நிதி ஆயோக் வெளியிட்டுள்ள தேசிய பல பரிமாண வறுமைக் குறியீட்டு (National Multidimensional Poverty Index) அறிக்கை மதிப்பிட்டுள்ளது:
- வறுமை ஒழிப்பு என்பது சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து கொள்கை வகுப்பாளர்களிடையே பெரும் சவாலாகத் தொடர்கிறது. ஏராளமான வறுமை ஒழிப்புத் திட்டங்களை அரசு அறிமுகப்படுத்திய பிறகும், பெரும்பான்மையான மக்களிடம் வறுமை தொடர்ந்தது. ஆனால், 2015-16 மற்றும் 2019-21க்கு இடையில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியாவில் வறுமையின் பிடியிலிருந்து தப்பியவர்களின் எண்ணிக்கை 13.55 கோடி என 2023இல் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள தேசிய பல பரிமாண வறுமைக் குறியீட்டு (National Multidimensional Poverty Index) அறிக்கை மதிப்பிட்டுள்ளது.
- அதாவது, 2015-16இல் 24.85%ஆக இருந்த வறுமையில் வாடும் மக்களின் ஒட்டுமொத்த அளவு, 2019-21இல் 14.96%ஆகக் குறைந்துள்ளது; கிராமப்புறங்களில் 32.59%இலிருந்து 19.28%ஆகக் குறைந்துள்ளது. எந்தெந்த மாநிலங்கள் அதிக மக்களை வறுமையிலிருந்து வெளியேற்றியுள்ளன, மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் வறுமைக் குறைவுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம்.
- KEY POINTS - National Multidimensional Poverty Index 2023
அகழாய்வு:
- சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்ற அகழாய்வு மூலம் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய நகர நாகரிகம் இருப்பது கண்டறியப்பட்டது. ஏற்கெனவே 9 கட்ட அகழாய்வு பணிகள் மூலம் பல ஆயிரம் தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
- இந்நிலையில் 'தா' என்ற தமிழி எழுத்துடன் கூடிய பானை ஓடு கண்டெடுக்கப்பட்டது. மேலும் அந்த எழுத்துக்கு அடுத்துள்ள எழுத்து இருக்க கூடிய பானை ஓடும் கிடைக்க வாய்ப்புள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். முன்னதாக நடைபெற்ற அகழாய்வில் பல வண்ணங்களில் கண்ணாடி மணிகள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.
ஓம் பிர்லா:
- மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
- குரல் வாக்கெடுப்பு மூலம் நடந்த தேர்தலில் மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வானார்.
- இதன்மூலம் கடந்த 25 ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டாவது முறையாக மக்களவை சபாநாயகராக தேர்வானவர் என்ற பெருமையைப் பெற்றார் ஓம் பிர்லா
செயற்கை நுண்ணறிவு எந்திரனியல் ஆய்வகம் (Artificial Intelligence Mechanics Lab):
- தமிழ்நாட்டில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் மூன்று இடங்களில் செயற்கை நுண்ணறிவு எந்திரனியல் ஆய்வகம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் (ஜூன் 24) அறிவிக்கப்பட்டுள்ளது.
- அதன்படி கோயம்புத்தூர், சேலம், பர்கூர் ஆகிய இடங்களில் தலா ரூ.1 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படவுள்ளது.
கி.ராஜநாராயணன்:
- தூத்துக்குடி மாவட்டத்தில் கரிசல் எழுத்தாளரான கி.ராஜநாராயணன் பிறந்த நாள் விழாவானது அரசு விழாவாக கொண்டாடப்படுமென சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- எழுத்துலகில் கி.ரா என அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் 1991-ல் கோபல்லபுரத்து மக்கள் என்ற புதினத்திற்கா சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளார்.
- கரிசல் வட்டாரச் சொல்லகராதி உருவாக்கிய இவர் கிடை, கோபல்லபுரத்து மக்கள், சிறுவர் நாடோடிக் கதைகள் போன்ற நூல்களை எழுதியுள்ளார்.
தேசிய தேர்வுகள் முகமை சார்பில் (NTA) நடத்தப்படும் போட்டி தேர்வுகளை சீரமைக்க உருவாக்கப்பட்டுள்ள 7 பேர் கொண்ட உயர்மட்டக்குழு:
- நீட், நெட் உள்பட தேசிய தேர்வு முகமை நடத்தும் போட்டித் தேர்வுகளை சீர்திருத்தவும், தேசிய தேர்வு முகமையின் கட்டமைப்பை வலுப்படுத்தவும் 7 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
- ஜேஇஇ (மெயின்), நீட் (யுஜி), சிமேட், ஜிபாட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. சமீபத்தில் நடைபெற்ற நீட் (யுஜி) நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் காரணமாக பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
- இந்நிலையில், தேசிய தேர்வு முகமையின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளில் சீர்திருத்தம் மேற்கொள்ளவும், தேசிய தேர்வு முகமை நடத்தும் தேர்வு முறைகளில் சீர்திருத்தம் மேற்கொள்ளவும் இஸ்ரோவின் முன்னாள் தலைவர் டாக்டர். கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் உயர்மட்ட நிபுணர் குழுவை கல்வி அமைச்சகம் அமைத்துள்ளது. ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் பிஜே ராவ், டெல்லி எய்ம்ஸ் முன்னாள் இயக்குநர் ரந்தீப் குலேரியா ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆற்றல் மாற்றக் குறியீடு 2024 (ETI-2024) :
- உலகப் பொருளாதார மன்றம் (WEF) சமீபத்தில் ஃபாஸ்டரிங் எஃபெக்டிவ் எனர்ஜி ட்ரான்ஸிஷன் 2024 என்ற அறிக்கையை வெளியிட்டது, மேலும் ஆற்றல் பாதுகாப்பு, சமபங்கு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு 120 நாடுகளின் ஆற்றல் அமைப்புகளின் செயல்திறன் குறித்து தரப்படுத்திய ஆற்றல் மாற்றம் குறியீட்டின் (ETI) சமீபத்திய பதிப்பை வெளியிட்டது.
