கிராம சபைக் கூட்டம் GRAMA SABAI KOOTTAM
GRAMA SABAI KOOTTAM :கிராம சபை கூட்டம், இந்தியக் குடியரசு நாள் (26, சனவரி), தொழிலாளர் நாள் (1, மே), இந்திய விடுதலை நாள், (15, ஆகஸ்டு) காந்தி ஜெயந்தி (2, அக்டோபர்), உலக நீர் நாள் (மார்ச் 22) மற்றும் உள்ளாட்சி நாள் (நவம்பர் 1) ஆகிய ஆறு சிறப்பு நாட்களின் போது, தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கூட்டப்படுகிறது.
கிராம சபை கூட்டம் நோக்கம்: இந்தக் கிராம சபைக் கூட்டத்தில், ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும், பொறுப்புணர்வை ஊக்குவித்தல், வளர்ச்சித் திட்டங்களை திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்தப்படுதல் மற்றும் பயனாளிகளின் விருப்பத்தின்படி பொதுமக்களின் பங்களிப்பை மேம்படுத்துதல் மற்றும் சமூக தணிக்கைக்கு வழி வகுத்தலே கிராம சபைக் கூட்டதின் நோக்கமாகும். கிராம மக்களின் கையிலிருக்கும் அதிகாரம், கிராம சபைக் கூட்ட நடவடிக்கைகள் ஆகும்.
REMARK: கிராம சபைக் கூட்டத்தில், தங்கள் கிராமங்களில் அரசு மதுக்கடைகள் நடத்துவதை தடை செய்து தீர்மானம் இயற்றினால், அக்கிராமங்களில் அரசு மதுக்கடைக்களை திறக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிராம சபைக் கூட்டத்தில் எவ்வளவு பேர் கலந்துகொள்ள வேண்டும்?
GRAMA SABAI KOOTTAM : கிராமச் சபைக் கூட்டத்தின் கோரம் (கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய குறைந்த பட்ச வாக்காளர்கள்), ஊராட்சி மன்றத்தின் மொத்த வாக்காளர்களில் 10% வாக்காளர்களாக இருக்க வேண்டும். அல்லது ஊராட்சி மன்றத்தின் மக்கள் தொகை ஏற்றவாறு கோரம் இருந்தால் கிராம சபைக் கூட்டம் நடத்தலாம்.
மக்கள் தொகை 500 வரை கொண்ட ஊராட்சியின் கிராமச் சபை கூட்டத்தின் கோரம் 50 ஆகும்.
மக்கள் தொகை 501 – 3,001 வரை கொண்ட ஊராட்சியின் கிராமச் சபை கூட்டத்தின் கோரம் 100 ஆகும்.
மக்கள் தொகை 3001 – 10,000 வரை கொண்ட ஊராட்சியின் கிராமச் சபை கூட்டத்தின் கோரம் 200 ஆகும்.
மக்கள் தொகை 10,000க்கு மேல் கொண்ட ஊராட்சியின் கிராமச் சபை கூட்டத்தின் கோரம் 300 ஆகும்.
கிராம சபைக் கூட்டத்தில் குறைந்த பட்ச உறுப்பினர்கள் கலந்து கொள்ளாத போது, நடத்தப்படும் கிராம சபைக் கூட்டத்தின் தீர்மானங்கள் சட்டப்படி செல்லுபடியாகாது.
கிராம சபைக்கூட்டத்தின் பணிகள் என்ன?
ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையையும், பொறுப்புணர்வையும் ஊக்குவிப்பதே கிராம சபைக் கூட்டத்தின் நோக்கமாகும்.
ஊராட்சிக்கு தேவையான வளர்ச்சித் திட்டங்களை திட்டமிடுதல், செயல்படுத்துதல் மற்றும் ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களை சமூக தணிக்கைக்கு உட்படுத்த வழி வகுத்தலே கிராம சபைக் கூட்டத்தின் நோக்கமாகும்.
சட்டசபை மற்றும் நாடாளுமன்றத்துக்கு இணையான அதிகாரம், கிராம சபைக் கூட்டங்களுக்கு உள்ளது. கிராம சபைக் கூட்டங்கள் தங்கள் ஊராட்சிகள் தொடர்பாக நிறைவேற்றும் தீர்மானங்களை மத்திய, மாநில அரசுகளால் கூட மீற இயலாது என பல முறை நீதிமன்றங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. உதாரணமாக, கிராம சபைக் கூட்டத்தில், தங்கள் கிராமங்களில் அரசு மதுக்கடை நடத்தக்கூடாது என தீர்மானம் இயற்றினால், அக்கிராமங்களில் அரசு மதுக்கடைக்களை திறக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிராம சபைக்கூட்டத்தின் சிறப்பம்சங்கள்