Tamil Nadu Government Schemes - எண்ணும் எழுத்தும் திட்டம்

TNPSC  Payilagam
By -
0

 


எண்ணும் எழுத்தும் திட்டம்

பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் ஏற்பட்டிருந்த கற்றல் இடைவெளியை ஈடுகட்ட/ சரிசெய்ய தமிழ்நாட்டில் எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

எண்ணும் எழுத்தும் திட்டத்தின் தொலைநோக்கு 2025 க்குள் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவைப் பெறவேண்டும் என்பதாகும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களும் எட்டு வயதிற்குள் பொருள் புரிந்து படிக்கும் திறனையும் அடிப்படைக் கணிதச்செயல்பாடுகளைச் செய்யும் திறன்களையும் பெற்றிருக்க வேண்டும்.

கல்வியில் இதுவரை நடத்தப்பட்ட பல்வேறு ஆராய்ச்சிகளின் பயனாக அறிவியல் மனப்பான்மை மற்றும் சமூகத் திறன்களுடன் இணைந்த மொழிக் கற்பித்தலில் மாணவர்களின் கற்றல் நிலையை அடிப்படையாகக் கொண்டு (level based) ஒருங்கிணைத்து அளிக்கப்பட வேண்டும் என்பதை எண்ணும் எழுத்தும் திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது. இதன் படி தமிழ்நாட்டிலுள்ள ஒன்று முதல் மூன்று வகுப்புகளில் தமிழ் ஆங்கிலம் கணக்குப் பாடங்கள் சூழ்நிலையியல் பாடக்கருத்துக்களுடன் ஒருங்கிணைந்து கற்பிக்கப்படும்.

இதன் காரணமாக 2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு வயதிற்குட்பட்ட அனைத்து மாணவர்களும் பொருள் புரிந்து படிப்பர், அடிப்படைக் கணிதச் செயல்பாடுகளை மேற்கொள்வர்.

2025-க்குள் தமிழக மாணவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு பெற இலக்கினை தமிழக அரசு நிகழ்த்தியுள்ளது.இத்திட்டத்தினை நிகழ்கல்வியாண்டான 2023-2024க்குள் 4, 5 வகுப்புகளுக்கும் விரிவாக்கம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

எண்ணும் எழுத்தும் திட்டம் – 13.06.2022



Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!