Friday, November 8, 2024

PM Vidyalaxmi Scheme - பிரதமர் வித்ய லட்சுமி திட்டம்

PM Vidyalaxmi Scheme


தரமான உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு பிணையில்லா கல்வி கடனும் மூன்று சதவீத வட்டி தள்ளுபடி அளிக்கும் 'பிரதமர் வித்ய லட்சுமி' திட்டத்திற்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளிக்கப்பட்டது.


 பிரதமர் வித்ய லட்சுமி திட்டம்:

  • தரமான அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் (Quality Higher Education Institutions - QHEIs) சேர்ந்து உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கும் திட்டமே பிரதமர் வித்ய லட்சுமி திட்டம் ஆகும். இதன்படி, வங்கிகள், நிதி நிறுவனங்கள் இந்த மாணவர்களுக்கு பிணையம் இல்லாத, உத்தரவாதம் இல்லாத கடனை அளிக்கும்.
  • ஒரு மாணவருக்கு அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். இதன்மூலம் மொத்த கல்விக் கட்டணமும் படிப்புக்கான பிற செலவுகளும் அளிக்கப்படும்.
  • என்ஐஆர்எஃப் எனப்படும் தேசிய தரவரிசைப் பட்டியலில் (NIRF  முதல் 100 இடங்களைப் பிடிக்கும் அரசு, தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த கல்விக் கடன் அளிக்கப்படும்.  ) ஒட்டுமொத்த தரவரிசையில், பிரிவு வாரியான, துறை வாரியான தரவரிசையில் 100 இடங்களைப் பிடித்த கல்வி நிறுவனங்களுக்கும் இது பொருந்தும்.
  • அதேபோல என்ஐஆர்எஃப் தரவரிசையில் 101-200 வரை பிடித்த மாநிலக் கல்வி நிறுவனங்களில் படிப்போருக்கும் இந்தத் திட்டம் பொருந்தும். அதேபோல அனைத்து மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களும் இந்த கல்விக் கடனைப் பெறலாம்.
  • ஆண்டுதோறும் தரவரிசை பட்டியல் மாற்றி அமைக்கப்படும். முதல் கட்டமாக 860 தரமான உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் 22 இலட்சம் மாணவர்கள் இத்திட்டத்தில் பலன்களைப் பெறலாம். 
  • மேலும் குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் 8 லட்சத்துக்குள் இருக்கும் மாணவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் வரையிலான கல்வி கடனுக்கு 3 சதவீத வட்டி தள்ளுபடி அளிக்கப்படும்.
  • 2024-2025 கல்வி ஆண்டு முதல் 2030-2031 கல்வி ஆண்டு வரை இத்திட்டம் அமல்படுத்தப்படும். இதற்காக ரூபாய் 3,600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏழு ஆண்டுகளில் 7 லட்சம் மாணவர்கள் வட்டி தள்ளுபடி சலுகை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: