TODAY CURRENT AFFAIRS IN TAMIL 07.08.2023
- சென்னையில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு நினைவு மாரத்தான் போட்டியில் 73,206 பேர் பங்கேற்று கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது
- சென்னை, போரூரில் நடைபெற்ற சிறுதானியங்களின் சங்கமம் 2023-ல் 11 சிறுதானிங்களில் 520 சிறுதானிய உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு உலக சாதனை படைக்கப்பபட்டது.
- தமிழ்நாட்டின் முதல் கண்ணாடி தொங்கு பாலமானது திருவள்ளூர் மாவட்டத்தின் வில்லிவாக்கம் ஏரியில் 2500மீ நீளத்தில் அமைக்கப்பட உள்ளது.ஜம்மு & காஷ்மீரில் இந்தியாவின் முதல் கேபிள் தொங்கு ரயில் பாலம் அமைந்துள்ளது.
- சுத்தமான தெரு உணவு மையம் உருவாக்க செங்கல்பட்டு, சென்னை, கோயம்புத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம் முதலிய 6 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாடு மாநில உணவுப் பாதுகாப்பு குறியீட்டில் 3வது இடம் வகிக்கிறது.
- ஆகஸ்ட் 06, 07-ல் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் அனைத்துலக தமிழியல் ஆய்வு மாநாடானது சமூக கட்டுமானத்தில் சங்க மருவிய கால இலக்கியம் எனும் தலைப்பில் நடைபெறுகிறது.
- (ராஜ்மார்க் யாத்திரா) Rajmarg Yatra App: இந்திய தேசிய நெஞ்சாலை ஆணையம் (NHAI) சார்பில் நெடுஞ்சாலையில் பயணம் செய்வோர் சாலை மற்றும் அதன் வசதிகளை பற்றிய குறைகளை தெரிவிக்கும் வகையில் உருவாக்கியுள்ளது.
- 15வயதிற்கு மேற்பட்டோர் கல்வி கற்பதற்காக உல்லாஸ் செயலியானது (ULLAS App) உருவாக்கப்பட்டது.
- 1-12 வகுப்பு மாணவர்களுக்கு பாடங்களை காணொலி வடிவத்தில் அளிக்கும் விதமாக மணற்கேணி செயலி (Manarkeni App) தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
- National Handloom Day: 1905 இந்தியாவில் சுதேசி இயக்கம் உருவாக்கபட்டதன் நினைவாக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 7-ல் தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது.
No comments:
Post a Comment