பகுதி – (ஆ) – இலக்கியம்
ஐம்பெருங் காப்பியங்கள்
மணிமேகலை
மணிமேகலை ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்களுள் ஒன்று. இக்காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார்.மணிமேகலை காப்பியத்தில் அடி இணையும், அதன் வழிபாடும், வேறு கடவுள்களின் வழிபாடும் இருக்கும் நிலையில், அஃது ஒரு மகாயான காப்பியமாகவே இருக்கமுடியும். மேலும், மகாயான பௌத்தமானது இல்லறத்தையும், துறவறத்தையும் வலியுறுத்தும் நிலையிலும், சிலப்பதிகாரமானது இல்லறத்தையும், மணிமேகலை காப்பியம் துறவறத்தையும் வலியுறுத்துவதாலும், இவை இரட்டைக் காப்பியங்கள் ஆகும்.
* ஆசிரியர் = மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார்
* காலம் = கி.பி.2ஆம் நூற்றாண்டு
* அடிகள் = 4755 வரிகள்
* காதைகள் = 30
* பாவகை = நிலைமண்டில ஆசிரியப்பா
* சமயம் = பௌத்தம்
நூலின் வேறு பெயர்கள்:
* மணிமேகலைத் துறவு
* முதல் சமயக் காப்பியம்
* அறக்காப்பியம்
* சீர்திருத்தக்காப்பியம்
* குறிக்கோள் காப்பியம்
* புரட்சிக்காப்பியம்
* சமயக் கலைச் சொல்லாக்க காப்பியம்
* கதை களஞ்சியக் காப்பியம்
* பசிப்பிணி மருத்துவக் காப்பியம்
* பசு போற்றும் காப்பியம்
* இயற்றமிழ்க் காப்பியம்
* துறவுக் காப்பியம்
ஆசிரியர் குறிப்பு:
* மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார்
* சாத்தன் என்பது இவரது இயற்பெயர்
* இவர் திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த சீத்தலை என்னும் ஊரில் பிறந்து மதுரையில் வாழ்ந்தவர்.
* கூலவாணிகம் செய்தவர்(கூலம் = தானியம்)
* இவரை, “தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற்புலவன்” எனப் போற்றுவர்.
நூல் குறிப்பு
* இந்நூலில் காண்டப் பிரிவு இல்லை.
* முப்பது காதைகள் மட்டும் உள்ளன.
* முதல் காதை = விழாவறைக் காதை
* இறுதி காதை = பவத்திறம் அறுக எனப் பாவை நோற்ற காதை
கதை மாந்தர்:
* மணிமேகலையின் தோழி சுதமதி
* புத்தத்துறவி அறவன அடிகள்
* மணிமேகலைக்கு முதன் முதலாக அமுதசுரபியில் பிச்சை இட்டவள் ஆதிரை
* மனிமேகலை பிறந்த ஊர் பூம்புகார்
* மணிமேகலை மறைந்த ஊர் காஞ்சிபுரம்
* கோவலனின் குலதெய்வம் மணிமேகலை
கதை:
சிலப்பதிகாரத்திற்கு அடுத்ததாக இலக்கிய அழகில் பெருமைவாய்ந்த மணிமேகலை, ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்றாகும். இக்காப்பியத்தின் தலைவி, மணிமேகலை, சிலப்பதிகாரத்தின் கோவலன் மற்றும் மாதவி என்பவர்களின் மகளாவாள். கோவலனின் துயர மரணத்திற்குப் பிறகு மாதவி தன் மகளை ஒரு புத்தத் துறவியாக வளர்த்தாள். ஒரு சமயத்தில் மணிமேகலையும் அவளுடைய தோழியும் வனத்திற்குப் பூப்பறிக்கச் சென்றிருந்தபோது, உதயகுமரன் என்ற சோழ மன்னன் மணிமேகலையின் மீது காதல் மயக்கம் கொண்டான்.
கடலின் கடவுளான மணிமேகலா, மணிமேகலையின் உலக இன்பங்கள் துறந்த வாழ்க்கையைப் பாதுகாக்க, அவளை தான் அறியாமலே மணிபல்லவம் என்ற தீவில் கொண்டு விட்டாள். அத்தீவில் மணிமேகலை ஒரு புத்த பீடிகை மூலம் தனது முன்பிறப்பைப் பற்றி அறிந்தாள். அதன் பிறகு, கடலின் கடவுள் மணிமேகலா, மணிமேகலையிடம் அவள் ஏன் மணிபல்லவத்திற்கு அழைத்து வரப்பட்டாள் என்பதைக் கூறி, மூன்று அதிசய மந்திரங்களையும் கற்றுக்கொடுத்தாள்.
