H9N2 இன்புளுயென்சா வைரஸ் பறவைகாய்ச்சல் :
- மேற்கு வங்க மாநிலத்தில் 4வயது சிறுவனுக்கு H9N2 இன்புளுயென்சா வைரஸ் பறவைகாய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
- இது மிகவும் அரிதான வைரஸ். இந்தியாவில் முதன்முறையாக இந்த வைரஸ் பாதிப்பு 2019-ம்ஆண்டு கண்டறிப்பட்டது. இந்நிலையில் தற்போது 2-வது பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
- இந்த வைரஸ் பாதிப்பு குறித்து இந்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இதுவரை எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை.
- இந்த வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2024:
- தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் ஜூன் 20-ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 20 - 29ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தற்போது அறிவித்துள்ளார்.
- மேலும் சட்டசபை நிகழ்ச்சி நிரல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, ஜூன் 20ம் தேதி தொடக்க நாளன்று விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. 21ம் தேதி முதல் 29ம் தேதி வரை துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. இடையில் 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சட்டப்பேரவை கூட்டத்துக்கு விடுமுறை.
ஜூன் 24 - ஜூலை 3 வரை நாடாளுமன்ற கூட்டத்தொடர்:
- வரும் ஜூன் 24-ம் தேதி 18-வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிப்பிரமாணம் செய்துகொள்வார்கள் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு அறிவித்துள்ளார்.
- கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. கடந்த 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி(என்டிஏ) அறுதிப் பெரும்பான்மையை பெற்றது. கடந்த 9-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் என்டிஏ அரசு பதவியேற்றது.
- கூட்டத்தொடர் ஜூலை 3ம் தேதி நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2025-க்குள் குழந்தை தொழிலாளர் இல்லாத தமிழ்நாடு:
- குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. இதுதொடர்பான நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக விழா அரங்கத்தில் நேற்று நடந்தது.
- வரும் 2025-ம் ஆண்டுக்குள் குழந்தை தொழிலாளர் இல்லாத தமிழ்நாடு உருவாகும் என அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்தார்.
வட்டாட்சியர் அனுமதி பெற்று குளம், ஏரிகளில் இலவசமாக மண் எடுக்கலாம்:
- கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள், கால்வாய்களில் இருந்து விவசாய பயன்பாட்டுக்கும், பானைத் தொழில் செய்யவும் கட்டணம் இல்லாமல் மண், வண்டல் மண், களிமண் வெட்டி எடுக்க அந்தந்த வட்டாட்சியரிடமே இணையவழியில் அனுமதி பெறும் புதிய நடைமுறை அமல்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
குவைத் தீ விபத்து:
- குவைத் நாட்டின் தெற்கு அகமதி மாகாணத்தில் மங்கஃப் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 12.06.2024 அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுமார் 49 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 40
பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடித்தக்கது.
- எகிப்து நாட்டு காவலாளி தங்கியிருந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்தது தீ விபத்துக்கு காரணம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆந்திர முதல்வராக தெலுங்கு தேசம் கட்சித் தலைவா் என்.சந்திரபாபு நாயுடு பதவியேற்றாா்:
- ஆந்திர முதல்வராக தெலுங்கு தேசம் கட்சித் தலைவா் என்.சந்திரபாபு நாயுடு நான்காவது முறையாக பதவியேற்றாா். ஜனசேனை கட்சித் தலைவா் பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷ் உள்பட 25 போ் அடங்கிய அமைச்சரவையும் பதவியேற்றது.
- பிரதமா் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பதவியேற்பு விழாவில் சந்திரபாபு நாயுடு மற்றும் அமைச்சா்களுக்கு ஆளுநா் எஸ்.அப்துல் நசீா் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.
- ஆந்திரத்தில்
மக்களவையுடன்
சோ்த்து அந்த மாநிலப் பேரவையின் 175 இடங்களுக்கும் தோ்தல் நடைபெற்றது.
- கடந்த
04.06.2024 தேதி வெளியான முடிவுகளில், பேரவைத் தோ்தலில் 135 இடங்களையும், மக்களவைத் தோ்தலில் 16 இடங்களையும் கைப்பற்றி தெலுங்கு தேசம் வெற்றி பெற்றது. தெலுங்கு தேசம், ஜனசேனை, பாஜக உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணி(என்டிஏ) மொத்தமாக 164 பேரவைத் தொகுதிகளையும், 21 மக்களவைத் தொகுதிகளையும் வென்றது.
