TODAY CURRENT AFFAIRS IN TAMIL 20.08.2023
- நாமக்கல் அனார்தசைட் மண் பரிசோதித்தற்காக – சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திறக்கு காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது சந்திராயன் 3 விண்கலத்தின் லேண்டர், ரோவர் உபகரணங்கள் நாமக்கல் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட அனார்த்தசைட் மண் மாதிரியில் பரிசோதித்த பின்பு தான் விண்ணுக்க்கு அனுப்பப்பட்டது. அனார்த்தசைட் மண்ணானது பூமி உருவாகும்போது உருவான பழைய மண் மாதிரி கொண்டது.
- சென்னையில் நடைபெற்ற முப்பெரும் விழாவான சென்னை மகாஜன சபை 140-ம் ஆண்டு விழா, காமராஜர் விழா, பாரதியார் விழா நடைபெற்றுள்ளது இவ்விழாவில் சென்னை மகாஜன சபையின் வரலாற்று சுருக்கம், மற்றும் அப்துல் கலாம் உரையாடல்களின் தொகுப்பான உன் அரும் பெரும் லட்சியம் நாளைய வரலாற்றை உருவாக்கும் போன்ற நூல்கள் வெளியிடப்பட்டள்ளன.
- ஆகஸ்ட் 19, 20 தேதிகளில் கோவையில் ஸ்டார் அப் திருவிழாவானது நடைபெறுகிறது 16.01.2016-ல் தேசிய ஸ்டாப் அப் திட்டம் தொடங்கப்பட்டது ஆண்டுதோறும் ஜனவரி 16-ல் தேசிய ஸ்டாப் அப் தினம் கொண்டாடப்படுகிறது மகாராஷ்டிரா மாநிலமானது ஸ்டாப் அப் நிறுவனம் அதிகம் உள்ள மாநிலமாக திகழ்கிறது. யூனிகான் ஸ்டாப் அப் நிறுவன எண்ணிக்கையில் இந்தியா 3வது இடம் பிடித்துள்ளது
- உத்திரபிரதேசத்தின் வாரணாசியில் இளைஞர் 20 உச்சி மாநாடு நடைபெற்றுள்ளது.
- உலகக் கோப்பை வில்வித்தை சாம்பியன் போட்டி: ஆடவர் காம்பவுண்ட் அணி பிரிவில் இந்திய அணியின் அபிஷேக் வர்மா, ஓஜாஸ் டியோடேல், பிரமேஷ் ஜவ்கர் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர் இந்திய மகளிர் காம்பவுண்ட் அணி பிரிவில் ஜோதி சுரேகா, அதிதிசுவாமி, பர்னீத் கெளர் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர் தனிநபர் காம்பவுண்ட் பிரிவில் ஜோதி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார் ஆடவர் ரெக்கர்வ் பிரிவில் தீரஜ் அதானு தாஸ், துஷார் பிரபாகர் ஆகியோரும் மகளிர் பிரிவில் பஜன் கெளர், அங்கிதா பகத், சிம்ரஞ்சித் கெளர் ஆகியோரும் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர்
- சென்னையில் நடைபெற்ற சர்வதேச சர்ஃபிங் ஓபன் போட்டியின் ஆடவர்பிரிவிலும், மகளிர் பிரிவிலும் ஜப்பான் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
- அஜர்பைஜானில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப் போட்டியின் 10மீ ஏர் ரைபிள் அணிகள் பிரிவில் மெஹுலி கோஷ், திலோத்தமா சென், ரமிதா ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர். 10மீ ஏர் ரைபிள் தனிநபர் பிரிவில் மெஹுலி கோஷ் வெண்கல பதக்கம் வென்று 2024-ல் நடைபெற உள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுளார்