரலாற்றை விவரிக்கின்றது. இதன் இரட்டைக் காப்பியமாகத் திகழும் மணிமேகலை, ஆடலரசி மாதவியின் மகள் மணிமேகலையின் வரலாற்றை உரைக்கும் காவியமாகும். இதனை எழுதியவர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்னும் புலவர் ஆவார்.
நூலின் வேறு பெயர்கள்:
- தமிழின் முதல் காப்பியம்
- உரையிடையிட்ட பாட்டைச் செய்யுள்
- முத்தமிழ்க்காப்பியம்
- முதன்மைக் காப்பியம்
- பத்தினிக் காப்பியம்
- நாடகப் காப்பியம்
- குடிமக்கள் காப்பியம்
- புதுமைக் காப்பியம்
- பொதுமைக் காப்பியம்
- ஒற்றுமைக் காப்பியம்
- ஒருமைப்பாட்டுக் காப்பியம்
- தமிழ்த் தேசியக் காப்பியம்
- மூவேந்தர் காப்பியம்
- வரலாற்றுக் காப்பியம்
- போராட்ட காப்பியம்
- புரட்சிக்காப்பியம்
- சிறப்பதிகாரம்(உ.வே.சா)
- பைந்தமிழ் காப்பியம்
நூல் அமைப்பு:
காப்பியங்களுக்கான இலக்கண அமைப்பு அனைத்தும் பொருந்தி வரும்படி இயற்றப்பட்ட காப்பியமாகும். காவிரி, வைகை முதலான ஆறுகளும் புகார், உறந்தை, மதுரை, வஞ்சி முதலான நகரங்களும், குரவைக் கூத்து முதலிய கூத்துகளும், திருமால் முதலிய தெய்வங்களும், அடர்ந்து வளர்ந்த பெருங்காடுகளும் இந்நூலில் நன்கு வருணிக்கப்பட்டுள்ளன. அக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கை பற்றிய செய்திகள் இதில் இடம் பெற்றுள்ளன. சிலப்பதிகாரப் பதிகம் இதனை உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் எனக் குறிக்கின்றது. இடையிடையே உரைகளும் வரிப்பாட்டுகளும் கலந்து வந்துள்ளன.
பொருட்செறிவு, தெளிவான இனிய எளிய நடையுடன், அணிகள் பல பொதிந்த தமிழின் வளமான நூலாகும். இறையனார் களவியல் உரைகாரர், இளம்பூரனார் போன்ற உரையாசிரியர்களால் மேற்கோளாக எடுத்தாளப்பட்ட பெருமை உடையது. தமிழறிஞர்களால் மிகுதியாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நூல் இதுவேயாகும். சிலப்பதிகாரம், நூல் முகத்தில் உரைப் பாட்டினையும், கானல் வரி, வேட்டுவ வரி, ஆற்றுவரி, ஊசல்வரி, கண்புகுவரி என்னும் இசைப்பாட்டுகளும் நிறைந்தது. புகார்க் காண்டம், மதுரைக் காண்டம் மற்றும் வஞ்சிக் காண்டம் எனும் உட்பகுப்புகளால் பிரிக்கப்பட்டுள்ளது.
* காண்டங்கள் = 3(புகார் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம்)
* காதைகள் = 30
* முதல் காதை = மங்கல வாழ்த்துப் பாடல்
* இறுதி காதை = வரந்தருகாதை
புகார்க்காண்டம்:
இது 10 காதைகளைக் கொண்டது.அவை,
- மங்கல வாழ்த்துப் பாடல்
- மனையறம் படுத்த காதை.
- அரங்கேற்று காதை.
- அந்தி மாலைச் சிறப்பு செய் காதை.
- இந்திர விழவு ஊர் எடுத்த காதை.
- கடல் ஆடு காதை.
- கானல் வரி
- வேனிற்காதை
- கனாத் திறம் உரைத்த காதை.
- நாடு காண் காதை
- காடு காண் காதை,
- வேட்டுவ வரி,
- புறஞ்சேரி இறுத்த காதை,
- ஊர் காண் காதை,
- அடைக்கலக் காதை,
- கொலைக்களக் காதை,
- ஆய்ச்சியர் குரவை,
- துன்ப மாலை,
- ஊர் சூழ் வரி,
- வழக்குரை காதை,
- வஞ்சின மாலை,
- அழற்படுகாதை,
- கட்டுரை காதை
- குன்றக் குரவை
- காட்சிக் காதை
- கால்கோள் காதை
- நீர்ப்படைக் காதை
- நடுகற் காதை
- வாழ்த்துக் காதை
- வரம் தரு காதை
"சிலப்பதிகாரம்" என்ற சொல் சிலம்பு, அதிகாரம் என்ற இரு சொற்களால் ஆனது. சிலம்பு காரணமாக விளைந்த கதை ஆனதால் சிலப்பதிகாரம் ஆயிற்று.
சிலம்பு என்பது மகளிர் அணியும் காலணி – கண்ணகியின் சிலம்பால் அதிகரித்த வரலாறு
நூல் எழுந்த வரலாறு:
* மலைவளம் காண சென்ற இளங்கோவடிகள், சேரன் செங்குட்டுவன், சீத்தலை சாத்தனார் ஆகியோரிடம் அங்கு இருந்த மக்கள் ஒரு பெண் தெய்வத்தை பார்த்ததாக கூறினர்.
* சீத்தலை சாத்தனார் தனக்கு அப்பெண்ணின் கதை தெரியும் என்று கூறி, அக்கதையை இளங்கோவடிகள் எழுதவேண்டும் எனக் கேட்டார்.