- ஆளுங்கட்சியாக
இருந்த முன்னாள் முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆா் காங்கிரஸ், பேரவையில் 11 இடங்களில் மட்டுமே வென்று எதிா்க்கட்சி அந்தஸ்தைக்கூட இழந்தது.
ஒடிசாவின் முதல் பாஜக முதல்வர்:
- ஒடிசா மாநிலத்தின் முதல் பாஜக முதல்வராக மோகன் சரண் மாஜி (52) பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 2 துணை முதல்வர்கள் மற்றும் 13 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
- ஒடிசாவில் மக்களவைத் தேர்தலோடு, சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.
- அங்கு மொத்தம் 147 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. ஆட்சியமைக்க 74 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், பாஜக 78 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மை பெற்றது.
- இதன் மூலம் நவீன் பட்நாயக்கின் 24 ஆண்டு கால பிஜு ஜனதா தள ஆட்சி முடிவுக்கு வந்தது.
- ஆளும் பிஜு ஜனதா தளத்துக்கு 51, காங்கிரஸுக்கு 14, மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒரு தொகுதி கிடைத்தன. மூன்று தொகுதிகளில் சுயேச்சைகள் வெற்றி பெற்றனர். இந்த 3 பேரும் பாஜக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அருணாச்சல பிரதேச முதல்வராக பெமா காண்டு பதவியேற்பு:
- அருணாச்சல பிரதேசத்தில் முதல்வராக 13.06.2024 பெமா காண்டு பதவியேற்றார். தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர் முதல்வராகி உள்ளார்.
- அவருக்கு ஆளுநர் கே.டி.பர்நாயக் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 11 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
- மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் பாஜக 46 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் ஜூன் 22-ம் தேதி நடைபெறும் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது:
- 2017ம் ஆண்டு ஜூலையில் ஜிஎஸ்டி அமலுக்கு வந்த நிலையில், ஜிஎஸ்டி கவுன்சில் ஒவ்வொரு காலாண்டிலும் கூடுவது வழக்கமாக இருந்தது. எனினும், 2022 முதல் அது 6 முறை மட்டுமே கூடியுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலின் கடைசி கூட்டம் நடந்து முடிந்து எட்டரை மாதங்கள் ஆகியுள்ள நிலையில், ஜிஎஸ்டி கவுன்சிலின் 53வது கூட்டம் 2024 ஜூன் 22ம் தேதி புதுடெல்லியில் நடைபெறும் என்று நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
- ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை வகிக்கிறார். அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர்களும் அதில் உறுப்பினர்களாக உள்ளனர். 2023ம் ஆண்டின் இறுதியில், இதன் ஒருங்கிணைப்பாளராக உத்திரப் பிரதேச நிதியமைச்சர் சுரேஷ் குமார் கன்னா நியமிக்கப்பட்டார்.
நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில் -ஜூன்-2024:
A) 2018-ம்ஆண்டு
B) 2019-ம்ஆண்டு
C) 2022-ம்ஆண்டு
D) 2024-ம்ஆண்டு
ANS : B) 2019-ம்ஆண்டு
- JANUARY 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / ஜனவரி 2024
- FEBRUARY 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / பிப்ரவரி2024
- MARCH 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / மார்ச் 2024
- APRIL 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / ஏப்ரல் 2024
- MAY 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / மே 2024
- JUNE 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL / ஜூன் 2024
CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில்-ஜனவரி 2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில்-பிப்ரவரி 2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில் -மார்ச்-2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில் -ஏப்ரல்-2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில் -மே-2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில் -ஜூன்-2024
முக்கியமான நாட்களின் பட்டியல் 2024
- ஜனவரி 2024 இன் முக்கியமான நாட்களின் பட்டியல் / LIST OF IMPORTANT DAYS IN JANUARY 2024 IN TAMIL
- பிப்ரவரி 2024 இல் முக்கியமான நாட்கள், நிகழ்வுகள் பட்டியல்/FEBRUARY 2024-LIST OF IMPORTANT DAYS IN TAMIL
- மார்ச் 2024 இல் முக்கியமான நாட்கள், நிகழ்வுகள் பட்டியல்/ MARCH 2024-LIST OF IMPORTANT DAYS IN TAMIL
- ஏப்ரல் 2024 இல் முக்கியமான நாட்கள், நிகழ்வுகள் பட்டியல்/ APRIL 2024-LIST OF IMPORTANT DAYS IN TAMIL
- மே 2024 இல் முக்கியமான நாட்கள், நிகழ்வுகள் பட்டியல்/ MAY 2024-LIST OF IMPORTANT DAYS IN TAMIL
No comments:
Post a Comment