இந்திய தொழிலாளர் அரசு காப்பீட்டுத்திட்டம்
- தொழிலாளர் அரசு காப்பீட்டுத் திட்டம் சமூக பாதுகாப்புடன் ஒருங்கிணைந்த பல்நோக்கு நலத் திட்டமாகும். இது தொழிலாளர் அரசு காப்பீட்டுச் சட்டத்தில் விவரிக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு அவ்வப்பொழுது நேரிடும் சுகவீனம், பெண் தொழிலாளர்களுக்கான மகப்பேறு, வேலை செய்யும் போது விபத்தினால் ஏற்படும் தற்காலிகமான அல்லது நிரந்தரமான ஊனம் மற்றும் மரணம், சம்பவிக்கும் காலங்களில் பண உதவி வழங்கியும் தொழிலாளர்கள் தாம் செய்யும் வேலையால் ஏற்படும் சுகவீனம், தற்காலிக இயலாமை போன்ற காலங்களில் தொழிலாளர்களுக்கும் அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கும் உரிய முழு மருத்துவச் சேவையுடன் கூடிய பராமரிப்பை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டு, சட்டச்செயல் வடிவம் கொண்டு அமல் செய்யப்பட்டுள்ளது.
- உற்பத்தி நோக்கிற்காக, (10) பத்து அல்லது அதற்கும் மேற்பட்ட தொழிலாளர்களை சம்பளத்துடன் வேலைக்கு அமர்த்தி மின்விசையும் பயன்படுத்தும் தொழிலகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது. (தற்பொழுது மாதம் ரூ.10,000/- வரை ஊதியம் பெறும் தொழிலாளர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர்).
- உற்பத்தி நோக்கிற்காக, இருபது அல்லது அதற்கும் மேற்பட்ட தொழிலாளர்களை சம்பளத்துடன் வேலைக்கு அமர்த்தி விசை ஆற்றல் ஏதும் பயன்படுத்தாமல், தொழிலகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் காப்பீடு வழங்கப்படுகிறது. (தற்பொழுது மாதம் ரூ.10,000/- வரை ஊதியம் பெறும் தொழிலாளர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர்).
- இருபது அல்லது அதற்கும் மேற்பட்ட தொழிலாளர்களை சம்பளத்துடன் வேலைக்கு அமர்த்தியுள்ள நிறுவனங்கள், மற்றும் மாநில அரசு வரையறை செய்யும் ஏனைய இதர நிறுவனங்கள் மற்றும் தொழிலகங்களும் இ.எஸ்.ஐ. சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு அவைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் (மாதம் ரூ.10,000/ - வரை ஊதியம் பெறும் தொழிலாளர்கள்) இக்காப்பீட்டுத் திட்ட பலன்கள் விரிவாக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. தற்பொழுது மாதம் ஒன்றிற்கு ரூ.10,000/- வரை ஊதியம் பெறும்
- தொழிலாளர்கள் மட்டுமே, இ.எஸ்.ஐ. திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு உரிய பலன்களை பெற்றுக்கொள்ளும் வசதி மத்திய அரசினரால் அங்கீகரிக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றது. மாதம் ஒன்றிற்கு ரூ.10,000/ -க்கும் மேல் ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ. சட்ட விதிகள் மற்றும் அமலாக்கங்கள் தற்பொழுது நடைமுறைப்படுத்த வழிவகைகள் இல்லை. ஆனால் இ.எஸ்.ஐ.சட்ட ஊதிய உச்சவரம்பு மத்திய அரசினரால் மாற்றியமைக்கத் தக்கதாகும்.
- மேலும் இ.எஸ்.ஐ. சட்ட அமலாக்கம் செய்யப்பட்டுள்ள குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் இதர நிறுவனங்களுக்க மட்டுமே இ.எஸ்.ஐ. சட்ட விதிகள் மற்றும் அமலாக்கங்கள் பொருந்தும்.
- உடல் நலக்குறைவு, செய்யும் வேலையால் ஏற்படும் உடல் ஊனம் போன்றஎதிர்பாராத உபத்திரவங்களிலும், மகப்பேறு காலத்திலும் முழு மருத்துவ பராமரிப்பை வழங்கவும், உதவித்தொகை வழங்குவதின் மூலம் தொழிலாளர் அரசு காப்பீட்டுத் திட்டம் உங்கள் பொருளாதார இழப்புகளை ஈடு செய்து உங்களின் ஆபத்து காலங்களில் உதவும் நண்பனாக விளங்குகிறது.
- தொழிலாளர் காப்பீட்டுத் திட்டம், பணிகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. முழு மருத்துவ பராமரிப்பு வழங்குவதின் மூலம் உடல் நலத்தை நீங்கள் மீண்டும் பெறச் செய்து வேலை செய்யும் திறனை உங்களில் மீண்டும் கொண்டு வர முயற்சி செய்கிறது.
- தொழிலாளர் அரசு காப்பீட்டுத் திட்டமானது, தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் என்ற ஒரு சட்ட அதிகாரம் பெற்ற அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. இ.எஸ்.ஐ. திட்டத்தின் தேசிய அளவில் நிலைக்குழு (கார்ப்பரேஷனின் பிரதிநிதித்துவ அமைப்பு) மற்றும் மெடிக்கல் பெனிபிட் கவுன்சில் ஆகிய இந்த இரு அமைப்புகள் நிர்வாகம் மற்றும் மருத்துவ பயன்கள் குறித்து கார்ப்பரேஷனுக்கு தேவையான அனைத்து ஆலோசனைகளை வழங்கி வருகின்றது. மண்டல வாரியம் மற்றும் உள்ளூர் கமிட்டிகள் ஏற்படுத்தப்பட்டு எல்லா நிலைகளிலும் ஒன்று சேர்ந்த நலம் காக்கும் குழுமங்கள் நியமிக்கப்பட்டு இத்திட்டமானது சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.