கிசான் விகாஸ் பத்ரா (Kisan Vikas Patra) என்பது ஒரு சேமிப்பு சான்றிதழ் திட்டமாகும். இது 1988ஆம் ஆண்டில் இந்தியா அஞ்சல் துறையில் முதன்முதலில் தொடங்கப்பட்டது. ஆரம்பக் காலங்களில் இது வெற்றிகரமாக இருந்தது. இந்திய அரசு சியாமளா கோபிநாத்தின் மேற்பார்வையில் ஒரு குழுவை அமைத்தது இத்திட்டம் குறித்து பரிந்துரையினை கோரியது. இத்திட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக இந்த குழு அரசாங்கத்திற்குப் பரிந்துரை செய்தது. இதன் அடிப்படையில் இத்திட்டத்தை இந்திய அரசு 2011ல் நிறுத்தி வைத்தது. பின்னர் புதிய அரசாங்கம் 2014இல் மீண்டும் தொடங்கியது.
சமீபத்திய புதுப்பிப்பின்படி, திட்டத்தின் காலம் இப்போது 115 மாதங்கள் (9 ஆண்டுகள் மற்றும் 5 மாதங்கள்).
கீழ்கண்டவர்கள் கிசான் விகாசு பத்திரத்தினை பெறலாம்:
- வயது வந்த ஒருவர் தனது சொந்த பெயரில், அல்லது மைனர் சார்பாக
- அறக்கட்டளை
- இரண்டு பெரியவர்கள் கூட்டாக