Government of National Capital Territory of Delhi (Amendment) Bill 2023 / டெல்லியில் அரசு திருத்த மசோதா 2023

TNPSC  Payilagam
By -
0



டெல்லியில் அரசு திருத்த மசோதா 2023 (Government of National Capital Territory of Delhi (Amendment) Bill 2023)

டெல்லி சேவைகள் மசோதா (Delhi Services Bill) என்பது தேசிய தலைநகரான டெல்லியில் அரசு திருத்த மசோதா 2023 (Government of National Capital Territory of Delhi (Amendment) Bill 2023) எனவும் அழைக்கப்படுகிறது. இந்த சட்ட திருத்த மசோதா கடந்த 3ம் தேதி எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு இடையே 4 மணிநேர விவாதத்துக்கு பிறகு லோக்சபாவில் நிறைவேறியது. நேற்று எதிர்க்கட்சிகட்சிகளின் எதிர்ப்புக்கு நடுவே ராஜ்யசபாவிலும் 6 மணிநேர விவாதத்துக்கு பிறகு நிறைவேறியது.

டெல்லியில் அரசு திருத்த மசோதா 2023 (Government of National Capital Territory of Delhi (Amendment) Bill 2023) சட்ட திருத்த மசோதாவின்படி:

  1. சிவில் சர்வீசஸ் ஆணையத்தின் (என்சிஎஸ்ஏ அல்லது தேசிய தலைநகர் குடிமைப்பணி ஆணையம்) உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் தலைவராக டெல்லி முதல்வர் இருப்பார். 
  2. மேலும் டெல்லி தலைமை செயலாளர், டெல்லி உள்துறை செயலாளர்களும் இடம்பெறுவார். இவர்கள் அதிகாரிகளின் பணியிடமாற்றம், கண்காணிப்பு உள்ளிட்ட விஷயங்களில் முக்கிய பரிந்துரைகளை துணை நிலை ஆளுநருக்கு வழங்கலாம். இதில் இறுதி முடிவு என்பது துணை நிலை ஆளுநரை சார்ந்து தான் இருக்கும். 
  3. இதனால் மீண்டும் குடிமைப்பணி அதிகாரிகள் நியமனம் தொடர்பான அதிகாரம் என்பது இந்த சட்ட திருத்த மசோதா மூலம் துணை நிலை ஆளுநர் வசம் உள்ளது. 
  4. மேலும் டெல்லி சட்டசபை ஒத்திவைத்தல், கலைத்தல் உள்ளிட்டவை தொடர்பாக இந்த ஆணையம் பரிந்துரையில் துணை நிலை ஆளுநர் இறுதி முடிவு எடுக்க முழு உரிமை உண்டு. 
  5. இதுதவிர அதிகாரிகள் மீதான விசாரணை மற்றும் சஸ்பெண்ட் நடவடிக்கைகள் என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் வகையில் இந்த மசேதா வழிவகுக்கிறது.  
  6. இதன்மூலம் மீண்டும் குடிமைப்பணி அதிகாரிகள் விவகாரத்தில் டெல்லி அரசு தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது. மாறாக துணை நிலை ஆளுநர் மற்றும் மத்திய அரசை சார்ந்து தான் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!