அரசு பணிகளில் பெண்களுக்கு 35% இடஒதுக்கீடு:
- மத்திய பிரதேச அரசு வேலைவாய்ப்பில் தற்போது பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதை 35 சதவீதமாக உயர்த்த அமைச்சரவைகூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
- மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் அனைத்து ஆள்சேர்ப்புகளுக்கும் மேம்படுத்தப்பட்ட மகளிர் ஒதுக்கீடு பொருந்தும்.
- செப்டம்பர் 13, 2023 அன்று மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் பெண்களுக்கான இடஒதுக்கீடு மேம்பாடு குறித்த அறிவிப்பை மத்தியப் பிரதேச சிவில் சர்வீசஸ் (பெண்கள் நியமனத்திற்கான சிறப்பு விதிகள்) 1997-ன் கீழ் வெளியிட்டிருந்தார். அமைச்சரவையின் தற்போதைய முடிவு அந்த அறிவிப்பை உறுதிசெய்து ஒப்புதல் அளித்து நடைமுறைப்படுத்த உள்ளது.
தமிழ் அகராதியியல் நாள் விழா
- தமிழ் அகராதியியலின் தந்தை" என்று போற்றப்படும் வீரமாமுனிவரின் தமிழ்த்தொண்டைப் போற்றும் வகையில், அவரது பிறந்தநாளான நவம்பர் 8ஆம் நாளைத் "தமிழ் அகராதியியல் நாள் விழா"வாகக் கொண்டாடப்படுகிறது.
- நவம்பர் 8, 1680 அன்று இத்தாலியில் பிறந்த வீரமாமுனிவர், 1710-ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்தார். தமிழ் மீது ஆர்வம் கொண்டு தமிழ் இலக்கியச் சுவடிகளைப் பல இடங்களுக்குச் சென்று சேகரித்தார். மூன்று மொழி அகராதிகளை உருவாக்கியதால் தமிழ் அகராதியின் தந்தை எனப் போற்றப்படுகிறார்.
பிரதமர் வித்ய லட்சுமி திட்டம்:
- தரமான உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு பிணையில்லா கல்வி கடனும் மூன்று சதவீத வட்டி தள்ளுபடி அளிக்கும் 'பிரதமர் வித்ய லட்சுமி' திட்டத்திற்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளிக்கப்பட்டது
- KEY NOTES : பிரதமர் வித்ய லட்சுமி திட்டம்
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!
No comments:
Post a Comment