* சீத்தலைச் சாதனார்ர், இளங்கோவடிகளை "முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது; அடிகள் நீரே அருளுக" என வேண்டிக்கொண்டார்.
* இளங்கோவடிகளும், "நாட்டதும் யாமோர் பாட்டுடைச்செய்யுள்" எனக் கூறி சிலப்பதிகாரத்தை படைத்தார்.
நூல் கூறும் மூன்று உண்மைகள்:
* ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும்
* அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்
* உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்துவர்
கதை மாந்தர்கள்:
* கோவலனின் தந்தை மாசாத்துவான்
* கண்ணகியின் தந்தை மாநாய்கன்
* கோவலனின் தோழன் மாடலன்
* கண்ணகியின் தோழி தேவந்தி
* மாதவியின் தோழி , வயந்தமாலை
* கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்தவள் = மணிமேகலை
* கண்ணகி கோவில் கட்டியவன் சேரன் செங்குட்டுவன் கோவில் உள்ள இடம் திருவஞ்சிக்களம்(குமுளி)
* சேரன் செங்குட்டுவன் போர் செய்த இடம் குயிலாலுவம்
KEY POINTS TNPSC EXAMS - CILAPPATIKARAM
- "நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்" என பாரதியார் கூறுகிறார்.
- "சிலபதிகாரச் செய்யுளைக் கருதியும்.தமிழ்ச் சாதியை அமரத்தன்மை வாய்ந்தது என்று உறுதி கொண்டிருந்தேன்" என கூறுகிறார் பாரதியார்.
- "யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவனைப் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணமே பிறந்ததில்லை" என்றார் பாரதியார்
- "முதன் முதலாகத் தமிழ் மக்கள் எல்லோரையும் ஒருங்கே காணும் நெறியில் நின்று நூல் செய்தவர் இளங்கோவடிகள்" – மு.வரதராசனார்
- பாவின் வளர்ச்சிக்கு வித்திட்ட நூல் சிலப்பதிகாரம்
- சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள்.
- நற்றிணைப் பாடல் கண்ணகி வரலாற்றைக் குறிப்பிடுகிறது.
- மலையாள மொழி பொ.ஊ. ஆறாம் நூற்றாண்டில் தோன்றியது. மணிமேகலை வஞ்சி மூதூர் சென்று பல்வேறு சமயங்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தது மலையாளத்தில் அன்று. தமிழில். எனவே மணிமேகலை காலம் ஆறாம் நூற்றாண்டுக்கு முந்தையது.
- புகார் நகரத்தில் சிவன்கோயில் இருந்ததாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
- 276 ஊர்களிலிருந்த சிவன்கோயில்களைக் குறிப்பிடும் தேவாரம் இதனைக் குறிப்பிடவில்லை. எனவே புகார் நகரைக் கடல் கொண்டது தேவாரம் தோன்றிய 7 ஆம் நூற்றாண்டுக்கு முந்தியது.
- புகார் நகரத்தில் பலராமனுக்கும், கண்ணனுக்கும் தனித் தனிக் கோயில்கள் இருந்ததைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.108 திருப்பதிகளைக் காட்டும் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் நூலில் இந்தக் கோயில் பற்றிய செய்தியே இல்லை. இதனாலும் சிலப்பதிகாரம் 7 ஆம் நூற்றாண்டுக்கு முந்தியது என்பது உறுதியாகிறது.
- தேவாரம், திவ்வியப் பிரபந்தம், கம்பராமாயணம், சீவகசிந்தாமணி முதலான நூல்கள் விருத்தப்பா என்னும் பா வகையைத் தோற்றுவிப்பதற்கு முன்னர் வழக்கில் இருந்த ஆசிரியப்பா நடையில் அமைந்துள்ள சிலப்பதிகாரமும், மணிமேகலையும் அந்த நூல்களுக்கு முந்தியவை.
- எனவே இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்களின் காலம் பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டு.
மேற்கோள்:
- மாசறு பொன்னே, வலம்புரி முத்தே
- காசறு விரையே, கரும்பே, தேனே
- அரும்பெறல் பாவாய், ஆருயிர் மருந்தே
- பெருங்குடி வாணிகன் பெருமட மகளே
- இன்துணை மகளிர்க்கு இன்றியமையாக்
- கற்புக் கடம்பூண்ட இத்தெய்வம் அல்லது பொற்புடைத் தெய்வம்
- பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுகத்துக்
- குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள
- அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்,
- உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்,
- ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம்,
- சூழ் வினைச் சிலம்பு காரணமாக,
- சிலப்பதிகாரம் என்னும் பெயரால்
- நாட்டுதும் யாம் ஓர் பாட்டு உடைச் செய்யுள்
- சிலப்பதிகாரம்- CILAPPATIKARAM--TNPSC TAMIL ILLAKKIYAM NOTES PDF
- மணிமேகலை- MANIMEGALAI-TNPSC TAMIL ILLAKKIYAM NOTES PDF
- சீவக சிந்தாமணி -SEEVAKA CHINTAMANI--TNPSC TAMIL ILLAKKIYAM NOTES PDF
- வளையாபதி- VALAYAPATHI--TNPSC TAMIL ILLAKKIYAM NOTES PDF
- குண்டலகேசி - KUNDALAKESI--TNPSC TAMIL ILLAKKIYAM NOTES PDF
No comments:
Post a Comment