அத்தீவில் மணிமேகலை 'அமுத சுரபி' என்ற உணவுக் கிண்ணத்தைக் கண்டெடுத்து, அதிலிருந்து அளவற்ற உணவைப் புகாரிலுள்ள ஏழைஎளியோருக்கு வழங்கினாள். இதையெல்லாம் கண்ட உதயகுமரன், மணிமேகலை தன்னை மணக்க வேண்டும் என்று அவளை வற்புறுத்தினான். ஆனால் மணிமேகலை தான் கற்ற வித்தையைப் பயன்படுத்திக் காயசண்டிகையாக உருமாற்றிக் கொண்டாள்.
உண்மையான காயசண்டிகையின் கணவன் காஞ்சனன் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் உதயகுமரனைக் கொலை செய்துவிட்டான். இதற்காகக் காயசண்டிகையின் உருவத்தில் இருக்கும் மணிமேகலை கைது செய்யப்படுகிறாள். ஆனால் தனது தாயாரின் உதவியோடு விடுவிக்கப்படுகிறாள். பிறகு அவள் வஞ்சி நகரத்திற்குச் சென்று தந்து ஞான ஆசிரியரான கண்ணகியிடம் உரையாடி அறிவுரை பெற்றாள். அத்துடன் அனைத்து மதங்களின் நிறைகுறைகளை வல்லுநர்களிடமிருந்து அறிந்தாள். அதன்பிறகு காஞ்சி நகரத்திற்குச் சென்று தனது ஆசானான அறவண அடிகளிடம் படிப்பினைப் பெற்று ஒரு முழுமையான புத்தத் துறவியாகித் தவத்தில் ஆழ்ந்தாள்
மணிமேகலையில் சமயநெறி:
பொ.ஊ.மு. ஆறாம் நூற்றாண்டில் பௌத்த, சமணச் சமயங்கள் தோன்றின. அதற்குப் பின்னர்க் பொ.ஊ. மூன்றாம் நூற்றாண்டில் தமிழகத்தில் நிலவிய சமயங்களைப் பற்றிய செய்தி சமயநெறி விளக்கத்துடன் தெளிவாகத் தெரியவருகின்றன.
'சமயம்' என்னும் சொல் சங்கப் பாடல்களில் இல்லை. தெய்வம் என்னும் சொல் உள்ளது. சமயம் என்னும் சொல் சிலப்பதிகாரத்திலும் இல்லை. பண்டைய நூல்களான மணிமேகலை, பழமொழி நானூறு ஆகிய நூல்களில் மட்டும் இடம்பெறுகிறது.புத்த மதம் பொ.ஊ.மு. 527-லும், சமண மதம் பொ.ஊ.மு. 527-லும் தோன்றின. இவை இரண்டும் ஏறத்தாழ சமகாலம் என்றாலும் புத்தர் துறவு 17 ஆண்டுகள் முந்தியது எனத் தெரிகிறது.
சிலப்பதிகார காலத்தை வானியல் நெறியில் கணித்த நெறி துல்லியமாயினும், அவர் கொண்ட பாடத்தில் பிழை நேர வாய்ப்பு உண்டு. மேலும் அக்காலப் பல்லவர்கள் பற்றிய கருத்து இரட்டைக் காப்பியங்களில் இல்லை. எனவே ஒப்புமை வரலாற்றோடு பொருத்திக் கணிக்கப்பட்ட கயவாகு மன்னனின் பொ.ஊ. 117 கண்ணகிக்குக் கல் நட்ட காலம் என்றும், அடுத்த வாழ்நாள் காலம் மணிமேகலை காலம் என்றும், இளங்கோவின் சிலப்பதிகாரமும், சாத்தனாரின் மணிமேகலையும் பொ.ஊ. 150-250 கால இடைவெளியில் தோன்றியவை என்றும் தெளிவாக உணரமுடிகிறது.
மணிமேகலை சேரநாட்டு வஞ்சிமாநகரில் ஒன்பது சமயக் கணக்கர்களைக் கண்டு அவர்தம் திறம் (கோட்பாடு) பற்றிக் கேட்டறிந்தாள். அவள் பின்பற்றியது பௌத்த சமயம். ஆக பொ.ஊ. மூன்றாம் நூற்றாண்டில் நிலவிய சமயங்கள் பத்து எனத் தெரியவருகிறது. அவற்றைப் பின்பற்றிய சமயத் தலைமக்களை (சமயக் கணக்கர்களை) மணிமேகலை நூலிலுள்ள சொற்களைக் கொண்டு இங்கு காண்கிறோம்.
