உதாய் திட்டம்
- உதாய் மின் திட்டம் என்பது உசுவால் திசுகாம் அசூரன்சு யோசனா (Ujjwal DISCOM Assurance Yojana) என்பதன் சுருக்கம் ஆகும். இது மின்பகிர்மானத்தை இந்திய அளவில் சமச்சீராக அளிக்க ஒன்றிய அரசின் திட்டமாகும். மின்னாக்கத்தின் விலையைக் குறைக்கவும், மின் வழங்கலில் ஏற்படும் வட்டிச் சுமையைக் குறைக்கவும் இந்தத் திட்டம் பயன்படும் என நடுவணரசு அறிவித்தது.
- நவம்பர் 2015 முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுமார் இந்தியாவின் 18 மாநிலங்கள் இத்திட்டத்தில் இணைந்தன.உத்திரப் பிரதேசம், பிகார், ஒடிசா, மகாராட்டிரம் உள்ளிட்டவை பின்னர் இணைந்தன இந்தத் திட்டம்,அக்டோபர் 21, 2016-ம் நாள் தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.