Sunday, February 11, 2024

TNPSC GENERAL SCIENCE -MODEL QUESTION-ANSWER:இயற்பியல் அளவுகள், அளவீடுகள் மற்றும் அலகுகள்-8 TH STD

 

TNPSC GENERAL SCIENCE -Model Question-Answer
இயற்பியல் அளவுகள், அளவீடுகள் மற்றும் அலகுகள்



TNPSC Model Online Test: A Comprehensive Guide

Introduction:

Welcome to our blog post on TNPSC General Science model questions and answers. This post is designed to help aspirants of the Tamil Nadu Public Service Commission (TNPSC) exams to prepare for the General Science section.

The Importance of Model Online Tests: 

Model online tests are an invaluable resource for any TNPSC aspirant. They help you understand the exam pattern, manage your time effectively, and identify areas where you need improvement. 

Where to Find Model Online Tests: 

Model online tests are a key part of your TNPSC preparation strategy. They can help you familiarize yourself with the exam pattern, improve your speed and accuracy, and boost your confidence. So, start taking these tests today and step closer to your dream government job!


இயற்பியல் அளவுகள், அளவீடுகள் மற்றும் அலகுகள் 8TH STD 



1. அனைத்து அறிவியல் ஆய்வுகளும் எதனை அடிப்படையாகக் கொண்டவை- அளவீட்டியல்.

2. மதிப்புத்தெரிந்த திட்ட அளவினைக் கொண்டு தெரியாத அளவின் மதிப்பைக் கண்டறிவது – அளவீட்டியல்.

3. மெட்ரிக் அலகுமுறைகள் வகையைச் சேர்ந்தது - CGS , MKS, SI.

4. ஆங்கில இயற்பியலாளர்கள் பயன்படுத்திய அலகுமுறை – FPS.

5. 1960 எடைகள் மற்றும் அளவீடுகள் குறித்த 11ஆவது பொது மாநாடு எங்கு நடைபெற்றது - பிரான்ஸ் – பாரிஸ்.

6. SI அலகுமுறை எந்த சொல்லிலிருந்து பெறப்பட்டது – பிரெஞ்சு.

7. துகள்களின் சராசரி இயக்க ஆற்றல் எவ்வாறு அழைக்கப்படுகிறது- வெப்பநிலை.

8. வெப்பநிலையின் SI அலகு – கெல்வின்.

9. வெப்பநிலையை அளவிடப்பயன்படும் அலகுகள் :

1. செல்சியஸ்

2. ஃபாரன்ஹீட்

3. கெல்வின்

10. அமெரிக்காவின் தேசிய வானியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் செவ்வாய்க்கோள் பருவநிலைக்கான சுற்றுக்கலம் ஒன்றினை அனுப்பிய அண்டு - டிசம்பர் 1998.

11. ஒரு பொருளை நேரடியாகத் தொடாமல் அதன் வெப்பநிலையை அளந்தறியப் பயன்படுவது - அகச்சிவப்புக் கதிர் வெப்பநிலைமானி.

12. வெப்பநிலைமானி பயன்பாடு:

1. மருத்துவர்கள் – ஃபாரன்ஹீட்.

2. அறிவியலாளர்கள் – கெல்வின்.

13. வானிலை அறிக்கையில் வெப்பநிலையானது எந்த அலகினால் கொடுக்கப்படுகிறது – செல்சியஸ்.

14. ஒரு கடத்தியின் வழியே ஒரு கூலும் மின்னூட்டம் சென்றால் மின்னோட்டத்தின் மதிப்பு – ஆம்பியர்.

15. மின்னோட்டத்தை அளக்கப் பயன்படும் கருவி – அம்மீட்டர்.

16. ஒரு பொருளில் உள்ள அணுக்கள் அல்லது மூலக்கூறுகளின் எண்ணிக்கையை எதன்மூலம் கண்டறியலாம் – மோல்.

17. ஒளிச்செறிவினை நேரிடையாக 'கேண்டிலா' அலகில் அளவிடும் கருவி:

1. ஒளிமானி

2. ஒளிச்செறிவுமானி


18. உணரப்படும் ஒளியின் திறன் – ஒளிபாயம் / ஒளித்திறன்.

19. ஒளிபாயம் (அ) ஒளித்திறனின் SI அலகு - லுமென்

20. ஒரு ஸ்ட்ரேடியன் திண்மக்கோணத்தில் ஒரு கேண்டிலா ஒளிச்செறிவுடைய ஒளியை ஒரு ஒளிமூலம் வெளியிடுமானால் அவ்வொளி மூலத்தின் திறன் 1 லுமென்.

21. இரு நேர் கோடுகள் (அ) இரு தளங்களின் குறுக்கு வெட்டினால் உருவாகும் கோணம் – தளக்கோணம்.

22. தளக் கோணத்தின் SI அலகு – ரேடியன்.

23. ஆரத்திற்கு சமமான நீளம் கொண்ட வட்டவில் ஒன்று வட்டத்தின் மையத்தில் ஏற்படுத்தும் கோணம் – ரேடியன்.

24. மூன்று (அ) அதற்கு மேற்பட்ட தளங்கள் ஒரு பொதுவான புள்ளியில் வெட்டிக் கொள்ளும் போது உருவாகும் கோணம்- திண்மக்கோணம்.

25. திண்மக் கோளத்தின் SI அலகு - ரேடியன்

26. ஒரு கோளத்தின் ஆரத்தின் இருமடிக்குச் சமமான புறப்பரப்பு கொண்ட சிறிய வட்டப்பகுதி ஒன்று மையத்தில் ஏற்படுத்தும் கோணம் – ஸ்ட்ரேடியன்.