10 சமயக் கணக்கர்:
- அளவைவாதி
- சைவவாதி
- பிரமவாதி
- வைணவாதி
- வேதவாதி
- ஆசீவகவாதி
- நிகண்டவாதி
- சாங்கியவாதி
- வைசேடிகவாதி
- பூதவாதி
- இரட்டை காப்பியத்துள் கிளைக்கதைகள் மிகுந்த நூல் மணிமேகலை
- இரட்டை காப்பியத்துள் பிறமொழி கலப்பு மிகுந்த நூல்
- பிறமொழிச் சொற்களை மிகுதியும் பயன்படுத்திய நூல் மணிமேகலை
- சிலப்பதிகாரத்தின் இறுதியில் “மணிமேகலை மேல் உரைபொருள் முற்றிய சிலப்பதிகாரம் முற்றும்” எனக் கூறப்படுவதால் சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாகவே இந்நூல் அமைந்துள்ளது.
- மணிமேகலையை சாத்தனார், இளங்கோவடிகள் முன் அரங்கேற்றினார்.
- கதை தலைவியின் பெயரால் அமைந்த முதல் காப்பியம் இதுவே.
- தொல்காப்பியர் கூறிய எட்டு அணிகளுடன் மடக்கணி, சிலேடையணி இரண்டையும் பயன்படுத்திய முதல் காப்பியம் மணிமேகலை.
- திருவள்ளுவரை “பொய்யில் புலவன்” எனவும் திருக்குறளைப் “பொருளுறை” என்றும் முதலில் கூறிய காப்பியம்
- மணிமேகலை காப்பியத்தின் காலம் தொடர்பாக முரண்பட்ட கருத்துகள் இருந்து வருகின்றன. இது நியாயப் பிரவேசம் என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப் படுகிறது.
- மணிமேகலை நியாயப் பிரவேசத்தைப் பின்பற்றித் தோன்றியது என்று கருதப்படுகிறது. இதனைப் பின்பற்றி மணிமேகலையின் காலம் பொ.ஊ. 450–550 என்று சோ.ந. கந்தசாமி கருதுகின்றார்.
- பாவ்லா ரிச்மேன் மணிமேகலையின் காலம் பொ.ஊ. ஆறாம் நூற்றாண்டு என்று குறிப்பிடுகிறார்.இவ் ஆய்வுகளில் இருந்து மாறுபட்ட எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் மணிமேகலை திண்ணாகருக்கும் நியாயப் பிரவேசத்திற்கும் முற்பட்டது என்று விளக்குகின்றார். அதன்வழி மணிமேகலை பொ.ஊ. ஐந்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என்று குறிப்பிடுகிறார்.
மேற்கோள்:
- வினையின் வந்தது வினைக்கு விளைவாது
- புனைவன நீக்கின் புலால்புறத்து இடுவது
- மூப்பு விளி உடையது தீப்பிணி இருக்கை
- கோள்நிலை திரிந்திடின் கோள்நிலை திரியும்
- கோள்நிலை திரிந்திடின் மாரிவளம் குன்றும்
- பசிப்பிணி என்னும் பாவி
- மண்தினி ஞாலத்து வாழ்க்கைக் கெல்லாம்
- உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரரே
- இளமையும் நில்லா யாக்கையும் நில்லா
- அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்
- மறவாது இதுகேள்; மன்னுயிர்க்கெலாம்
- உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
- கண்டது இல்லென காவலன் உரைக்கும்
- அறமெனப் படுவது யாதெனக்கேட்பின்
- மறவாது இதுகேள் மன்னுயிர்க்கு எல்லாம்
- உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
- கண்ட தில்லை.
- சிலப்பதிகாரம்- CILAPPATIKARAM--TNPSC TAMIL ILLAKKIYAM NOTES PDF
- மணிமேகலை- MANIMEGALAI-TNPSC TAMIL ILLAKKIYAM NOTES PDF
- சீவக சிந்தாமணி -SEEVAKA CHINTAMANI--TNPSC TAMIL ILLAKKIYAM NOTES PDF
- வளையாபதி- VALAYAPATHI--TNPSC TAMIL ILLAKKIYAM NOTES PDF
- குண்டலகேசி - KUNDALAKESI--TNPSC TAMIL ILLAKKIYAM NOTES PDF
No comments:
Post a Comment