- ஒரு வருடத்திற்கு முன்பு 67வது இடத்தில் இருந்த இந்தியா, குறியீட்டில் 63வது இடத்தில் உள்ளது.
- முதலிடத்தில் ஸ்வீடன், அதைத் தொடர்ந்து டென்மார்க், பின்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் உள்ளன. சீனா 17வது இடத்தில் உள்ளது.
நம்பகமான விமான பயணி திட்டம்:
- ‘நம்பகமான விமான பயணி' திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் தொடங்கிவைத்தார்.
- இந்தியாவின் சர்வதேச விமான நிலையங்களில் பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுவதால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிஉள்ளது.
- இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகம், விமானபோக்குவரத்துத் துறை இணைந்து ‘நம்பகமான விமான பயணி' (எப்டிஐ-டிடிபி) என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன.
கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவம்-ஒரு நபர் ஆணையம்:
- கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்குள் விசாரணை ஆணையம் முழுமையாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- மெத்தனால் அறிவியல் வாய்ப்பாடு – CH3OH
- விதி 47 – பூரண மது விலக்கு
- தற்போது குஜாராத், பீகார் மாநிலங்களில் பூரண மது விலக்கு கடைபிடிக்கப்படுகிறது.
காற்று மாசுபாடு அறிக்கை- 2021:
- காற்று மாசுபாட்டால் உலகளவில் 81 லட்சம் பேர் உயிரிழந்துள்ளன. இதில்
- முதலிடம் – சீனா (23 லட்சம்)
- இரண்டாம் இடம் – இந்தியா (21 லட்சம்)
- இந்திய அளவில் காற்று மாசுபாட்டில் புதுதில்லி முதலிடம் பிடித்துள்ளது.
நெல்சன் மண்டேலா வாழ்நாள் சாதனையாளர் விருது:2024
- பிரபல குழந்தைகள் திரைப்படத் தயாரிப்பாளரான வினோத் கணத்ரா, குழந்தைகள் சினிமாவில் சிறந்த பங்களிப்பிற்காக தென்னாப்பிரிக்காவின் மதிப்புமிக்க 'நெல்சன் மண்டேலா வாழ்நாள் சாதனையாளர் விருது' பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
- 7வது நெல்சன் மண்டேலா குழந்தைகள் திரைப்பட விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.
சதை உண்ணும் (Flesh Eating Bacteria) பாக்டீரியா:
- ஜப்பான் இந்த ஆண்டு ஸ்ட்ரெப்டோகாக்கல் டாக்சிக் ஷாக் சிண்ட்ரோம் (STSS) நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சதை உண்ணும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிக அளவில் எதிர்கொள்கிறது. இந்த நோய் 30% இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது
- சதை உண்ணும் (Flesh Eating Bacteria) பாக்டீரியாவின் பெயர்-ஸ்ரெப்டோகோக்கஸ்
TODAY CURRENT AFFAIRS IN TAMIL 2024
நடப்பு நிகழ்வுகள் 2024
- JANUARY 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / ஜனவரி 2024
- FEBRUARY 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / பிப்ரவரி2024
- MARCH 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / மார்ச் 2024
- APRIL 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / ஏப்ரல் 2024
- MAY 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / மே 2024
- JUNE 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL / ஜூன் 2024
CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில்-ஜனவரி 2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில்-பிப்ரவரி 2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில் -மார்ச்-2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில் -ஏப்ரல்-2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில் -மே-2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில் -ஜூன்-2024
முக்கியமான நாட்களின் பட்டியல் 2024
- ஜனவரி 2024 இன் முக்கியமான நாட்களின் பட்டியல் / LIST OF IMPORTANT DAYS IN JANUARY 2024 IN TAMIL
- பிப்ரவரி 2024 இல் முக்கியமான நாட்கள், நிகழ்வுகள் பட்டியல்/FEBRUARY 2024-LIST OF IMPORTANT DAYS IN TAMIL
- மார்ச் 2024 இல் முக்கியமான நாட்கள், நிகழ்வுகள் பட்டியல்/ MARCH 2024-LIST OF IMPORTANT DAYS IN TAMIL
- ஏப்ரல் 2024 இல் முக்கியமான நாட்கள், நிகழ்வுகள் பட்டியல்/ APRIL 2024-LIST OF IMPORTANT DAYS IN TAMIL
- மே 2024 இல் முக்கியமான நாட்கள், நிகழ்வுகள் பட்டியல்/ MAY 2024-LIST OF IMPORTANT DAYS IN TAMIL
அரசு அறிமுகப்படுத்தி முக்கிய செயலிகள் 2023:2024:
No comments:
Post a Comment