27. எந்த ஆண்டு வரையில் தளக் கோணம் மற்றும் திண்மக்கோணம் ஆகியவை துணை அளவுகள் என தனியாக வகைப்படுத்தப் பட்டிருந்தன – 1995.

28. தளக்கோணம் மற்றும் திண்மக்கோணம் ஆகிய இரண்டும் வழி அளவுகள் பட்டியலில் சேர்க்கப்பட்ட ஆண்டு – 1995.

29. தளக்கோணம் எத்தனை பரிமாணங்களைக் கொண்டது- இருபரிமாணம்.

30. திண்மக் கோணம் எத்தனை பரிமாணங்களைக் கொண்டது – முப்பரிமாணம்.

31. காட்சியின் அடிப்படையில் கடிகாரத்தின் வகைகள் :

1. ஒப்புமைவகைக் கடிகாரங்கள்.

2. எண்ணிலக்க வகைக் கடிகாரங்கள்.

32. மின்னனு அலைவுகள் மூலம் இயங்கும் கடிகாரங்கள் - குவார்ட்ஸ் கடிகாரங்கள்.

33. படிகத்தின் அழுத்த மின்பண்பு என்ற தத்துவம் எந்த கடிகாரங்களில் பயன்படுகிறது- குவார்ட்ஸ் கடிகாரங்கள்.

34. அமெரிக்கா தேசிய தரநிர்ணய கழகத்தால் முதன் முதலில் அணுகடிகாரம் உருவாக்கப்பட்டது.

35. முதன் முதலில் அணுகடிகாரம் உருவாக்கப்பட்ட ஆண்டு-1949.

36. எந்த அணுவை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் துல்லியமான அணுக்கடிகாரம் உருவாக்கப்பட்டது - சீசியம் -133.

37. சீசியம் -133 அணுக்கடிகாரம் யாரால் உருவாக்கப்பட்டது:

1. லூயிஸ் ஈசான்

2. ஜாக் பென்னி

38. சீசியம் -133 அணுவை பயன்படுத்தி துல்லியமான அணுக்கடிகாரம் உருவாக்கப்பட்ட ஆண்டு -1955. இடம் – இங்கிலாந்து - தேசிய இயற்பியல் ஆய்வகம்.

39. இராயல் வானியல் ஆய்வுமையம்ம் அமைந்துள்ள இடம் - இங்கிலாந்து-லண்டன்-கிரீன்விச்.

40. புவியானது, 15° இடைவெளியில் அமைந்த தீர்க்கக் கோடுகளின் அடிப்படையில் எத்தனை மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது- 24 மண்டலங்கள்.

41. எந்த இடத்தின் வழியாகச் செல்லும் தீர்க்கக் கோட்டை ஆதாரமாகக் கொண்டு இந்திய திட்ட நேரம் கணக்கிடப்படுகிறது - உத்திரப்பிரதேசம் – மிர்சாபூர். 82.5°கிழக்கில் செல்லும் தீர்க்கக்கோட்டில் அமைந்துள்ளது.

42. அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறையில் மேற்கொள்ளப்படும் அளவீடுகளின் மதிப்புகளில் சில நிலையற்ற தன்மை காணப் படுவது – பிழைகள்.

43. சோதனை மூலம் கண்டறியப்பட்ட மதிப்புக்கும் உண்மையான மதிப்புக்கும் இடையே உள்ள வேறுபாடு – பிழை.

44. கண்டறியப்பட்ட மதிப்பானது உண்மையான மதிப்பிற்கு எவ்வளவு நெருக்கமாக அமைந்துள்ளது என்பதைக் குறிப்பது – துல்லியத்தன்மை.

45. ஆங்கிலேய அளவீட்டு முறை – FPS.

46. மின்னோட்டம் என்பது - அடிப்படை அளவாகும்.

47. பொருளின் அளவு என்பது - அணுக்களின் எண்ணிக்கைக்கு நேர்த்தகவில் இருக்கும்.

48. ஒளிச்செறிவு என்பது- கண்ணுறு ஒளி யின் ஒளிச்செறிவாகும்.

49. அடிப்படை அளவுகள் தவிர்த்த பிற அளவுகள் - வழி அளவுகள்.

50. ஒரு மோல் என்பது - 6.023 x அணுக்கள் (அ) மூலக்கூறுகளைக் கொண்டுள்ளது

51. குவார்ட்ஸ் கடிகாரங்கள் - மின்னனு அலைவுகளைப் பயன்படுத்திச் செயல்படுகின்றன

52. அளவீடுகளின் நிலையற்றத் தன்மை – பிழைகள் என அழைக்கப்படுகிறது

53. அளவிடப்பட்ட மதிப்புகளின் நெருங்கியத் தன்மையே – தோராயமாதல்.

54. இரண்டு , நேர்க்கோடுகளின் குறுக்கீட்டினால் உருவாகிறது – தளக்கோணம்.

55. பொருத்துக:

1. வெப்பநிலை - குளிர்ச்சி மற்றும் வெப்பத்தின் அளவு.

2. தளக்கோணம் - இரண்டு தளங்களின் குறுக்கீட்டினால் ஏற்படும் கோணம்.

3. திண்மக் கோணம் - மூன்று (அ) அதற்கு மேற்பட்ட தளங்களின் குறுக்கீட்டினால் ஏற்படும் கோணம்.

4. துல்லித் தன்மை - உண்மையான மதிப்பின் நெருங்கிய அளவு.

5. நுட்பம் - இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட அளவீடுகளின் நெருங்கியத் தன்மை.





No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: